அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram

நாமக்கல்: பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் தேங்கிய மழை நீரில் தனியார் கல்லூரி பேருந்து சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் சிக்கிக் கொண்டன. பேருந்தின் டயர் மூழ்கும் அளவிற்கு சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி இருந்தது.
இதனால் பேருந்துக்குள் இருந்த சுமார் 40 மாணவர்கள் வெளியே வரமுடியாமல் சுமார் அரை மணி நேரம் சிக்கித்தவித்துள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் உதவியுடன் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை அகற்றும் மோட்டார் கடந்த சில நாட்களாக சரியாக செயல்படாததால் மழைநீர் தேங்குவதாக கூறப்படுகிறது.