கரூர் மாநாட்டு உயிர் இழப்பில், ஈடுபட்டுள்ள,மத்திய, மாநில அரசின் அதிகார போட்டி விசாரணையில், ஜெயிக்கப் போவது யார் ? உண்மை வெளிவருமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

அரசியல் கட்சிகளின் ஆளுக்கொரு கருத்து பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்து. எது உண்மை?

கரூரில் விஜய் மாநாட்டில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு பற்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதில் விஜய் செய்த தவறு என்ன? விஜயின் தவறு காலதாமதமாக வந்ததுதான் அவர் செய்த தவறு. வேறு ஒன்றும் விஜய் தவறு செய்யவில்லை.

காலதாமதம் என்பது ஒரு சாதாரணமானது தான். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உடல் நோய் அல்லது வேறு சில உபாதைகள் வேறு, சில பிரச்சனைகள் ஏதோ ஒரு காரணங்கள் இருக்கலாம் .அதனால் அவருக்கு காலதாமதம் ஏற்பட்டு இருக்கலாம்.

ஆனால், அதை வைத்து அரசியல் கட்சிகள் முதல்,யூட்யூபர்கள் ,பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வரை அரசியலாக்கி பேசுகிறார்கள். ஆனால் ,மனசாட்சி படி அது தவறானது இல்லை.

அடுத்தது 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் .அதற்கு விஜய் தான் பொறுப்பு என்று சில அரசியல் கட்சிகள் கூறி வருகிறது. சில பத்திரிகையாளர்களும் கூறி வருகிறார்கள். சோசியல் மீடியாக்கள் விமர்சிக்கின்றன. இங்கே மனசாட்சி படி பார்த்தால் விஜய் தவறு செய்யவில்லை.

ஆனால், சட்டப்படி பார்த்தால், தவறு என்று தான் சொல்வார்கள். ஏனென்றால், கூட்டத்திற்கு விஜயை நம்பி வந்தவர்கள், 41 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள்.அதனால், அவர் தான் அதற்கு பொறுப்பு என்று ஒரு வரியில் சொல்லிவிடுவார்கள்.

அடுத்தது வருவோம், இங்கே ஆளும் கட்சியான திமுக மற்றும் காவல்துறை, நாங்கள் எல்லாம் முறையாக செய்து விட்டோம் என்று தெரிவிக்கிறார்கள்.

சரி அவர்கள் பத்தாயிரம் பேர் கேட்டார்கள் .30 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள். இது எல்லாம் சரி, எப்படி இருந்தாலும் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய ஸ்டாலின் இதற்குள் அவரும் வருகிறார். எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் ,அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுப்பது காவல்துறையின் கடமை. மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது முதல்வரின் கடமை.

அந்தக் கடமையில் என்ன தவறுகள்? எப்படி நடந்திருக்கிறது! அதுதான் இங்கு ஆய்வு செய்ய வேண்டிய உண்மை .இந்த உண்மை வெளிவராத பட்சத்தில், வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்.

இந்த உண்மையை யார்? வெளியில் கொண்டு வருவார்கள்? காவல்துறை இவர்கள் கையில் உள்ளது. இவர்கள் என்ன சொல்கிறார்களோ,அதை தான் காவல்துறை செய்வார்கள். காவல்துறையின் அதிகாரம் இப்படி இருக்கிறது என்றால், தன்னிச்சையாக செயல்பட முடியாத அளவுக்கு அவர்களுடைய அதிகாரம் இருக்கிறது.

அதனால், ஆட்சியராளர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை தான் அவர்கள் செய்வார்கள். இதில் எப்படி உண்மை வெளிவரும்? ஒருவேளை மத்திய அரசின் உளவுத்துறை இதையெல்லாம் ஆய்வு செய்து, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினை கேட்டுள்ள கேள்விக்கு என்ன விளக்கம் ? அதற்கு என்ன பதில் கொடுக்கிறார்கள்? மேலும்,

மத்திய அரசின் உளவுத்துறை ரிப்போர்ட் ,இது எல்லாம் வந்த பிறகு தான் , உண்மை என்ன? என்பது நூறு சதவீதம் வெளிவரும்.

அதுவரையில், இந்த பிரச்சனை பற்றி ஆளுக்கு ஒரு கருத்து சொல்லி அரசியல் செய்து கொண்டு தான் இருப்பார்கள். நாட்டில் கருத்துக்கு பஞ்சம் இல்லை. ஆனால், உண்மைதான் பஞ்சம். விஜய் வேண்டுமென்று செய்த தவறு இல்லை. இந்தத் தவறு எப்படி நடந்தது?என்பது தான், மக்கள் மத்தியில் எல்லோருக்கும்மே ஒரு ஆச்சரியமான பேசுபொருள் ஆகியுள்ளது. இதில் அரசியல் சூழ்ச்சி ஏதாவது இருக்கிறதா? என்பதுதான் உண்மையை கண்டறிய வேண்டிய சோதனையில், இப் பிரச்சனை இருந்து வருகிறது.

இதற்கு மத்திய அரசு ஆதாரங்களை திரட்டி வருகிறது என்பதுதான் ரகசிய தகவல். இது ஒருபுறம் எப்படி இருக்க ,மாநில அரசு, தமிழக வெற்றி கழக நிர்வாகிகளையும், விஜயையும் எப்படியாவது சட்டத்தின் பிடியில் அவர்களை உள்ளே தள்ளுவதற்கு சட்ட ஆலோசனைகள் போய்க்கொண்டிருக்கிறது .அதற்காக பல வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் வழக்குகளையும் தொடுக்குகிறார்கள்.

இங்கே அரசியல் என்பது மனசாட்சிப்படி இருந்தால் ,பரவாயில்லை‌ .மனசாட்சி படி பேசுகிறேன் என்று சொல்லி மனசாட்சிக்கு எதிராக செயல்படுவது தான் ,இப்போது அரசியலாக மாறி விட்டது.

அதனால், திமுக அரசு விஜய் எப்படியாவது முடக்குவதற்கு தான் வேலையை பார்க்கிறது. மத்திய அரசு அதை உடைத்து ,விஜயை காப்பாற்ற என்ன வழி ?என்று பார்க்கிறது. மேலும், இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு உள்ளே வருவதை தாங்க முடியாத வைக்கோவுக்கு, சிபிஐ மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கிறார்.

இவங்களுக்கு எல்லாம், நீங்கள் சொல்லுகின்ற சட்டத்தை எழுதுகின்ற காவல்துறை தான் பிடிக்குமோ, அதுவும் ,அதிகாரம் கையில் இருக்கும் வரை! மாறினால் அதே காவல்துறை உங்கள் மீது திரும்பி விடும். இப்படிப்பட்ட

இந்தப் போட்டியில், மாநில அரசின் அதிகாரம் ஜெயிக்கப் போகிறதா ? அல்லது மத்திய அரசின் அதிகாரம் ஜெயிக்கப் போகிறதா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *