
தமிழகத்தில் சில்வர் பேப்பர் பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் . காரணம் அந்த பிளாஸ்டிக் கவரில் சூடான குழம்பு ஊற்றும் போது அதே போல் சாதம் அதில் பார்சல் செய்யும் போது அதே போல் சில்வர் பேப்பரில் சூடான சாதத்தை மடிக்கும் போது பேப்பரில் உள்ள மற்றும் பிளாஸ்டிக் கவரில் உள்ள ரசாயனங்கள் உருகி உணவுடன் கலக்க வாய்ப்பு உள்ளது.
இதுவே பல்வேறு நோய்களை மக்களுக்கு ஏற்படுத்தி வருவதால் நோயை விலை கொடுத்து உணவு மூலம் வாங்குகின்ற மக்களாக சமுதாயம் மாறுவதை தடுக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தமிழகத்தில் எடுத்துள்ளனர். மேலும்,தற்போது சுகாதாரமான கலப்படம் இல்லாத மளிகை பொருட்கள் ,சமையல் எண்ணெய் போன்றவை பயன்படுத்துகிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் .
தவிர, வடை,போண்டா ,பஜ்ஜி போன்றவற்றை தயாரித்து அதில் மிச்சமாகும் எண்ணெயைக் கொண்டு மீண்டும் தாளிப்பது, அந்த எண்ணெயில் தோசை சுடுவது, பெரும் ஓட்டல்களில் கூட இருந்து வருகிறது. இதை ஒவ்வொரு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மக்களுக்கும், ஹோட்டல் நடத்தும் உரிமையாளர்களுக்கும் அவசியம் விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

மேலும், அவர்கள் பணத்தை மட்டும் தான் முக்கிய நோக்கமாக கருதுகிறார்களே ஒழிய மக்களுடைய பசி ஆற வேண்டும். அடுத்தது,அவர்கள் கொடுக்கின்ற பணத்திற்கு நாம் கலப்படமில்லாத ருசியான உணவை தர வேண்டும் என்று தற்போது உள்ள உணவகங்களில் எது? என்று தேட வேண்டி இருக்கிறது. இதனால் பாதிக்கப்படும் ஏழை, எளிய நடுத்தர மக்களின் உடல் பல்வேறு நோய்களுக்கு இந்த உணவே முக்கிய காரணமாக இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

அது மட்டுமல்ல, ஒரு பகுதியில் அவசரத்திற்கு சாப்பிட வேண்டும் என்றால், எந்த ஓட்டலில் சுத்தமாக இருக்கிறது? என்று தற்போது ஹோட்டல் உணவகங்களை விஷயம் தெரிந்தவர்கள் தேட வேண்டி இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.
எனவே, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவர்கள் பணத்திற்காக தான் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், சுகாதாரம் இல்லாமல் உணவுகளை தயாரிக்கிறார்கள். இதை அவசியம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், இதில் பாரம்பட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் . தவிர, ஹோட்டல் உணவகங்களில் இந்த பிளாஸ்டிக் கவரை பயன்படுத்தி பார்சல் செய்தாலும் அல்லது சில்வர் பேப்பர் மூலம் உணவு பார்சல் செய்தாலும், கடைக்கு சீல் வைத்து 5000 அபராதம் விதிக்கப்படும் .மேலும், இந்த இரண்டு பொருட்களும் கடையில் விற்பனை செய்தாலும் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.