சவுக்குசங்கர் மீது அருண் ஐபிஎஸ்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி வர்தகம் விவசாயம்

youtube சேனல் நடத்தி வரும் சவுக்கு சங்கர் மீது, அருண் ஐபிஎஸ் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு ,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

அருண் ஐபிஎஸ், அரசியல் விமர்சிகர் சவுக்கு சங்கர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் ,அது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. தவிர, அதனால் எனக்கு மன உளைச்சல் ,தொழில் ரீதியான பாதிப்பு ,எனது கண்ணியம் மற்றும் தனிநபர் உரிமை மீறல், போன்ற குற்றங்களுக்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு தொகை கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவரது ஏஜெண்டுகள், பிரதிநிதிகள், பின் தொடர்பவர்கள் மற்றும் அவர் சார்பாக செயல்படும் வேறு எந்த நபரும் எனக்கு எதிரான அவதூறான உள்ளடக்கம் கொண்ட கருத்தை வெளியிடுவது ,மறு வெளியிடுவது, ஒளிபரப்புவது, பதிவேற்றுவது, பரப்புவது, பகிர்வது அல்லது பதிவிடுவது போன்றவற்றிற்கு நிரந்தர தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இது தவிர அச்சு, டிஜிட்டல், ஒலி – ஒளி அல்லது மின்னணு ஊடகங்களில் எனது பெயர், புகைப்படம் , புனைப்பெயர், அல்லது வேறு ஏதேனும் மறைமுக அடையாளம் ஆகியவற்றைக் கொண்டு, குறிப்பிடும் எந்த ஒரு மறை முக கருத்துக்களையும் அல்லது குற்றச்சாட்டுகளையும் வெளியிடும் பட்சத்தில், அந்த நபர்கள் அனைவரையும் தடுக்க வேண்டும்.

மேலும், இது போன்ற கருத்துக்களை உள்ளடக்கி நீதிமன்றத்திலே அருண் ஐபிஎஸ் ஒரு கோடிக்கு மேல் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். அவதூறுக்குறியவை என்று நான் பட்டியலிட்ட அனைத்து பதிவுகள், ட்வீட்டுகள் மற்றும் காணொளிகளை நீக்குமாறு யூடியூப் மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

தவிர,இழப்பீடு கோரும் ,இந்த வழக்கைத் தாக்கல் செய்வதற்காக ஏற்பட்ட செலவுகளை சவுக்கு சங்கரே செலுத்த உத்தரவிட வேண்டும் என்று அருண் ஐ.பி.எஸ் கோரியுள்ளார்.

மேலும்,என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இன்றி, பொய்யாக வதந்திகளை பரப்பி வருவதால் தான், சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *