சனாதனத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய திருமாவளவனுக்கு சனாதன சக்தி என்ன? என்பது உணர்த்தியுள்ளதா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சனாதன சக்தி வேறு, இறை சக்தி வேறு, ஒன்றில்லை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சனாதன சக்தி தான் இறை சக்தி, கல்லாக வணங்கலாம் ,சிலையாக வணங்கலாம் ,மரமாக வணங்கலாம் ,மண்ணாக வணங்கலாம் ,ஆகக்கூடிய பஞ்சபூத சக்திகள் வடிவம் தான் சனாதன சக்தி.

இது தெரியாமல் நீ அரசியல் கட்சிக்கு தலைவனாக இருந்து பிரயோஜனம் இல்லை. அதேபோல் தான் இது தெரியாமல், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியிருப்பது இறை சக்திக்கு எதிரானது.

இதற்கு வக்காலத்து வாங்கும் திருமாவளவன் போராட்டம் நடத்தி விட்டு ,அந்த இடத்தை விட்டு நகர்ந்து சிறிது தூரத்திலே ,ஒரு வழக்கறிஞரை, அவருடைய கட்சியினர் தகாத வார்த்தைகளால் பேசி, அவரை அடிக்கிறார்கள். இந்த சம்பவம் திருமாவளவனை பற்றி மக்களிடம் எவ்வளவு கேவலமான தகுதி உள்ளவர் என்பதை எடுத்துக்காட்டி இருக்கிறதா? இதுதான் சனாதன சக்தியின் மர்மம்.

மேலும்,நீதிபதி ஒருவர் விஜயைக்கு தலைமை பண்பு இருக்கிறதா? என்று கேட்கிறார்? திருமாவளவனுக்கு தலைமை பண்பு இருக்கிறதா? தவறுதலாக ஒருவர் குறுக்கே வந்திருக்கலாம் ‌. அதனால், அவரை தகாத வார்த்தைகளால் பேசி ,உங்களுடைய கட்சியினர் அடிப்பார்களா? திருமாவளவனின் கண்ணெதிரிலே, இந்த சம்பவம் நடந்திருக்கிறது.இதுதான் திருமாவளவனின் தலைமை பண்பா?

கட்சிக்கு அர்த்தம் தெரியாமல், ரவுடி கூட்டங்களையும் , சண்டைக்கு வருபவனை எல்லாம், கட்சிக்காரன் ஆக்கி ,இவங்களையெல்லாம் வச்சு தான் திருமாவளவன் கட்சி நடத்துகிறார? கட்சிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி கட்சிக்கு அர்த்தம் தெரியாதவனை எல்லாம் அரசியல் கட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது, முட்டாள் ஆக்குவது, இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளின் வேலை.

நாட்டில் வேலை வெட்டி இல்லாதவன், ஏதோ ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்ள வேண்டியது ,ஒழுக்கமில்லாதவன் கட்சியில் சேர்ந்து கொள்வது ,அவர்களுக்கு பொறுப்புகளை கொடுப்பது, எது உண்மை? எது தவறு? என்று கூட தெரியாதவன் எல்லாம் கட்சி,எப்படியும் பேசுபவன் கட்சி , எப்படியும் பேசி அப்பாவிகளை மிரட்டுபவர்கள் கட்சி!

இதை எல்லாம் கட்சி என்று அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றுபவர்கள் அரசியல்வாதியா? மேலும் கட்சிக்கு அர்த்தம் தெரியாத மக்களும் , பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாதவர்களும் , கொடியையும், சின்னமும்,கையில் இருந்தால் கட்சி என்கிறார்கள். அரசியல்வாதிகள் மரியாதைக்குரியவர்கள், மதிக்கப்பட வேண்டியவர்கள், இவர்களைப் பார்த்து பயப்படும் அளவிற்கு இவர்களுடைய செயல்பாடுகள், பேச்சுக்கள் இருக்கிறது.

திருமாவளவனுக்கு எப்படிப்பட்ட மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் இரண்டு முறை எம்.பி. இவர்கள் பணத்திற்காக வாக்களித்தார்கள்? இவருடைய செயல்பாடுகள் பற்றி வாக்களித்தார்களா? எந்த அடிப்படையில் இவர் இரண்டு முறை எம்பி யாக இந்த மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்?

அந்த அளவிற்கு மக்கள் கட்சிக்கு அர்த்தம் தெரியாமல், அரசியலுக்கு அர்த்தம் தெரியாமல் வாக்களிக்கிறார்கள் என்பது திருமாவளவனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை.மேலும், யாருக்கு எல்லாம் இப்போது கட்சி தேவைப்படுகிறது? என்றால்,

நாட்டில் கட்சிக்கு அர்த்தம் என்ன? என்றாவது தெரிந்து கட்சியில் பொறுப்புகளை கொடுக்க வேண்டும். ஆனால் கட்சியில் தற்போது அவர்களுடைய சுயநலத்திற்காக ஊரை ஏமாத்தறவனுக்கு கட்சியில் பொறுப்பு ‌.சட்டத்தை மதிக்காதவனுக்கு கட்சியில், பொறுப்பு, அடாவடி பேர்வழிகளுக்கு கட்சி, இப்படி இவனுக்கெல்லாம் கட்சி இருக்கும்போது!

உழைத்து வாழ்பவன், ஒழுக்கமாக வாழ்பவன், அவனுக்கு எங்கயா கட்சி போனது? அவனுக்கு கட்சி தேவை இல்லையா? அரசியல் கட்சி என்றால், மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்யக்கூடியவர்கள். நல்லது செய்யக்கூடியவர்கள் ,சமூகத்திற்கு பயன்படக்கூடியவர்கள், அவர்களுக்கு தான் அரசியல் கட்சி ! அவர்களைத் தான் அரசியல்வாதி என்று சொல்வதற்கு தகுதி.

ஒரு வழக்கறிஞர் காருக்கு குறுக்கே வந்துவிட்டால், அவனை அடித்து அவன் வண்டியை உடைத்து தள்ளி கேவலமாக பேசுவது தான் திருமாவளவனின் தலைமை பண்பா? இது சோசியல் மீடியாவில் இன்று மக்களுக்கு இந்த செய்தி அதிகமாக பரவியுள்ளது. இப்படிப்பட்ட கட்சிக்காரர்களால் மக்களுக்கு என்ன பயன்? மக்கள் சிந்திப்பார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *