தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை முதலமைச்சர் ரேஞ்சுக்கு சர்வே செய்திகள் சொல்வது உண்மையா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கூட ஆட்சியைப் பிடிக்க பல வருடங்கள் அரசியலில் இருந்து தான், பிறகு கட்சி ஆரம்பித்து அந்த கட்சி கூட உடனே ஆறு மாதத்திலே,,எட்டு மாதத்திலே,ஆட்சியைப் பிடிக்கவில்லை.

ஏனென்றால்,எம்ஜிஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு வேற எந்த நடிகருக்கும் தமிழ்நாட்டில் இல்லை.அப்படிப்பட்ட அவராலே தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதத்தில் ஆட்சி பிடிக்கவில்லை.ஆனால்,

நேற்று கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களில் ஆட்சியைப் பிடிக்கின்ற அளவுக்கு மக்கள் செல்வாக்கு விஜ்ய்க்கு எப்படி வந்துள்ளது? என்பது தான் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தின் பேச்சு.மேலும்,

விஜய் தற்போது உள்ள நிலையில் 5% சதவீதம் வாக்குகள் வாங்கினாலே மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் அவர் பின்னால் அவருடைய ரசிகர்கள் தான் இருக்கிறார்கள்.

அதிலும் அது அனைத்தும் வாக்கு வங்கியாக மாறுமா? என்பது சந்தேகம் தான். அதில் பாதி பேர் வாக்களிக்கலாம்.இவ்வளவுதான் விஜய்யின் வாக்கு வங்கி. இதை வைத்துக்கொண்டு முதலமைச்சர் ரேஞ்சுக்கு சர்வே சொல்வது எப்படி உண்மையாகும்? மேலும்,

இது மக்களை ஏமாற்ற, அரசியல் வட்டாரத்தை ஏமாற்ற, இப்படிப்பட்ட செய்திகள் வெளிவருவது இதன் மூலம் மக்கள் ஏமாந்து விடப் போவதில்லை.

ஏனென்றால், இந்த முறை அரசியல் கட்சிகள் எல்லோருக்கும் கடும் போட்டி.இந்த போட்டியில் கூட்டணி கட்சிகளே ஜெய்ப்பது மிக மிக கஷ்டமானது.அந்த அளவுக்கு திமுக,,அதிமுக,,பிஜேபி இந்த மூன்று கட்சியின் இடையே தான் கடும் போட்டி இருக்கும் தவிர,

சீமான் ஏற்கனவே வாங்கிய 8 சதவீத ஓட்டுகள் கூட வாங்குவாரா?என்பது இந்த முறை கஷ்டமான ஒன்று தான்..இவர்களுடைய வாக்கு வங்கி எங்கே? யாரெல்லாம் பிடிப்பார்கள்?

அரசியல் தெரியாத மக்கள், போதைக்கு அடிமையானவர்கள், அவர்களிடம் தான் இன்றைய வாக்குகளை பிரிக்க அதிமுகவும், திமுகவும் பணத்தால் போட்டி போட்டு பிரிக்கப் போகிறது..மேலும்,

இந்த சூழ்நிலையில் அரசியல் பற்றி தெரிந்தவர்கள், படித்தவர்கள், யாருக்கு வாக்களிக்கலாம்? என்பதை ஒவ்வொருவரும் மனதிலே ஒரு தீர்மானத்தை வைத்திருக்கிறார்கள்..

அது தமிழ்நாட்டில் பிஜேபிக்கு 15 சதவீத வாக்குகள் பணம் கொடுத்தாலும்,விலை பேச முடியாத வாக்குகள்.. அது மோடிக்கு விழுகின்ற வாக்குகள். பிஜேபி, நிர்வாகிகளும் கட்சியிிினரும், மக்களிடம் நெருங்கி சமூக நோக்கத்துடன் அரசியல் செய்யவில்லை. அரசியல் கட்சியில் பேசுவதை தியாகமாக செய்தால் அல்லது வியாபார நோக்கத்துடன் செய்தால் எந்த கட்சியும் ஆட்சியைப் பிடிக்காது. சில தியாகங்களை செய்யும்போது தான் அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் படிக்காத மக்கள் அரசியல் தெரியாத மக்கள் வாக்குகளை,

பணம் கொடுத்தால்,யாருக்கு வேண்டுமானாலும்,சந்தையில் ஆடு மாடுகளை ஓட்டிச் செல்வது போல் ஓட்டிக் கொள்ளலாம்.

அதனால் 2026 தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிக, மிக கடுமையான போட்டி என்பதை உறுதி செய்துள்ளது. ஒருவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்றால்,அவருக்கு மக்கள் செல்வாக்கு,மக்களிடம் அணுகுமுறை, சேவை மூலம் செலவு செய்யக்கூடிய

மனப்பான்மை,அத்தனையும் இருந்தால் தான் 2026 தேர்தலில் ஒருவர் ஜெயித்து வெளிவர முடியும்.. மேலும், மக்கள் கடந்த காலங்களில் ஏமாந்து வாக்களித்தது போல, இந்த தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள். தவிர, அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை கூட யாரும் நம்ப மாட்டார்கள். இவர்களுடைய வாக்குறுதிக்கும், அரசியல் செயல்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை பாமர மக்கள் கூட அதை புரிந்து வைத்துள்ளனர்.

அதனால், அவ்வளவு எளிதில் தமிழ்நாட்டின் 2026 தேர்தல் இல்லை என்பதை உறுதியாக அனைத்து அரசியல் கட்சிகளும் நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *