சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்து சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையின் அடக்குமுறையால், ஜனநாயகத்தின் குரல் வளை நசுக்கப்படுகிறதா?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள்,குளம்,குட்டைகளில் வண்டல்மண், சவுடு மண்,கிராவல் மண்,எடுக்க தமிழ்நாடு சிறு கனிம விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிகள், குளம், குட்டைகளில் மண் எடுக்க நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு வழக்குவதால் இப் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும்,சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.தவிர,

நாட்டில் ஏரி, குளம், குட்டைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு அதில் உள்ள மண்ணை எடுத்து வியாபாரம் செய்வது, விவசாயத்திற்கு முக்கிய பாதிப்பு. அதாவது, நீர்நிலை பாதுகாக்க தவறிய திமுக அரசு ஆங்காங்கே ஏரிகளில் ஆக்கிரமிப்பு, மற்றும் இது போன்ற மண்ணை விற்று அப் பகுதி மக்கள் போராடும் போது அல்லது அந்த கிராம மக்கள் போராடும் போது அவர்களை அடித்து பஸ்ஸில் ஏற்றி ஏதோ கொலை குற்றவாளிகளை போல நடத்துவது ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும் செயல்.

ஒரு கிராமத்தில் வாழுகின்ற மக்கள் அந்த கிராம நலனுக்காக தான் அவர்கள் போராடுகிறார்கள்.ஆனால், அரசியல் கட்சிக்காரர்கள் அதாவது ஆளுங்கட்சிக்காரர்களும் அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய மற்ற அரசியல் கட்சிக்காரர்களும் பங்கு போட்டு, அந்த மண்ணை விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்க்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் அதை எதிர்த்து கிராம மக்கள் குரல் கொடுத்து போராடுகிறார்கள்.அவர்களுடைய நியாயமான போராட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்களை அடித்து துன்புறுத்தி பஸ்ஸில் ஏற்றி செல்லும் போது ஒரு பெண் அந்த பஸ்ஸில் தூக்கு போட்டுக் கொள்கிறார். அப்போதுதான் இந்த கூச்சல். எந்த அளவுக்கு இந்த மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குறார்கள் என்பது காவல்துறையின் நடவடிக்கை ஒரு தவறான நடவடிக்கையாக இருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

மேலும்,காவல்துறையின் நடவடிக்கை சட்டபூர்வமான நடவடிக்கையாக இருக்க வேண்டுமே ஒழிய, ரவுடிகள் அடிப்பது போல் அடித்து விட்டு,செக்ஸினை எழுதுவது இது காவல்துறையின் வேலையல்ல. மேலும், கிராம நலனுக்காக போராடுபவர்கள் அந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தான் அதைப்பற்றி தெரியும். அங்கே என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? தனி மனித உரிமை போராட்டமும், இங்கே நசுக்கப்படுகிறது.

பொதுப்பிரச்சனைக்காக பொதுமக்கள் போராட்டம் போதும், அவர்களுடைய உரிமை பிரச்சினை நசுக்கப்படுகிறது இங்கே யாரை வெட்டி விட்டார்கள்? யார்? யாரை?அடித்துக் கொண்டார்கள் யார் மண்டையை உடைத்தார்கள்? எதுவும் நடக்கவில்லை. இங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை இவர்கள் தான் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மேலும், காவல்துறை போராடுகின்ற மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமே தவிர, இவர்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்தி, தவறு செய்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டப்படி ஏரியில் மண் எடுக்கும் போது அந்த கிராம பகுதியில் கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அடுத்தது, எத்தனை லோடு மண்ணு எடுக்கிறார்கள்?அதுவும் தெரிவிக்க வேண்டும். இது ஒன்றும் பட்டா நிலத்தில் அவர்கள் மண்ணெடுக்கவில்லை.

அந்த கிராமத்திற்கு சொந்தமான ஏரியில் மண் எடுக்கிறார்கள்..அதனால் அந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுகிறார்கள். இங்கே என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது? சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவது திமுக கட்சிக்காரர்கள் தான்.

ஏனென்றால் அவர்கள் தான் ஆட்சி அதிகார மிரட்டலில் இந்த மண்ணை எடுக்கிறார்கள். ஓட்டு போட்டவன் முட்டாள். இந்த மண்ணை விற்று கொள்ளையடிப்பவன் புத்திசாலி. இதற்கு அந்த ஊரில் உள்ள பங்காளி கட்சிக்காரர்கள் எல்லாம் டீல் பேசி தங்களுக்கு வேண்டிய பணத்தை வாங்குவார்கள். இதுவும் ஒரு ரகசிய கொள்ளைதான். மக்களுக்கு இந்த உண்மை தெரிந்தவர்கள் ஏதோ கொஞ்சம் பேர், கிராம நலனில் அக்கறை கொண்டு போராடுகிறார்கள். அப்படி போராடும்போதுதான் அவர்களையும் காவல்துறை அடித்து பொய் வழக்கு போட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று செக்ஸணை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் நீதிமன்றம் தான் கவனிக்க வேண்டும். நீதிமன்றம் எவ்வளவோ பல விஷயங்கள் காவல்துறைக்கு அறிவுறுத்தி இருக்கிறது ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் சமூகப் பிரச்சனையை விட, ஒரு தனி மனித பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்,

இப் பிரச்சனை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி மற்றும் குளங்களில் மண் எடுக்க தடை இருந்தும் மண் எடுக்கிறார்கள் என்றால் சட்டப்படி பொதுமக்கள் தடுத்தது சரிதான் மேலும் இப்பிரச்சனை பத்திரிகைகளில் வெளிவரும்போது இந்த வழக்கை சுமோட்டாவாக எடுத்து விசாரிக்க வேண்டும். இது தவிர, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் அரசியல் கட்சியினருக்காக பொதுமக்களை அடித்து துன்புறுத்து பொய் வழக்கு போடுவது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்க வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *