
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்தே செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மெட்ரோ ரயில் துவக்க விழாவில் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, இருவர் கைகள் இணைத்தே திட்டத்தை துவக்கி வைத்துள்ளனர். மேலும்,

இவ் விழா ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற போது, தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடி இடம், தமிழ் மொழியை வழக்காடு மொழியாக சென்னை உயர்நீதிமன்றத்தில், கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளார்.
தவிர,கோதாவரி, காவேரி, நதிகள் இணைப்பு திட்டத்தை உருவாக்க கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 5110 கோடியை தருமாறு கேட்டுக் கொண்டார்.
இது ஒரு நல்ல விதமான வாய்ப்பு . முதல்வர் விஜய் இந்த வாய்ப்பை மக்கள் நலனுக்காக தமிழக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். இது அரசியல் கடந்து தமிழக நலன் மட்டுமே கருதி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. மேலும், கடந்த
திமுக ஆட்சி !மக்களுக்காக ஆட்சி நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தால்! ஆட்சியில் இருந்த ஐந்தாண்டு காலம், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து இருக்காது.

ஆனால், அவர்களுக்காக ஆட்சி நடத்தும் போது, அது மோதல் போக்குடனே கடந்த ஐந்தாண்டு காலத்தையும், வீணடித்து விட்டார்கள். இப்போது விஜய் ஆட்சியிலும், அது போன்று இருக்க வேண்டும் என்று தான் தற்போதும், திமுகவுடன் இருந்த கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள் ,விசிக, காங்கிரஸ் ,போன்றவை நினைக்கிறது.

மேலும்,இவர்களுக்கு மக்களுக்கான நல்லாட்சி என்ன என்பதே தெரியாது. ஊடகங்களில் பேசிவிட்டு ,குறையை சொல்லி விட்டு, அல்லது இட்டுக்கட்டி அரசியல் பேசி விட்டு, போவதுதான் இவர்களின் வேலை. இதையும் செய்தி என்று தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மக்களிடம் சொல்லி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் அதிகாரம் பத்திரிகை என்பது மக்களுக்காக என்பதை மக்களிடம் தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, மத்திய மாநில அரசின் செய்தி துறைக்கும், பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது. என்னடா இது? அவ்ளோ பெரிய பத்திரிகையா? என்று கூட சில பத்திரிக்கை நிருபர்கள் கேள்வி எழுப்பலாம் .

இது அவர்களுக்கும் சேர்த்து தான் இந்த பாடம் ! ஏனென்றால்? இவர்களுக்கு தெரிந்தது, பெரிய பத்திரிகை என்பது பணம் தான், பெரிய பத்திரிக்கை! அதாவது ஒரு பத்திரிகையின் முதலீடு ஒரு 500 கோடி, நூறு கோடி ,ஆயிரம் கோடி ,இதுதான் பெரிய பத்திரிக்கை என்று எனக்கு அது பெரிய பத்திரிகை.

ஆனால், உண்மை அது இல்லை. உண்மையான செய்தியும், மக்களுக்கு தேவையான செய்தியும், மத்திய மாநில அரசுக்கு என்ன சொல்ல வேண்டும்? என்ற உண்மை செய்தியும் ,அதுதான் பெரிய பத்திரிகையின் செய்தி.
மேலும்,ஆயிரம் கோடி பத்திரிக்கையில் உதவாத செய்திகள், உண்மையற்ற செய்திகள், மக்களுக்கு தேவையற்ற செய்திகள், ஆட்சியாளர்களை புகழ் பாடி ,அவர்களிடம் சலுகை, விளம்பரங்களை அனுபவிக்கும் செய்திகள் போட்டு விட்டால் ,அது பெரிய பத்திரிகை அல்ல.

இது பல பத்திரிக்கைகளை படிப்பவர்களுக்கு ,மக்களைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு, சமூக நலனைப் பற்றி பேசுபவர்களுக்கு, நாட்டின் நன்மை, தீமைகளை பற்றி சிந்திக்கும் அறிவாளிகளுக்கு, இந்த உண்மை தெரியும்.

எனவே ,தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் மூலம் நிதி கிடைத்தால் தான், திட்டங்களை செயல்படுத்த முடியும். இப்போது முதல்வர் விஜய் பிரதமர் மோடியிடம் நிதியை 5000 கோடிக்கு மேல் கேட்டுள்ளார்.அப்படி என்றால், மத்திய அரசின் உதவி தேவை. மாநில அரசுக்கு தேவை.
ஆரம்பத்தில் இருந்து, திமுகவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி மூலம் ,இந்த உண்மைகளை எல்லாம் சொன்னாலும், அவர்களுடைய நோக்கம் கொள்ளையடிப்பதில் இருந்ததே தவிர, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்ற எண்ணம் இல்லை.

மேலும்,விஜய்யிடம் எண்ணம் இருக்கிறது. ஆனால், அவருக்கு அடிப்படையில், அவருடைய குடும்ப வாழ்க்கையும், தொழிலும் சினிமாவாக இருந்து விட்டதால் ,அரசியல் என்பது அவருக்கு அனுபவம் குறைவாக இருக்கிறது.
தவிர ,இவர்களுடைய மந்திரிகள் சொல்வதை கேட்பதா? அதிகாரிகள் சொல்வதை கேட்பதா? யார் சொல்வதை கேட்பது? இந்த மனநிலையில் முதல்வர் விஜய் இருக்கிறார். மேலும்,மந்திரிகளே புரியாமல் இருக்கிறார்கள். அவர்களும் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது.

எம்ஜிஆரும் நடிகர் தான் ,ஜெயலலிதாவும் நடிகை தான் ,ஆனால், எம்ஜிஆரை விட ஜெயலலிதா திறமைசாலி, அறிவாளி, இது பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் சொன்ன உண்மை.

அதனால், ஒரு விதத்தில் விஜய் !மத்தியரசுடன், மோதல் போக்கை கடைபிடிக்காமல், மோடியுடன் இன்றைய மெட்ரோ ரயில் திட்டத்தை இருவரும் இணைந்து துவக்கி வைத்தது, மோடியுடன் கலந்து ஆலோசிப்பது, தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது.