சட்டத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் நீதிமன்றத்தை கண்டு அஞ்ச மாட்டோம் அப்போ எதை கண்டு அஞ்சிவீர்கள் ? – பொதுமக்கள் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நீதிமன்றம் சென்றாலும், திமுக அமைச்சர்கள் எந்த தவறையும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோமே தவிர, நீதிமன்றத்தை கண்டு அஞ்ச மாட்டோம் .

மேலும், திமுக மீது பழி சுமத்த இபிஎஸ்-க்கு உரிமை இல்லை என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . இப்படி நாங்கள் எப்படிப்பட்ட ஊழல் செய்தாலும் உத்தமர்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவிக்கிறார?

மேலும், நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளுங்க கட்சி செய்கின்ற ஊழலை மக்களிடம் கொண்டு சேர்க்க பார்ப்பார்களே தவிர, இவர்களுடைய ஊழல்களை மறைத்து மக்களிடம் இவர்களுக்கு நற்சான்று வாங்கி தர மாட்டார்கள் . இவர்களே எதிர்கட்சியாக இருந்தாலும் ,அதை தான் செய்வார்கள்.

அதை தான் அதிமுக எடப்பாடி ஆட்சியில் திமுக எடப்பாட்டியின் ஊழல்களை வெளிப்படுத்தியது . இப்போது தமிழகத்தில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் 2026 தேர்தலுக்கு முன்பே இப்போதே வாலை உருவி உள்ளது .

சட்டப் போராட்டமும் நடத்துவார்கள். இங்கே ஊழலைப் பற்றி எதிர்க்கட்சிகள் பேசும் போது, ஒரு சட்டத்துறை அமைச்சர் நீதிமன்றத்தை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் அங்கேயும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றால்! நீதிபதிகள் நீங்கள் வைத்த ஆளா ? இது பொது மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *