சமூக நலன் பத்திரிகைகளுக்கு பிஜேபி அரசு போட்ட சட்டமா? அல்லது கார்ப்பரேட் ஊடகங்களுக்கு போட்ட சட்டமா ? இது ஜனநாயகத்திற்கு ஆபத்து என சமூக நலன் பத்திரிகையாளர்கள் வேதனை.

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 23, 2024 • Makkal Adhikaram

மத்தியில் பிஜேபி அரசு தற்போது பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே உள்ள பழைய சட்டங்களை சீர் செய்து சாமானிய பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.

 மேலும், தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இச்செய்தியை மத்திய,மாநில அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் பத்திரிகைகளை சாமானிய மக்கள் நடத்தக் கூடாது என்பதற்கு அதிலே ஜிஎஸ்டி கொண்டு வருகிறது. நீங்கள் சொன்னது ஜிஎஸ்டி 20 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ஜிஎஸ்டி என்று சொன்னீர்கள். இப்போது இந்த பத்திரிக்கை நடத்தும் வெளியீட்டாளர்களுக்கும், சொந்த அச்சகம் வைத்திருப்பவர்களுக்கும் ஜிஎஸ்டி முக்கியம் என்று தெரிவிக்கிறார்கள்.எந்த ஒரு சலுகை விளம்பரங்களும் கொடுக்காமல் சட்டத்தை மட்டும் போடுவதற்கு ஆட்சி அதிகாரத்தின் ஆணவம் என்று தான் இதை சொல்ல வேண்டும்.

இது தவிர, எந்த ஒரு விளம்பரத்தையும் வெளியீடு செய்ய விளம்பரதாரரின் ஒப்பந்தமும், விளம்பர ஏஜென்சி மற்றும் பத்திரிகை துறை சார்ந்தவர்களும் கையப்பமிட்டு அவற்றை நகலெடுத்து மீண்டும் பதிவேற்றம் செய்து சான்றிதழ் வந்தால் மட்டுமே விளம்பரத்தை பிரசரிக்க முடியும் என்று நீதிமன்ற உத்தரவை தெரிவித்திருப்பது இந்த பத்திரிகைகளை எல்லாம் அழிப்பதற்கு இது போட்ட சட்டம் தான் என்று தெளிவாகத் தெரிகிறது. 

மேலும், கார்ப்பரேட் கம்பெனிகள் மத்திய மாநில அரசுகளின் சலுகை விளம்பரத்தால் பல கோடிகளை சம்பாதித்து விட்டார்கள். ஆனால், இந்த சாமானியர்கள் பத்திரிகைகளுக்கு எந்த சலுகை விளம்பரங்களும் கொடுக்காமல் இப்படி ஒரு ஜிஎஸ்டி கொண்டு வருவது, விளம்பரத்தில் சான்றிதழ் பெறுவது, இது கடும் சட்ட விதிமுறைகளாக உள்ளது. மத்திய அரசு மிகப் பெரிய தவறு செய்கிறது .

 மேலும்,இந்த சமூக நலனுக்காக இவர்களுடைய அடாவடித்தனங்கள், ரவுடித்தனங்கள், ஊழல்கள், அரசியல் தெரியாதவர்களிடம் அரசியலைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நல்ல கருத்துக்கள், உண்மை செய்திகள், மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்து கொண்டிருக்கும் எங்களுக்கு, இது போன்ற சட்டங்களால் இந்த உண்மைகள் மக்களிடம் போய் சேர்ப்பதற்கு இவர்கள் மறைமுகமாக கொண்டு வந்துள்ள பத்திரிக்கை சட்டங்கள் ஆகத்தான் இருக்கிறது.மேலும்,

 பிளாக் மணியை ஒயிட் ஆக்கும் பல பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு இந்த சட்டமா? அல்லது எங்களைப் போன்ற சாமானியர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கு இந்த சட்டம் பொருந்துமா? இதைப் பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் , மத்திய செய்தி துறை அமைச்சகமும், எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மத்திய அரசின் செய்தி துறை இணை அமைச்சர் எல்.முருகன் இது பற்றி விளக்கம் அளிப்பாரா ?

மேலும், சமூக நலனுக்காக பத்திரிகை நடத்தி காணாமல் போனவர்களும் உண்டு .அதில் போராட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அதிகம். இப்படிப்பட்ட நிலைமையில், மத்திய அரசு இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டு வருவது நாட்டில் பத்திரிக்கை என்றால்! அது கார்ப்பரேட் தான். நாம் என்ன சொன்னாலும் கேட்பவர்கள் .அவர்களுக்கு தேவையானது வியாபாரம் மட்டுமே, அதனால் மக்கள் நலனை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் அவர்களுக்கு கிடையாது. எப்படி அரசியல் வியாபாரம் ஆகிவிட்டதோ, அதேபோல் இந்த பத்திரிகைகளும் வியாபாரத்தை தான் முக்கியத்துவமாக பார்க்கிறது. அதனால், மக்கள் தான் இனி விழித்துக் கொள்ள வேண்டும். மேலும்,

 இந்த சட்டங்கள் மீது எதிர்ப்பு தெரிவித்து போராடுவது தவிர, வேறு வழி இல்லை. மேலும், எத்தனையோ கோடிகள் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு அதன் வளர்ச்சிக்காக கொடுக்கும்போது, இந்த பத்திரிகைகளுக்கு ஏன் கொடுக்க முடியாது? பத்திரிக்கையில் சமூக நீதி இல்லை. அதனால், உடனடியாகநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும். இது ஜனநாயகத்திற்கு ஆபத்து.

மேலும், நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது .இதை நீதிமன்றம் தான் தலையிட்டு எல்லை மீறும் ஆட்சியாளர்களின் சட்டங்களுக்கு முற்று புள்ளி வைக்க முடியும் .மேலும், ஒரு சார்பாக கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கும்போது தகுதியான பத்திரிகைகளுக்கு அதை ஏன் கொடுக்கக் கூடாது ?

இது எல்லாம் அரசியல் தானே! அந்த பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்கும்போது, இதற்கு ஏன் கொடுக்கக் கூடாது ? மேலும் ஆட்சி அதிகாரம் கையில் வைத்துக்கொண்டு, பத்திரிக்கை சுதந்திரத்தையும், பத்திரிகையும் கேள்விக்குறியாக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்து . இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட்  தலையிட்டு இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கை .மேலும், 

இது சம்பந்தமாக தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் கடிதம் எழுதி தெரிவிக்க உள்ளோம். மேலும் பிரதமர் மோடி,நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இப் பிரச்சனை குறித்து பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் தங்களது கவலையை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *