தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் விஐபிகள் ஜோதிடர்களையும் ,சாமியார்களையும் ,சித்தர்களையும் ,சந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் காட்டில் மழை தானா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் ஜோதிடம் என்பது தற்போது சாதாரண பாமர மக்கள் முதல் விஐபிகள் வரை தங்களுடைய ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதிலும் அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சித் தலைவர்கள் மற்றும் விஐபிகள் தங்களுடைய கட்சி ஜெயிக்குமா? நாம் அரசியலில் பதவிக்கு வர முடியுமா? என்று பல ஜோதிடர்களை அணுகி ,ஆலோசனை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால் இனி youtube ஜோதிடர்கள் முதல் அப்பாயின்மென்ட் வாங்கி பார்க்கக்கூடிய ஜோதிடர்கள் வரை தேர்தல் நெருங்க, நெருங்க ஒவ்வொருவரும் பிஸியாக தான் இருப்பார்கள். இது தவிர, சாமியார்களையும், சித்தர்களையும், சந்தித்து மந்திரிகள், எம்எல்ஏக்கள் ,அரசியல் புள்ளிகள், அரசியல் கட்சியினர் ,அவரவர் கட்சி எத்தனை சீட்டுகள் ஜெயிக்கும்? தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா? அதிமுக ஆட்சிக்கு வருமா? அல்லது கூட்டணி ஆட்சி வருமா ?விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி? இப்படிப் பல கேள்விகள் ஜோதிடர்களின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே சாதாரண ஜோதிடர்கள் யாரும் இதை வெளியில் சொல்ல முடியாது .சொன்னாலும் பலன்கள் தவறிவிடும். ஜோதிடத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஜோதிடர்களால் மட்டுமே, எதிர்கால பலன்களை துல்லியமாக கணிக்க முடியும் .

அந்த வகையில் லட்சத்தில் ஒரு சில ஜோதிடர்கள் தான் அதாவது ஒரு லட்சம் ஜோதிடர்களில் இரண்டு மூன்று என்று விரல் விட்டு எண்ணக்கூடிய ஜோதிடர்களால் மட்டும்தான், இந்த தேர்தல் பலன்கள் ,,ஜாதக பலன்கள் துல்லியமாக சொல்ல முடியும் .அதிலும் 100% சொல்ல முடியுமா? என்பது கடினமான ஒன்றுதான்.

ஆனால் சித்தர்கள் சொன்னால் ,அது அப்படியே நடக்கும் .அவர்கள் ஜோதிடர்கள் போல் சொல்ல மாட்டார்கள். ஒரு சில வார்த்தைகள் தான் பேசுவார்கள். அதையும் மறைமுகமாக சொல்வார்கள். சில பேருக்கு அது புரியும் .புரியாத பாஷையிலும் சொல்லி விடுவார்கள். இவ்வளவு பெரு முயற்சி எடுத்து ஜோதிடர்களையும் சாமியார்களையும் எதிர்கால அரசியல் குறித்து அவளோடு பலன்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இது தவிர, லட்சக்கணக்கில் செலவு செய்து ஜோதிடர்களின் பரிகாரங்கள் பல கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்வது யாகங்கள் நடத்துவது இவை அத்தனையும் மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் சகல அரசியல் கட்சிகளும், இதில் போட்டி போட்டுக் கொண்டு படையெடுத்துக் கொண்டிருப்பார்கள். இதில் ஒரு உண்மை எனக்குத் தெரியவந்துள்ளது.

அது என்னவென்றால், அண்ணாமலையின் ஜாதகத்தை பார்த்த ஒரு சில ஜோதிடர்கள், அண்ணாமலை களத்தில் நின்று பதவிக்கு வர முடியாது என்றுதான் தெரிவிக்கிறார்கள். அதனால் ,அண்ணாமலை அதை தெரிந்து தான், எம் எல் ஏ தேர்தலில் நிற்க்க கொள்ள மாட்டேன் என்று தெரிவிக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.மேலும்,

இதில் வெற்றி யாருக்கு ஜோதிடர்களுக்கா? அல்லது அரசியல்வாதிகளுக்கா? அல்லது சாமியார்களுக்கா? தவிர ,சித்தர்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். அவர்கள் சித்தன் போக்கு ,சிவன் போக்கு ,என்று சொல்லி விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *