சமூக மாற்றத்திற்கான வேலையில் – வன்னியர் சமூக பேரவை நிறுவனர் பொன் குமார் .

அரசியல் உணவு செய்தி சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 08, 2024 • Makkal Adhikaram

கட்டிட சங்க தொழிலாளர்களின்  தலைவரும், வன்னியர் சமூக பேரவை அமைப்பின் நிறுவனருமான பொன் குமார் வன்னியர் சமூக மாற்றத்திற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார் .

மேலும், வன்னியர் சமூகம் இன்று மிகவும் பின் தங்கிய நிலையில் வேலைவாய்ப்பிலும், தொழிலிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், இன்று அச் சமுகத்திற்கான ஒரு தலைமை ஏற்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன்னுடைய பணியை துவக்கி உள்ளார். அதற்காக வன்னியர் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள்,வியாபாரிகள், போன்ற பலதரப்பட்ட மக்களை அரசியல் சார்பின்றி, சமூக நலனுக்காக டி நகர் சபரி இன் ஹோட்டலில் நடத்தினார். அங்கே வந்த வன்னியர் சமூகத்தினர், தங்களுடைய கருத்துக்களை சமூக நலனுக்காக எடுத்துரைத்தனர். 

அது மட்டுமல்ல, சென்னை எப்படி உருவாகியது? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? சென்னப்ப நாயக்கன் பட்டணம் வெள்ளையர்கள் காலத்தில் இருந்து, இன்றுவரை அதற்கான நிலங்களை கொடுத்தது யார்? போன்ற வரலாற்று பின்னணி உள்ள ஒரு சமுதாயம், வன்னியர் சமுதாயம் என்கின்றனர் .இன்று வரலாறு தெரியாமல் அது தங்களுக்கு சொந்தமானது என்று வேறு சில நாயுடு சமுதாயத்தினர் சொல்வதாகவும் தெரிவித்தனர் . அதற்கெல்லாம் பொன் குமார் ஆதாரத்தை காட்ட அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என்கிறார் .

மேலும், ஆகஸ்ட் 22 சென்னை தினம், சென்னையில்! சென்னை உருவான விதம் குறித்து மிகப்பெரிய கூட்டம் வன்னிய சமூக மக்களிடம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். தவிர, வன்னியர் சமூகத்தின் அடையாளமாக ராஜேந்திர சோழனின் திருவுருவ படத்தை முக்கியமாக முன்னிலைப்படுத்தவும், சோழர்களின் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லவும், இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த வன்னியர் சமூக பேரவையின் நோக்கமே சமூக நலனுக்கானது. எந்தெந்த பகுதியில் வன்னியர் சமூகம் வேலைவாய்ப்பில், தொழில் துறையில் மற்ற சமூகங்களால் ஏற்படும் பாதிப்பில் மற்றும் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை எடுத்து செயல்பட இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதை வன்னியர் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வன்னிய சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், வன்னியர் சமூகம் பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியால் நம்பிக்கை இழந்து, வெறுப்புற்றவர்களாக பேசுவதை பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு இந்த சமுதாயம் நம்பி ஏமாந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த ஏமாற்றத்திலிருந்து அவர்கள் மீண்டு வருவது என்பது ஒரு கடினமான மனநிலை தான் .காரணம் பாட்டாளி மக்கள் கட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். பலனடைந்தவர்கள் அந்தக் கட்சியினராக மட்டும் தான் அந்த சமூகத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சமூகம் விழித்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் ராமதாசை விட்டு விலகி வந்த நிர்வாகிகள் கூட, பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ,லெட்டர் பேடு கட்சிகளும் ,வைத்துக் கொண்டு இந்த சமூகத்தை வைத்து எப்படி பலன் அடையலாம்? என்ற நோக்கத்துடன் தான் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்களை மாற்ற முடியாது .அதனால், அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை என்று வன்னியர் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும்,நானும் தமிழ்நாட்டில் உள்ள எத்தனை சங்கங்கள்? எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறது? என்பதை எண்ணிப் பார்த்து விட்டேன். அவர்களுடைய மனநிலை என்னவென்று தெரிந்து கொண்டேன். அவர்களை மாற்ற முடியாது. 

மேலும், தலைவரிடமும் இந்த சமூகத்திற்கு உண்மையாக உழைக்கக்கூடிய நிர்வாகிகளை கொண்டுதான் இதை தீர்மானிக்க வேண்டும். வன்னிய சமூக மீண்டும் ஒரு நம்பிக்கை உள்ள தலைமையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை தலைவர் பொன் குமார் ஈடு செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.மேலும், 

இந்த கூட்டத்தில் பேசிய அனைவரின் உள்ளத்திலும் சமூகத்தின் அன்பு தான் அவர்களிடம் வெளிப்பட்டது. வயதானவர்கள் முதல் நடுத்தர வயது வரை வந்த அனைவரும் தன்னால் சமூகத்திற்கு என்ன கொடுக்க முடியும்? என்றுதான் பேசினார்கள். அவர்கள் சமூகத்திற்கு கொடுப்பதற்காக வந்தவர்களே ஒழிய, சமூகத்தை வைத்து பிழைப்பு நடத்துவதற்கும், சமூகத்தை ஏமாற்றி பதவி ,அதிகாரத்தை அனுபவிப்பதற்கும் வந்தவர்களாக தெரியவில்லை .அதனால் இந்த வன்னியர் சமூக பேரவையின் நோக்கம் சமூக நோக்கத்திற்கானது அதில் வியாபாரமோ ,அரசியல் லாபமோ இல்லாமல் செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கின்றனர் .

 மேலும், ஒரு சமூகத்தின் மாற்றம் தொழிலிலும், வியாபாரத்திலும் முன்னேறும்போது அது சமூகத்தின் மாற்றமாக இருக்கும் என்கின்றனர். அதை தான் நாடார் சமூகம் இன்று செய்து பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அது ஒரு நல்ல விஷயம் தான். அதற்காக நாம் அவர்களோடு போட்டி போட போவதில்லை என்கிறார் பொன் குமார் .மேலும், நம்மால் முடிந்ததை நம் சமூகத்திற்கு என்ன செய்தோம்? என்பதை இன்று ஏமாற்றக்கூடிய காலகட்டத்தில் வன்னியர் சமூகம் இதை பயன்படுத்தி முன்னேறுவது மற்றும் இந்த ஊக்கத்தை பயன்படுத்திக் கொள்வது நல்லது என்கின்றனர் வன்னிய சமூகத்தின் சமூக ஆர்வலர்கள் .

மேலும், இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த எல் அண்ட் டி கம்பெனியின் தென்மண்டல அதிகாரி மோகன்ராஜ் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தசரதன், முன்னாள் எம் எஸ் எம் இ தலைவர் மாரியப்பன், செங்கல்வராய நாயக்கர் டிரஸ்டின் உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *