கார்ப்பரேட் கம்பெனி நிறுவனங்கள் சமூக நலன் பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் ,கொடுப்பதை குறைத்து மதிப்பிடுவது ஏன்? -மக்கள் அதிகாரம் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் மக்களுக்காக போராடும் பத்திரிகைகள்! சமூக நலன் பத்திரிகைகள் தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கார்ப்பரேட் கம்பெனிகள், கார்ப்பரேட் வியாபார நிறுவனங்கள், மற்றும் நடுத்தர கம்பெனி மற்றும் வியாபார நிறுவனங்கள் உங்களுடைய வருமான வரி விதிப்பில் தான், இந்த சமூக பணியாற்ற போகிறீர்கள்.

இதில் வியாபார பத்திரிக்கை நிறுவனங்கள், நாட்டு மக்களுக்கு உண்மைகள் 25%, பொய்கள் 75% கொண்டு போய் சேர்க்கிறது. மொட்டையாக அரசியல்வாதிகள் பேசுவதை போட்டு விட்டு போவார்கள். அதில் ,மக்களுக்கு எது உண்மை? எது பொய் ?என்பது தெரியாது. இப்படி தினசரி இந்த பத்திரிகைகள் யாருக்கு ஆதரவாக இருக்கிறது? என்றால், ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக, இவர்களின் வியாபார சுயநலத்திற்காக, இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது.

இந்த உண்மையை தெரிந்து கொள்வதற்கு எனக்கு 30 ஆண்டு காலம் ஆனது. சாதாரண பாமர மக்கள், இந்த பத்திரிக்கையில் செய்தியாளர்களாக இருக்கக்கூடியவர்களுக்கு ஐந்து சதவீதம் பேருக்கு இந்த உண்மைகள் தெரியுமா? என்பது தெரியவில்லை. மேலும்,நாட்டுக்காக, நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக , நாட்டில் ஊழலை எதிர்த்து போராடும் பத்திரிகைகள் ,சமூக நலன் பத்திரிகைகள். அதுவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கக்கூடிய பத்திரிகைகள்தான், தமிழ்நாட்டிலிருந்து வருகிறது.

இதை மத்திய ,மாநில அரசாங்கமும், இதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இல்லை என்பது இந்த சமூகத்திற்கு எதிரான ஒன்று. ஏனென்றால், மக்களின் வரிபணம், குறிப்பிட்ட பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே என்று மத்திய, மாநில அரசு பட்டா போட்டு விட்டார்கள். இது தவறானது. பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது.

ஏதோ கொஞ்சம் பேர் இந்த பத்திரிக்கை துறையில் போராடி, இந்த சமூக நலனுக்காக பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விரல் விட்டு தான் எண்ண முடியும். மீதி எல்லாம் இந்த அரசியல் கட்சிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு, பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கை என்பதே எதற்கு என்று கூட தெரியாமல் இன்றைய அரசியல் கட்சியினர் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய சுயநலத்திற்காக பத்திரிக்கையா? அல்லது மக்களின் பொதுநலத்திற்காக பத்திரிகையா? இதை தீர்மானிக்க வேண்டிய மத்திய மாநில அரசின் செய்தி துறை இன்று வரை மக்கள் அதிகாரத்தின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது.

இதைக் கேட்பவர்கள் தமிழ்நாட்டில் ஒருத்தராக இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம். குறைந்தபட்சம் இந்த செய்தியாவது காப்பியடித்து ஒரு பத்து பேர் போட்டோ கூட நான் மிகவும் சந்தோஷப்படுவேன். எத்தனையோ செய்திகள் இதிலிருந்து காப்பி எடுத்து போடுகிறார்கள் .அப்படி ஒரு சிலர் போட்டாலும், இதை காப்பி அடித்து அப்படியே போட்டு விடாதீர்கள். ஏனென்றால், நான் உன்னை பார்த்து காப்பி அடித்தது போல், ஒரு சிலர் படிக்கும்போது அங்கே குழப்பம் வரும் .அதனால் மாற்றி போடுங்கள்.

