ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச கும்பலுடன் தொடர்பில் இருந்தது என்சிபிக்கு தெரியவந்துள்ளது. இது தவிர, வெளிநாடுகளில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அந்த பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர திமுகவுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்டது ஜாபர் சாதிக் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஜாபர் சாதிக் திமுக குடும்பத்தினருடன் நெருக்கத்தில் இருந்ததிலே என்சிபிக்கு முக்கிய பார்வை பட்டது .அதனால், இவர்கள் வெளிநாடுகளில் எவ்வளவு பணத்தை கொண்டு வந்தார்கள்? எப்படி கொண்டு வந்தார்கள்? அது பற்றிய ஆய்வுகள் உளவுத்துறை, அமலாக்கத்துறை கண்டுபிடித்து வருகிறது . இதனால் யாருக்கெல்லாம் ஜாபர் சாதிக் பணத்தை கொடுத்தார்?
யாரெல்லாம் வாங்கினார்கள்? ஒரு பக்கம் வெளிநாடுகளில் இந்த பணத்தை எப்படி யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது? எதற்காக கொடுக்கப்பட்டது? அதேபோல், இந்தியாவில் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது? இதை அப்ரூவராக மாறி உள்ள ஜாபர் சாதிக் எல்லா விவரத்தையும் ஜாபர் சாதிக் உளவுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல். இதனால் திமுக அரசியல் கட்சியின் அஸ்திவாரமே ஆடிப் போயிருக்கிறது .
இந்த செய்தி வடமாநில பத்திரிகை ,தொலைக்காட்சிகள் பின்னி எடுத்து இருக்கிறது .ஆனால் ,தமிழ்நாட்டில் இது பற்றி ஒரு சில பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மட்டும்தான் வெளியிட்டுள்ளதா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும், இது மூடி மறைக்கப்படும் விஷயம் அல்ல. சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு முக்கியமான குற்றவாளி ஜாபர் சாதிக் . அது மட்டுமல்ல,
சர்வதேச நாடுகளில்,எந்தெந்த நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது? அந்த பணம் ஆயுத கடத்தலுக்கும், தீவிரவாத கும்பலுக்கும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் .அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் தீவிரவாத கும்பலின் பின்னணியில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் ,இவர்களுக்கு எல்லாம் இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் இடம் இருந்து பணம் போயிருக்கிறது. இதில் என்ன ஒரு முக்கிய விஷயம் என்றால்!இந்த போதை பொருள் கடத்தல் முக்கிய புள்ளியான ஜாபர் சாதிக், திமுக குடும்பத்திற்கு எவ்வளவு பணம் கொடுத்தார்?இதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல்.
மேலும், இவர்களுடைய பிளாக் மணி வெளிநாடுகளில் எங்கே கொடுக்கப்பட்டு அது மீண்டும் இந்தியாவுக்கு எப்படி கொண்டுவரப் பட்டுள்ளது? என்பதெல்லாம் உளவுத்துறை விசாரணை செய்து வருகிறது.மேலும், ஜாபர் சாதிக் பல தகவல்களை ஒத்துக் கொண்டதால், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பீதியில் இருந்து வருகிறார்கள். ஏற்கனவே சீமானுக்கு 29 கோடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அதேபோல் திருமாவளவனுக்கு எத்தனை கோடிகள் போயிருக்கும் ?என்பதை இனிமேல் தான் வெளிவரப் போகிறது. திமுகவிற்கு எத்தனை கோடிகள் ஜாபர் சாதிக் கொடுத்தான்? என்பது வெளிவரும்.மேலும்,
ஒரு போதைப் பொருள் கடத்தும் குற்றவாளி இடமிருந்து பணம் வாங்கி அரசியல் கட்சி நடத்துகிறார்கள் என்றால் ,அதைவிட கேவலம் இந்த நாட்டில் வேறு ஏதும் இருக்க முடியாது. இவர்களையெல்லாம் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் ?இவர்கள் மக்களிடம் என்ன சொல்லி இதை மறைக்கப் போகிறார்கள்? அல்லது ஏமாற்றப் போகிறார்கள்? இந்த கிரிமினல் அரசியல் தான், தமிழ்நாட்டில் ஊடகங்கள் மூலம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கிய உண்மை . மேலும்,
இது எல்லாம் அரசியல் அதிகாரம் எந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களை திமுக ஆட்சி அதிகாரம் முட்டாளாக்கி இருக்கிறது? இந்த வாய்ச்சவடால் கூட்டம் பிஜேபியை குறை சொல்லி தப்பிக்கலாம் என்று கனவிலும் நினைக்க முடியாது . ஏனென்றால், புள்ளி விவரத்துடன் ,ஆதாரத்துடன் எல்லாவற்றையும் உளவுத்துறை எடுத்த பிறகுதான் இது நீதிமன்றம் வரை செல்லும் நிலைமையும் வரலாம் .அதனால், திமுகவிற்கு இதனால் மிகப்பெரிய இழப்பு ,டோட்டல் டேமேஜ், அரசியல் எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .
அதுமட்டுமல்ல ,ஒரு பக்கம் மீடியாக்களில் போதைப்பொருள் ஒழிப்பதை பற்றி சீமான், திருமாவளவன், மு க ஸ்டாலின் பேசிக்கொண்டே இருப்பார்கள். மற்றொரு பக்கம் சினிமாவில் வருவது போல் போதைப் பொருள் கடத்தல் கும்பல் முக்கிய புள்ளி ஜாபர் சாதிக்குடன் நெருக்கத்தில் இங்கே போதைப்பொருள் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் முட்டாள் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். வாக்களித்துவிட்டால் ,அதிகாரம் மக்கள் கையில் கொடுத்து விட்டால், இவர்கள் எப்படியும் பேசலாம் .எப்படியும் ஆடலாம் .தமிழக மக்கள் எப்போது இதையெல்லாம் சிந்திக்க போகிறார்கள் ?
இவர்களைப் போல் பணம் மட்டும்தான் வாழ்க்கை. பணம் மட்டும்தான் ஆட்சியின் கூறிக்கோள் என்றால், இந்த நிலைமைதான் எல்லோருக்கும் என்பதை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், பொதுமக்களும், அதிகாரிகளும் அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்வார்களா ?