ஜனவரி 21, 2025 • Makkal Adhikaram
நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், ஆன்மீகவாதியாகவும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு வி எச் பி யின் மாநில அமைப்பு தலைவராக இருக்கும் கோபால் ஜி, இந்த மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சொத்து அனைத்தையும், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு உட்படுத்தினால், மொத்த சொத்தின் உரிமையாளர்கள் யார்? என்பது தெரியவரும்.மேலும்,
இந்த சொத்துக்களின் மூலப் பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ,அதை சிபிசிஐடி போன்ற காவல்துறை மூலம் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இதில் எவ்வளவு பெரிய மோசடி வேலைகள் நடந்துள்ளது? என்பது தெரியவரும். மேலும், இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக டைட்டில் டீட் (title deed ) FIR ன் பதிவேட்டில் உள்ள சொத்து விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து ,அரசாணை மூலம் மொத்த சொத்துக்களின் விவரங்களை உண்மையான கோயில் சொத்தில் சத்திரம், மடம், டிரஸ்ட் போன்றவற்றில் எப்படி எல்லாம் மோசடி வேலைகள் நடைபெற்று உள்ளது? என்பது அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரியவரும் என்று ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதை விட, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சொத்துக்களை ஆய்வு செய்தால் அனைத்து சட்ட மோசடி விவகாரங்கள் வெளிவரும். மேலும், மேற்படி சொத்துக்கள் அனைத்தும் திருமலை கொழுந்துபுரம் பிராமண மகாஜன அறக்கட்டளையின் சொத்து ஆகும்.
ஆரம்பத்தில் திருமலைக் கொழுந்துபுரம் பிராமண மகாஜன அறக்கட்டளை அதன் தலைமையிடம் கொல்லத்தில் இருந்தது. பிறகு 9 நிர்வாகிகளின் வீடுகளில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஒன்பது அறக்கட்டளையின் நிர்வாகிகளின் புனைப்பெயர் 9 வீட்டுக்காரர்கள் என்று அக்காலத்தில் அழைத்து இருந்தனர். மேலும், எஸ். வேதாந்தம் விசுவ இந்து பரிசத்தின் சர்வதேச செயல் தலைவராக இருந்துள்ளார். அவர் கொல்லத்தை சேர்ந்தவர். 1949 ஆம் ஆண்டு கேரளாவில் வாழ்ந்து வந்த அவர் ஆர். எஸ். எஸ் உடன் தொடர்பு கொண்டவர். பிறகு வணிகத்தில் பட்டம் பெற்று டிவிஎஸ் குழுவில் கணக்காளராக சேர்ந்துள்ளார். பிறகு வேலையை விட்டு வெளியில் வந்து 1972 இல் தமிழ்நாட்டின் விஹெச்பி மாநில செயலாளர் ஆக பொறுப்பேற்கிறார்.
அப்போதுதான் வேதாந்தம் தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம் மற்றும் கிராம மேம்பாட்டு துறைகளில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய தொடங்கினார். இந்து தர்மத்திற்காக ஆன்மீக வழியில் குரல் கொடுக்க தமிழ்நாட்டில் பல சன்னியாசிகள் மற்றும் மடாதிபதிகளின் மாநாடுகளை ஏற்பாடு செய்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வி எஸ் பி யின் பக்கம் இழுத்து வந்து இந்து மதத்திற்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.
மேலும், நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் போன்றவற்றில் இலவசமாக தொண்டு செய்ததில் முக்கிய பங்கு உள்ளது. மேற்படி அனைத்து சொத்துகளும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தம் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதன் பின்னர் சில சொத்துக்கள் மதுரை, திருச்சி, தினமலர் நிர்வாகிகளின் அழுத்தம் காரணமாக தமிழ்நாடு வி எச் பி மாற்றம் செய்து கொடுத்துள்ளது.
இது தவிர, இந்த சொத்துக்களை தக்க வைக்க திருச்சி தினமலர் நிர்வாகி ஆர் கோபால் ஜி பொறுப்பேற்று இந்த சொத்துக்களை கபலீகாரம் செய்துள்ளார். இந்தப் பிரச்சினையை எதிர்த்த பிஜேபி தலைவர்களான எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ,ஆகியோரை காஞ்சி மடத்தின் 2 வது பெரியவர் இதை சரி கட்டியுள்ளார்.
அதனால், தமிழ்நாடு அரசு விசுவ இந்து பரிஷத்தின் சொத்து அனைத்தையும், ஆய்வுக்கு உட்படுத்தினால் திருமலை கொழுந்து புரம் டிரஸ்ட் மூலம் திருவாடுதுறை ஆதின மடத்தின் பெயரில் 1910 இல் இருந்து மாற்றம் செய்து கொண்டு, கடையநல்லூர், ஸ்ரீ கடகால் ஈஸ்வரர் கோயில் சொத்து என்றும், அதன் பரம்பரை நிர்வாகி திருவாடுதுறை ஆதீனம் மடம் என்றும் போலி ஆவணம் BO, 4919/1949 என்று புதிய ஆவண எண் கொடுத்து, கபலீகரம் செய்துள்ளனர்.
மேலும், இந்த சொத்துக்கள் அனைத்தும் கோயிலின் பெயரில் இருந்த சொத்துக்கள். இதை தினமலர் நிர்வாகி மருமகன் எஸ். வைத்தியநாதன் கபலீகரம் செய்துள்ளார். செய்யும்போது சில சொத்துக்களை சர்வே எண் 292, 293 மோசடி செய்து விற்பனை செய்துள்ளார். இதற்கு வேறு ஒருவரின் பட்டா 49, 50 வெங்கட்ராமையரின் சொத்தை காட்டி, தனது குடும்ப சொத்தாக போலி ஆவணம் உருவாக்கி, அதன் மூலம் பரிவர்த்தனை என்ற பெயரில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் துணையுடன் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி விவகார கோயில் சொத்து விற்பனை விவரங்களை ,விரைவில் வெளியிடுவதாக ஆலய பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.