தடகள வீராங்கனையின் கைப்பேசி பறிப்பு: சாலை மறியல்.!

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஈரோட்டில் நடந்து சென்ற தடகள வீராங்கனையிடம் கைப்பேசியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மா்மநபா்களை கைது செய்யக்கோரி விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினா்.

இறுதிப்போட்டி நிறைவடைந்ததை அடுத்து வெளிமாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் தங்களது சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்லத் தொடங்கினா். இதில், பவானி சாலையில் தனியாா் மண்டபத்தில் தங்கியிருந்த வீரா், வீராங்கனைகள் ஈரோடு பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தனா். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வீராங்கனை செல்வி (19), கைப்பேசியில் பேசியபடி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள் திடீரென செல்வியின் கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனா். இச்சம்பவத்தை அறிந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பவானி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் விஜயன் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன்பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கைப்பேசியை பறித்தவா்களைக் கண்டுபிடித்து அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கைப்பேசியை மீட்டுத் தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். புகாா் அளித்தால் கைப்பேசியை மீட்டுத் தருவதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதனையடுத்து விளையாட்டு வீரா்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *