
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, புதுக்குடி எனும் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய, பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் , சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில்! சாதிய பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. மேலும், அனைத்து தரப்பு மக்களும் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும். இது பற்றி மாவட்ட கண்காணிப்பாளருக்கு, புதுக்குடி அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் கோயிலுக்கு சென்று வழிபடுவதை யாரும் தடுக்கவில்லை என உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீண்ட கால பல்வேறு தலைவர்களின் போராட்டத்திற்குப் பிறகு, ஆலயத்தில் நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் முக்கிய கடமை. இதை மாவட்ட கோட்டாட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். யாராவது தடுத்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.