கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் .

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram

சிறுமி பாலியல் வன்கொடுமை: வேறு மாவட்டங்களுக்கும் விரிவடையும் விசாரணை- மாவட்ட ஆட்சியர் சரயு .

 கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை கைது செய்துள்ளோம். என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளனர்.மேலும்,

விசாரணையில் என்சிசிக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. புகார் கிடைக்கப் பெற்றதும் 4 தனிப்படைகள் அமைத்து முக்கிய குற்றவாளி உள்பட 11 பேரை கைது செய்துள்ளோம்.தவிர,

கல்வித்துறை மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், மறைக்க முயற்சி செய்த அனைவரையும் போக்சோவில் கைது செய்துள்ளோம்.வேறு எந்த பள்ளிகளில் எல்லாம் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என்றும், இதுபோன்ற முகாம்கள் வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளதா? எனவும் விரிவான விசாரணையை கல்வித்துறை தொடங்கியுள்ளது.மேலும்,

பள்ளி மாணவர்களை வைத்து முகாம் நடத்தும்போது அதற்கான விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை.என்சிசி மூலமாக இந்த முகார் நடத்தப்படவில்லை, இதுகுறித்து என்ிசி விளக்கம் அளித்துள்ளது. என்சிசியிடம் எந்தவித அனுமதி கடிதமும் பெறாமல் இந்த முகாம் நடத்தியுள்ளனர் .மேலும்,

5 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளிடமும் பேசிஉள்ளோம். மாணவிகள் அனைவருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *