கட்ச தீவுக்கு தனி தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரால் கட்ச தீவை மீட்க முடியுமா ? – தமிழக மக்கள் கேள்வி?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பயணங்கள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

திமுக ஆட்சியில், கருணாநிதி கட்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது,தமிழக மக்களுக்கு தெரிந்த ஒன்று.

இப்போது ஸ்டாலின் கட்ச தீவை மீட்க சட்டமன்றத்தில் தனி தீர்மானம் போடுகிறார். அந்த அளவுக்கு தமிழக மக்கள் கேவலமாகவும், இளிச்சவாயன்களாக தெரிகிறார்களா? குருட்டு அதிர்ஷ்டம் அடித்து போய் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக வந்து விடுகிறார்கள். தெரியவில்லை என்றாலும், யாரையாவது கேட்டு ஒழுங்காக செய்ய வேண்டும்.

நீங்கள் தனி தீர்மானம் போட்டு கச்சத்தீவு மீட்டு விடுவீர்களா? அந்த அதிகாரம் உங்களிடம் உள்ளதா? அன்று கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது இந்திரா காந்தி இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தார். இப்போது இந்த தீர்மானத்தைப் பார்த்து மக்கள் ஆறுதல் அடைய வா? அல்லது மக்களுக்கு எதுவும் அரசியல் தெரியாது.ஊடகங்கள் இதைப்பற்றி எதுவும் கேட்கப் போவதில்லை. எழுதப் போவதில்லை.

அதனால், இவர்களெல்லாம் கட்ச தீவுக்கும் தீர்மானம் போடுவார்கள். செய்ய முடியாததை எல்லாம் செய்யப் போகிறோம் என்று தீர்மானம் போட்டு விடுவார்கள். ஏனென்றால், அது சுலபமான வேலை. அதையும் கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் உண்மை என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு எழுதுவதும்,காட்டுவதும் எப்படி சுலபமான வேலையோ,அதே போல் ஸ்டாலினுக்கும் தீர்மானம் போடுவது மிக சுலபமான வேலை. செய்வது தான் கஷ்டமான வேலை. அது திமுகவிடம் கிடையாது. எதை போட வேண்டும்? எதை போடக்கூடாது?அதைக் கூட முதல்வர் ஸ்டாலினுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சொல்லவில்லையா?

மேலும், சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தீர்மானம் குறித்து பேச அனுமதிக்கவில்லை. ஒரு எதிர்க்கட்சியை தலைவரே இந்த தீர்மானத்தை பற்றி பேசவும்,விவாதிக்கவும்,அனுமதி இல்லை என்று சட்டமன்றத்திலே திமுக தெரிவித்துவிட்டது.

மக்கள் நலனை பற்றி பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு தகுதி இல்லையா?அல்லது அனுமதி இல்லையா? நாட்டு மக்களுக்கு நன்றாக தெரிகிறது.இந்த தீர்மானம் மக்களை ஏமாற்றும் தீர்மானம் என்று அதனால் தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை திமுக பேச சட்டமன்றத்தில் அனுமதிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *