ஜூலை 01, 2024 • Makkal Adhikaram

ஆன்மீக கருத்துக்களை ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் பேசும்போது சாமியார்கள் கூட அந்த கருத்துக்களை பேசியிருக்க மாட்டார்கள். இவரை ஒரு சாமியாருடைய பிறந்தநாள் விழாவில் அவருடைய பேச்சைக் கேட்டபோது, ஒரு நீதிபதியா? இந்த அளவுக்கு ஆன்மீகத்தைப் பற்றி பேசுகிறார் என்று மனதார ஆச்சரியப்பட்டேன்.
ஏனென்றால், அவர்கள் சட்ட புத்தகமும், நீதிமன்ற பிரச்சனைகளும், வழக்குகளும், சமூக சிந்தனைகளும் இதற்குள்ளே போராடிக் கொண்டிருப்பவர்கள் . இது யாரோ ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட மகான் சீரடி பாபாவின் அனுக்கிரகம் பூர்வ ஜென்ம தொடர்பால் ஏற்படுகிறது.
அது ஐயாவின் வாழ்க்கையில், அவருடைய அற்புதங்கள் அதை அனுபவித்து உணர்ந்து இருக்கிறார். கனவிலும், நிஜத்திலும் பாபாவின் அற்புதங்கள் என்ன? என்று அவருக்கு உணர்த்திருப்பதால், அவருடைய வாயிலிருந்து வரக்கூடிய சொற்கள் அவை நன்கு வெளிப்படுத்துகிறது.
இத்தகைய பாபாவின் அருளை பெறுவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒரு மகனின் அருள் கிடைத்தால், பிறவி பயனை அடைய முடியும் . அவர்கள் இந்த உலக வாழ்க்கையின் கர்ம பயனை முடித்து, எதுவுமே தேவையில்லை என்ற நிலைக்கு கொண்டு சென்று விடுவார்கள். அதுதான் மகான்களின் அற்புதம் .