சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால்! அரசியல் கட்சிகளில் உட்கட்சி பூசல் , அதிமுக, பிஜேபியில்! அதிகரித்துள்ளதா ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் ,ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் இன்று உட் கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அதிலும், பெரிய கட்சிகள் ஆன அதிமுக திமுக பிஜேபி பாமக போன்ற பல கட்சிகளில் இன்று உக்கட்சி பூசல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த கட்சி பூசலை மேலிடம் எப்படி சமாளிக்கப் போகிறது? என்பதுதான் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கக்கூடிய ஹாட் டாபிக். மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு விதமான கொள்கை, செயல்பாடுகள் கொண்டது.

தற்போது அதிக அளவில் இருப்பது அதிமுகவில் உட்கட்சி பூசல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் ஆன சசிகலா, ஓ பன்னீர்செல்வம், டிடிவி, இவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டார்கள்.

இப்போது செங்கோடையனும் ஓரம் கட்ட எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். அதிமுகவைப் பொருத்த அளவில், தன்னுடைய ஒரே ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமி யின் நோக்கமாக இருக்கிறது.

இங்கே எடப்பாடி பழனிசாமி இந்த கட்சியின் நிறுவனராக இருந்தால் எல்லோரும் கேட்பார்கள். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி எப்படி இருந்தார்? இன்று எப்படி இருக்கிறார் ?என்பது அவருக்கு மேலே இருந்தவர்களுக்கு நன்கு தெரியும் .

அதிமுகவில் அவர் கீழே இருந்து, உயரத்துக்கு வந்து விட்டார். உயரத்துக்கு ஏற்றி விட்ட சசிகலாவியே எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டார். அதுதான் எடப்பாடி பழனிசாமி. இன்று ஏறிவிட்ட பழனிசாமி யாரும் தன் பக்கத்தில் இருக்கக் கூடாது என்பது அவருடைய அரசியல் .மேலும்,

அதிமுக பொருத்தளவில் எம்ஜிஆர் ஆரம்பித்த போதும், ஜெயலலிதா இருந்த போதும், ஒன்றிய செயலாளர்கள் முதல் கிளை செயலாளர் வரை எம் எல் ஏ ,எம் பி, சீட்டுக்கு பணம் கட்டி வந்துள்ளனர். அந்த நிலை எடப்பாடி பழனிசாமி மாற்றி விட்டார். மேலும்,

செங்கோடையனை தான் முதலமைச்சராக நியமிக்க சசிகலா அழைத்து பேசினார். இது அதிமுக வட்டாரத்திற்கு நன்கு தெரியும். செங்கோட்டையன் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று சொன்ன போது தான் எடப்பாடி பழனிசாமி நான் கொடுக்கிறேன் என்று இரண்டே நாளில் ஒவ்வொரு எம்.எல்.ஏ களுக்கும் ,பணத்தை கொடுத்து கூவத்தூரில் சசிக்கலா முன்னிலையில் முதலமைச்சர் ஆகிவிட்டார்.மேலும்,

கட்சியை அரவணைத்து அதை பலத்துடன் செயல்படுத்தி செல்ல பயப்படுகிறார். ஏனென்றால், தனக்கு ஈக்குவலான ஆட்கள் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் பழனிசாமியின் அரசியல். இவர் ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டாரா? என்பதுதான் இப்போது அதிமுக கட்சியில் உள்ள உட்கட்சி பூசல், அதிகரித்துள்ளது.தவிர ,இவரை ஓரம் கட்டினால் அதிமுகவுக்கு பலவீனம் தான்.

ஏனென்றால் ,அந்த காலத்தில் அதிமுகவில் இவர்கள் எல்லாம் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள். இது நாளுக்கு நாள் இப்படியே எடப்பாடி பழனிசாமியின் அரசியல் போனால், அதிமுகவின் பலவீனம் மேலும் ,அதிகரிக்கும்.தற்போது,

பிஜேபியின் உட்கட்சி பூசல் தமிழ் நாட்டில் ,மேலிடம் அதை சரி செய்து விடும். இங்கே அண்ணாமலை மைக்கு முன் அரசியல் செய்பவர். களத்தில் நின்று அரசியல் செய்பவர் அல்ல.

