
தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுகவுக்கு ஆதரவான அதிகாரிகளை களை எடுத்து தான் ஆக வேண்டும். ஏனென்றால்,

இவர்கள் திமுக கட்சியினருடனும், எம்எல்ஏ ,மந்திரிகளுடனும், நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார்கள். இதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், இலவச பொருட்கள் கொடுத்தாலும், அல்லது ஆம்புலன்சில் பணத்தை கொண்டு சென்றாலும், ஏன்? அரசு வாகனத்தில் கொண்டு சென்றால் கூட, ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதனால், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ,உள்ள கண்காணிப்பு அதிகாரிகளை கண்காணிக்கவும், ஸ்பெஷல் ஸ்குவாட் (squad ) டீம் உருவாக்கி, கண்காணிக்க வேண்டும். இது தவிர,

மத்திய ,மாநில அரசின் உளவுத்துறையில், தனித்தனியாக டீம் அமைத்து ,இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகளின் இலவச பொருட்கள், ஓட்டுக்கு பணம், போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும்.

இது தவிர, மகளிர் சுய உதவிக் குழுக்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்துவதை கண்காணிக்க இந்த சுய உதவிக் குழுக்களுக்கு யாராவது பணம் கொடுக்கிறார்களா என்பதை ஒவ்வொரு தொகுதியிலும் உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்.

மேலும்,திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் போது, எம் எல் ஏ வி. ஜி. ராஜேந்திரன் அவருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கிறார் என்றால், திமுகவினர் இதையெல்லாம் சும்மா செய்ய மாட்டார்கள். அவர்களிடம் காரியம் இரு ஆக வேண்டும் என்றால், காலை பிடிப்பார்கள். தேவையில்லை என்றால், ஏட்டி உதைப்பார்கள். இது போன்ற ஒரு மிக கேவலமான அரசியல்வாதிகள், வேறு எந்த கட்சியிலும் இருக்க மாட்டார்கள்.
அதே போல் தான், அடுத்தது இதற்கு தோழமை கட்சியான திருமாவளவன் கட்சியிலும் இதைவிட மோசமானவர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நாட்டில் அரசியல்வாதி என்று சொல்வதற்கு அர்த்தமற்றவர்கள். யாரோ ஒரு சிலர் இருக்கலாம். ஆனால், பொது வெளியில் பேசும்போது கூட அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்காத ஒரு கூட்டம்.

மேலும், அரசியல் தெரிந்தவர்கள் யாரும் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியலில் ஆ ,இ, தெரியாதவன் எல்லாம் அரசியல்வாதி என்கிறான். இந்த மக்களுக்கு அரசியல் தெரியாது.

ஆனால் இவர்கள் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படும் போது தான் , அவர்களைப் பச்சை வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மக்கள் புலம்புவது இது மோசமான ஆட்சி, இவர்கள் மோசமானவர்கள், மக்களே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். மட்டம்
மேலும்,தேர்தல் ஜனநாயகப்படி நடத்த வேண்டும் என்றால், திமுகவிற்கு ஆதரவானவர்களை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ,தேர்தல் ஆணையத்திற்கு வைத்துள்ள கோரிக்கை .