
விடையூர் கிராம மக்கள் சார்பாகவும், பத்திரிக்கையின் சார்பாகவும், திருவள்ளூர் மாவட்டம் ,விடையூர் கிராமத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட சவுடுமண் குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இது பற்றி உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் விடையூர் கிராம மக்கள் சார்பாகவும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாகவும் மனமார்ந்த நன்றி.
தவிர, இருவரின் சமூகப் பணியின் வெளிப்படைத் தன்மைக்கு, கிராம மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளனர்.

மேலும், விடையூர் சவுடு மண் குவாரி குறித்து புகார்கள், அதிகமாக மாவட்ட ஆட்சியருக்கு சென்றதால், அவர் இது பற்றி சில நாட்களிலே ,மாவட்ட ஆட்சியர் பிரதாப் இந்த குவாரியை நிறுத்திவிட்டார்.
இருப்பினும், குவாரி ஓட்டுபவர்களின் அழுத்தம் காரணமாக, இந்த பிரச்சனை ராசப்பாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராசப்பா தான், தமிழ்நாடு முழுதும் இந்த சவுடு மண் குத்தகை எடுத்துள்ளார். ராசப்பாவும், துர்கா ஸ்டாலினும், ஒரே ஊர்க்கார் என்பதால், இவர் உடனே துர்கா ஸ்டாலினுக்கு போன் அடித்து விடுவாராம். அந்தம்மா உடனே மாவட்ட ஆட்சியர்களுக்கு போன் அடித்து விடுவார்களாம் என்ற தகவல் . மேலும்,
இப்படி தான் மாவட்ட ஆட்சியர்களுக்கு ,உண்மையிலேயே பொது மக்களின் எதிர்ப்புகள் மீறி அனுமதி வழங்க இடம் தரவில்லை என்றாலும், இப்படிப்பட்ட அரசியல் அழுத்தங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும், இது இருந்து கொண்டு தான், இருக்கிறது.

மேலும்,இப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியரும், பொதுப்பணித்துறை செயற் பொறியாளரும், அலட்சியமாக இருந்திருந்தால், பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றிருக்கும். அங்கே இராசப்பாவோ அல்லது துர்கா ஸ்டாலினோ வந்து நிற்கப் போவதில்லை. அங்கே வந்து நிற்பவர்கள் மாவட்ட ஆட்சியரும், பொதுப்பணித்துறை செயற் பொறியாளரும் மட்டும் தான்.
மேலும்,இப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியரும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரும் அலட்சியமாக இருந்திருந்தால் பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றிருக்கும். அங்கே இராசப்பாவோ அல்லது துர்கா ஸ்டாலினோ வந்து நிற்கப் போவதில்லை. அங்கே வந்து நிற்பவர்கள் மாவட்ட ஆட்சியரும், பொதுப்பணித்துறை செயற் பொறியாளரும் மட்டும் தான்.மேலும்,
இதையெல்லாம் மீறி, இப்போது மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உடனே ,இது சம்பந்தமான ஆய்வுப் பணியை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கி, அதை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், குறுகிய நாட்களில், அதுவும் 55 நாட்கள் இந்த குவாரி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இது எவ்வளவு சவுடு மண் என்றால்? 6000 லோடு அதிகபட்சம் இதற்குத் தான், இவர்கள் பணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், கிட்டத் தட்ட சுமார் 50, ஏக்கர் பரப்பளவுக்கு மேல் சுமார் 10 அடி ஆழத்திற்கு சவுடு மண், விடையூர் பெரிய ஏரியில் எடுத்துள்ளார்கள்.

இது எப்படி சாத்தியம்? காலையில் 6:00 மணிக்கு தான் குவாரி மண் எடுக்க வேண்டும். அதேபோல், மாலை ஆறு மணி ஆனால், குவாரியை நிறுத்தி விட வேண்டும். சுமார் 15 பொக்லீன்கள் இதில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது தவிர,நேரம் காலம் இல்லாமல், இரவு எட்டு மணிக்கு மேல் கூட ,ஓட்டி இருக்கிறார்கள்.

அதேபோல், கிராம மக்கள் இரவு முழுவதும் கூட ,சில நாட்களில் ஒட்டி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டுமல்ல, ஏரிக் கரைகளை உடைத்து ஆங்காங்கே, பாதை அமைத்திருக்கிறார்கள் . அதை எல்லாம் உடனடியாக சரி செய்து, ஏரியிலிருந்து ஒரு பொக்களின் இயந்திரம் கூட, இல்லாமல் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் ,இவ்வளவு அரசியல் அழுத்தங்களையும் மீறி ,பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பத்திரிகையின் உண்மையான செய்திக்கு மதிப்பளித்து, இந்த குவாரியை நிறுத்திய மாவட்ட ஆட்சியர், மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனுக்கும், கிராம மக்கள் சார்பாகவும், பத்திரிக்கையின் சார்பாகவும், மீண்டும் மனமார்ந்த நன்றி.