அவருக்கு என்ன தெரியுமோ ,அதுதான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருப்பவர். அதனால் தான், அண்ணாமலைக்கு வந்த கூட்டம் அது வாக்கு வங்கியாக மாறவில்லை.

கூட்டம் வருவது வேறு, தேர்தல் களத்தில் அது வாக்காக மாறுவது வேறு. இது இரண்டுக்கும் அரசியல் வித்தியாசம் அண்ணாமலைக்கு தெரியாது.

அண்ணாமலை தன் பேச்சிலே எல்லாமே அரசியல் என்று நினைத்துக் கொண்டிருப்பவர். அது youtuber வேலை.

களத்தில் எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும்? என்று நாயனார் நாகேந்திரன் செயல்படுவார். ஏனென்றால் ,அரசியல் என்பது அடிப்படை Basic குடும்பத்திலிருந்து வந்தவர் . அது மட்டுமல்ல,

இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து ,ஜெயலலிதா காலத்திலிருந்து அரசியலில் நன்கு அறிமுகமானவர். ஒரு அனுபவம் மிக்க அரசியல் களத்தில் நின்று போராடக்கூடிய தகுதியை பெற்றிருப்பவர் நைனார் நாகேந்திரன்.

அந்தத் திறமை பிஜேபியில் இதுவரை வந்த ஒரு மாநில தலைவருக்கு கூட அது இல்லை. மேலும்,அதுதான் தமிழ்நாட்டில் பிஜேபியின் வளர்ச்சிக்கு முக்கிய மைனஸ். இதை மேலிடம் உற்று கவனிக்க வேண்டும். இவர்களுடைய சொந்த அரசியலை மட்டும் தான் பிஜேபியில் இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் பணி கட்சி பணி எதுவுமே இல்லை.

அது எந்த கட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிதான் மக்களிடம் வாக்குகளை வாங்க முடியும். அதை இப்போது வந்த நாயனார் நாகேந்திரன் அந்த அரசியலை கையில் எடுத்து செயல்படுத்தி வரும் போது இவர்களுடைய ஒத்துழைப்பு வேறு மாதிரியாகத்தான் இருக்கிறதாம்.

அதாவது ஆளாளுக்கு போட்டி அரசியல் ,அந்த போட்டி அரசியல் மக்களிடம் நடத்தவில்லை .வாக்குகளை சேகரிக்க நடத்தவில்லை. மக்கள் பணியில் நடத்தவில்லை .அதுதான் இவர்களுடைய அரசியல். அதனால் அண்ணாமலையின் கார்ப்பரேட் தொலைக்காட்சியின் மைக் அரசியல், எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்காது.

களத்தில் பணியாற்றக்கூடிய நிர்வாகிகள் இருந்தால் மட்டும்தான் பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியும் .அதற்கு தகுதியானவர்கள் தேவை. வாயிலே பேசி விட்டு போவதற்கு என்னால் கூட முடியும் . அதனால் அரசியல் என்பது களத்தில் நின்று ஜெயிக்க கூடியவர்களால் தான் வெற்றி பெற முடியும்.மேலும்,

அந்தக் கட்சியிலே சிலர் கேட்கலாம் ?அண்ணாமலையால் பிஜேபி வளர்ந்தது என்று சொல்வார்கள். அது எப்படி வளர்ந்தது ?என்பது எங்களுக்கு தெரியும்.

திமுகவின் ஊழல் அரசியலை பேசியதும், தமிழ் நாட்டில் வெறுப்பு அரசியலை உருவாக்கிய அதிமுக, திமுக அதில் இருந்த பலர் வெளியேறி பிஜேபிக்கு வந்தார்கள். சிலர் மீண்டும் பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் போய் விட்டார்கள். அதையும் அண்ணாமலையால் சரி செய்ய முடியவில்லை.

இன்று தமிழ்நாட்டில் ஒரு சரியான ஃபீல்டு ஒர்க் செய்யக்கூடிய அரசியலை நைனார் நாகேந்திரன் தலைவராக இருக்கிறார் என்பது கட்சியின் மேலிடம் ஒவ்வொருவருடைய தகுதியையும் எடை போட்டு, யாருக்கு என்ன தகுதி? என்பதை முடிவு செய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *