அக்டோபர் 15, 2024 • Makkal Adhikaram
இன்று ஒரு சில கடைகளைத் தவிர, மற்ற கடைகளில் தங்கத்தின் தரம், விலையில் மோசடி, இது எல்லாம் நகை கடைகளில் தற்போது ஏமாற்றும் வியாபாரமாக இருந்து வருகிறது .
இது பெரும்பாலான மக்களுக்கு இந்த நகையின் வியாபார மோசடி தெரியாது. அவர்கள் சேட் சொல்றாரு ! ஒரு நம்பிக்கையில் வாங்கிக் கொள்கிறார்கள். அதே நம்பிக்கை வைத்த மக்களை ஏமாற்றுபவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால், மக்கள் விழித்துக் கொள்வது அவசியம் .அதுவும் கிராமப்புறங்களில் இந்த மோசடி வியாபாரம் அதிகப்படியாக நடக்கிறது. இது பற்றி, அரசு ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகள் மூலம் அவசியம் நடவடிக்கை எடுப்பது தேவை.
ஏனென்றால், எந்த ஒரு நகைக்கடையிலும் இன்னைக்கு ஆன்லைன் ரேட் எவ்வளவு? 24 கேரட் தங்கம் நகை எவ்வளவு? 22 கிராம் தங்க நகை எவ்வளவு? 18 கிராம் தங்க நகை எவ்வளவு? என்பதை தினமும், ஒவ்வொரு நகைக்கடையிலும் அதை வெளியில் ஒரு பலகையாக வைக்க வேண்டும் . வைக்காதவர்களை அரசு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொருவருடைய நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் என்று ஏமாற்றுகிறார்கள் .இந்த செய் கூலி, சேதாரம் எத்தனை சதவீதம்? அதனுடைய ரேட் எவ்வளவு? இது ஒட்டுமொத்தமாக எல்லா கடைகளிலும், ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.இங்கே 3% சொல்லுவார்கள். ஒரு கடையில் எட்டு பர்சன்ட் சொல்கிறார்கள். இப்படி கடைக்கு, கடை இந்த பர்சன்டேஜ், செய் கூலி, சேதாரம் வித்தியாசப்படுகிறது .
மேலும், தீபாவளி நெருங்கும் நேரத்தில், மக்கள் சேர்த்து வைத்த பணத்தை நகை கடைகளிலும், துணிக்கடைகளிலும் கொடுத்து ஏமாறக்கூடாது.அதனால், அரசாங்கம் இதைப் பற்றி கண்டு கொள்ளுமா? என்பது தெரியாது. ஆனால், மக்களாவது இது ஒரு மிகப்பெரிய ஏமாற்று மோசடி வியாபாரம் .அதனால் உஷாராக இருப்பது மிகவும் நல்லது .அது மட்டுமல்ல, பழைய தங்க நகைகளை கொண்டு போய் கொடுத்தீர்கள் ஆனால், இன்றைய ஆன்லைன் விலையில் பாதி ரேட்டுக்கு தான் பெரும்பாலான கடைகளில் எடுப்பார்கள் . ஆனால் விளம்பரம் மட்டும் பழைய நகைகளை ஆண்லைன் ரேட்டுக்கு எடுத்துக் கொள்கிறோம் . என்ற விளம்பரம் தான் செய்வார்கள்.கிப்ட் கொடுத்து ஏமாற்றுவார்கள்.
கிட்ட போனால், பல கடைகளில் அதை உருக்கி, அதில் பாதியாக்கி அந்தப் பாதியில் விலையை போடுவார்கள். அது கூட அவர்களிடம் வாங்குகின்ற தங்கம் ,அப்போது தங்கமாக இருக்கும். அதே தங்கம் நீங்கள் நான்காய்ந்து வருடம் கழித்து வந்து கொடுத்தீர்கள் ஆனால், அதில் பாதியை உருக்கி எடுத்து கழித்துவிட்டு, பிறகு எத்தனை கிராம்? என்று கணக்கு போடுவார்கள். அதனால், நம் மக்கள் இந்த நகை வியாபாரத்தில் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நகை கடைக்காரர்கள் ரொம்பவும் நாணயமானவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று தான் நகை கடைக்கு செல்கிறார்கள்.
ஆனால், அங்கே நகை விற்பனையில் எவ்வளவோ, தில்லுமுல்லுகள், எவ்வளவோ மோசடிகள், தொடர்ந்து நடைபெறுகிறது. அதனால், ஒவ்வொரு நகை கடையிலும், தங்கத்தின் விலை இன்றைய ஆன்லைன் ரேட் எவ்வளவு? என்பதை பெயர் பலகையில் எழுதி வைக்க வேண்டும் . தவிர 24 கேரட் தங்கம் இன்றைய ஆன்லைன் ரேட் எவ்வளவு ?22 காரட் தங்கம் இன்றைய ஆன்லைன் ரேட் எவ்வளவு? 18 காரட் தங்கம் இன்றைய ஆன்லைன் ரேட் எவ்வளவு? என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மக்கள் அப்படி எழுதினால் அந்த கடைகளில் நகை வாங்குங்கள். இல்லையென்றால் வாங்காமல் எல்லா விவரங்களையும் கேட்டு, எமக்கு தகவல் அளியுங்கள். எந்த கடை ?என்ன விபரம்? என்பதை தகவல் அளிக்கலாம். தகவலுக்கு : 9344794091 .