மேலும், நேற்று கூட ,மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் இது பற்றி விவாதித்தேன். அதற்கு அவர்களால் சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை. எல்லாம் டெல்லி உயர் அதிகாரிகளை தான் கை காட்டுகிறார்கள். ஆனால், சில நல்ல விஷயத்தை துணை இயக்குனர் செய்துள்ளார். அதாவது நான் இங்கிருந்து ஆர்டிஐக்கு தமிழில் அனுப்பப்பட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார்.

மேலும், இதற்காக போராடுகின்ற மக்கள் அதிகாரம் இது வாங்கிய பின், எத்தனை பேர் அதை வாங்க போட்டி போடுவார்கள் என்பதை என்னால் இப்போது அதை யூகித்துக் கூட சொல்ல முடியாது. இயக்குனரைப் பார்த்து அவருக்கு ஒரு சால்வை, செய்தித்துறை மந்திரி ஐ பார்த்து அவருக்கு ஒரு சால்வை, இப்படி சால்வையை போர்த்தி,அந்த போட்டோவை தாங்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் என்று வாட்ஸ் அப்பில் போட்டு, அரசு அடையாள அட்டைக்கு கெஞ்சிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, இந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களை வாங்க முடியாது.

அது தகுதியின் அடிப்படையில், திறமையின் அடிப்படையில், கொடுக்கப்பட வேண்டிய பத்திரிக்கையாளர்களின் தகுதி. அதை தான் நேற்று கூட செய்தித்துறையில் ஒருவரிடம் பேசினேன். என்னுடைய பத்திரிகைக்கும், என்னுடைய தகுதிக்கும், அடையாளம் தான் பத்திரிகையாளன் என்ற அரசின் அடையாள அட்டை இருக்க வேண்டும். ஆனால், இவர்கள் கட்சிக்காரனுக்காக, கட்சிக்காக, ஆட்சிக்காகm ஜால்ராவாக இருக்கக்கூடிய செய்தியாளர்கள் எல்லாம் தகுதியானவர்கள் என்று செய்தித்துறை அரசு அடையாள அட்டை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இங்கே திமுக கரை வேஷ்டி கட்டாத செய்தியாளர்கள் எல்லாம் செய்தியாளர்களா? அல்லது இந்த சமூக நலனுக்கும், ஊழலுக்கும் எதிராக போராடக் கூடியவர்கள் செய்தியாளர்களா? அல்லது பத்திரிகையாளர்களா? யார் பத்திரிக்கையாளர்கள்? போலிகள் ஒரு பக்கம், தகுதியற்ற ஒரு கூட்டம் ஒரு பக்கம், RNI இருந்தால் பத்திரிகை என்று பேசிக் கொண்டிருக்கும் கூட்டம்,லட்சத்தி 15000 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களும் பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு திரிவதாக தகவல் ஒரு பக்கம், இதற்கெல்லாம் வரையறுக்கப்பட்ட தகுதிகள் என்ன?

நேற்று மத்திய அரசில் சொன்னது போல்,கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்களைப் பற்றி பேசிய போது, அது பத்திரிகையோட பிசினஸ் என்றார்கள். நான் ஒரே வார்த்தை கேட்டேன். வியாபார பத்திரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற மத்திய, மாநில அரசின் செய்தித்துறை ஏன்?

சமூக நலன் ,மற்றும் ஊழலுக்கு எதிராக போராடக்கூடிய பத்திரிகைகளுக்கு கொடுக்கவில்லை ? தமிழ்நாட்டில் இந்த உண்மை எல்லாம் செய்தி துறையில் பணியாற்றக்கூடிய ஒரு நாலு பி.ஆர்.ஓ களுக்கு இந்த உண்மைகள் தெரியுமா ?தெரியாதா ?என்பது தெரியவில்லை. விரைவில் இதற்கான சட்டப் போராட்டங்கள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *