
இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் .

தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக செயல்களைப் பற்றி பட்டியல் கொடுக்கட்டும்.

அந்த காலத்தில் அதாவது 1960 க்கு முன் உள்ள அரசியலில் ஈடுபட்ட குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் இருக்கிறது. இதை நீங்கள் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளலாம். அவர்கள் அரசியலில் கொள்ளை அடிக்க வரவில்லை.
இந்த சமூக மக்களுக்காக உண்மையாக உழைத்தவர்கள். அவர்களுக்கு கொள்ளை அடிக்கத் தெரியாது. மக்களை ஏமாற்றத் தெரியாது. குடிகாரர்கள் அரசியலுக்கு வரவில்லை. ஊரை ஏற்றுபவர்கள் அரசியலுக்கு வரவில்லை. இப்போது தெரிந்ததெல்லாம் அது ஒன்றுதான். மேலும்,எத்தனையோ எம்எல்ஏ கள் , மந்திரிகள் ,எம்பிக்கள், சாதாரண வாழ்க்கை வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்கள்.

இதை யாராவது தருவதற்கு எத்தனை பேர்? ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும், இருக்கிறார்கள்? அரசியல் கட்சி என்றாலே, ஒரு கூட்டம்! !அந்தக் கூட்டத்தை வைத்து அரசியல்! அதற்கு ஒரு தலைவன். அந்தத் தலைவன் என்ன சொல்கிறானோ, இந்த கூட்டம் அதை பாலோ செய்வார்கள்.

இந்தக் கூட்டத்தை வைத்து தான் அரசியல் அதிகாரம் பெறுவதற்கு கொடி பிடிக்கிறார்கள் ,கோஷம் போடுகிறார்கள் .மேலும், தற்போது, , மக்களிடம் நல்லவர்களாக வேஷம் போட நடிக்க ஆரம்பித்து, இவர்கள் அரசியலுக்காக நடிக்கிறார்கள். அதனால்தான், இன்று சினிமாவில் இருக்கிற நடிகர் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்கள். இதுவும், நம்முடைய நடிகர் கூட்டம் தானோ என்று ,அவர்களும் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
இது தவிர,ஒரு தனி மனித உழைப்பிலிருந்து, ஒரு சமூகத்தின் தொழில் நிறுவனத்திடம் இருந்து, பணத்தை வசூல் செய்து, பணம் பார்க்கும் தொழிலாக அதாவது பிசினஸ் வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள்.

ஒரு பத்து பேர் சேர்ந்து இல்லை, ஒரு அம்பதாயிரம் பேர் அல்லது ஒரு லட்சம் பேரை கூட வைத்துக் கொள்வோம். உண்மையை, பொய் என்று பேசிக்கொண்டு ,நாடகம் ஆடினால், மக்களை நம்ப வைப்பதற்கும், இந்தக் கூட்டம் துணை போகும் .

அடிதடிக்கு, ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டம் போடுவார்கள்,பேசுவார்கள், மைக்கில் கத்துவார்கள், இதை தொலைக்காட்சிகள், படம் பிடிப்பார்கள் ,பத்திரிகைகள் போட்டுக் கொண்டு, இதைப் பற்றி சோசியல் மீடியாவில் வேற பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், இவர்கள் நோக்கம் என்ன? எதற்காக இதை செய்தார்கள்? இதனால், சமூகத்திற்கு என்ன நன்மை? இந்த மக்களுக்கு என்ன நன்மை? இவர்களுடைய அரசியல் என்ன? பொதுநலம் பொதுநலம் என்று பேசி தங்கள் சுயநலத்திற்கு ,இவர்களுடைய விளம்பரத்தை தேடுவதற்கு அரசியல் செய்கிறார்கள். ஒரு பக்கம் கட்டப்பஞ்சாயத்து, இன்னொரு பக்கம் அரசியல் வியாபாரம், இந்த மக்களுக்கு அரசியல்! என்றால், என்னும் படிக்கவில்லை. அதனால் தான், இந்த கூட்டம் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

அதை விளம்பரப்படுத்துவதற்கு இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், மக்களை, அதுவும் உழைக்கும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த அரசியல் கட்சி! எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் என்ன? அதைத் தெரிந்து ,மக்கள் என்ன நன்மையை அடையப் போகிறார்கள்? மேலும்,

விஜய் கூட்டத்திற்கு போய் 40 பேர் செத்தார்கள். இந்த சினிமா மோகம் ,உங்களுடைய உயிரையே பனையம் வைத்து ஒரு நடிகரை பார்க்க வேண்டும் ?என்ற ஆசையா? மக்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள்? என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

உழைக்கின்ற மக்கள் ,எப்போது சினிமாக்காரர்களின் நடிப்பை பார்த்து, ஏமாந்து தலைவர் ஆக்கிக் கொண்டாடுகிறார்களோ ,அப்போதே இவர்களின் முன்னேற்றம் கேள்விக்குறியாகிவிட்டது. அது மட்டுமல்ல சினிமா ரசிகர்களாக இருக்கலாம் தவறில்லை .ஆனால், அந்த ரசிகர்கள் சினிமா பைத்தியமாக தான் இருக்கக் கூடாது.மேலும்,
கேரளாவில் சினிமா படத்தை பார்ப்பார்கள்.சினிமா பார்ப்பது தவறல்ல ,பாருங்கள். அவர்களைத் தலைவராக்கி கொண்டாடுவது , தவறு. எம்ஜிஆர் சினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தார். அவரைப் போல், சினிமாவில் இனி ஒரு நடிகர் பிறப்பது கடினம். அவர் சினிமா வாழ்க்கையில் முடி சூடா மன்னன் தான். அப்படிப்பட்ட கதை, பாடல்கள் ,இசை ,காலம் கடந்து நிற்கிறது. அப்படிப்பட்ட எம்ஜிஆர்!

அரசியலுக்கு வந்து, அவர் ஒன்றும் பெரிய நேர்மையான, அரசியலை உழைக்கும் மக்களின் அரசியலை, உயர்த்தவில்லை. மாறாக ஊரை ஏமாற்றுபவர்கள் தான் ,கோடீஸ்வரர்களாக ஆக்கிவிட்டு போனார். தன்னுடைய கட்சிக்காரர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கிய பெருமை எம்ஜிஆர் ,கருணாநிதி, ஜெயலலிதா, இன்று ஸ்டாலின் வரை நீள்கிறது. இதற்கு காரணம், மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லாதது. அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாதது அவர்களுடைய தவறு.மேலும்,

இன்றைய கலியுகத்தில் கெட்டது தான் அதிகமாக இருக்கிறது. நல்லது மிக, மிக ,குறைவாக தான் இருக்கிறது. ஒருவனை பள்ளத்தில் தள்ள பல கெட்டதுகள் தானாக ஓடிவரும் . ஆனால், ஒருவனை வாழ வைக்க எதுவும் வராது. அந்த அளவுக்கு மோசமான செயல்பாடுகள், தமிழகம் போய்க்கொண்டிருக்கிறது. காரணம்,

அரசியல் சுயநலமாகி விட்டது. அரசியல் கட்சிகள் சுயநலமாகி விட்டது. இந்த மந்திரிகள், அரசு ஊழியர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றம் செய்ய ,அதையும் வியாபாரம் ஆகிவிட்டார்கள். ஒருவர் வேலை செய்கிறார் .ஆனால், அவர் ஊருக்கு அல்லது அவர் மாவட்டத்திற்கு ,அந்தப் பணியை கேட்கும் போது ,எத்தனை லட்சம் ?என்று பேரம் வியாபாரம் ஆகிவிட்டது.
எனக்குத் தெரிந்த நபர் ,பாவம் வயதும் ஆகிவிட்டது .அவருக்கு ஓய்வு இன்னும் ஒரு வருட காலம் தான் இருக்கிறது .அவர் இருக்கும் அந்த பதவிக்கு ,அவர் மாவட்டத்திற்கு செல்ல 50 லட்சம் கேட்டார்கள் என்று சொன்னார். என்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது.

இந்த ஒரு வருட சம்பளம் வாங்கிக் கொண்டு ,இங்கே இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன் என்று சொன்னார். இப்போது தெரிகிறதா ?இந்த அரசியல் எவ்வளவு சுயநலமாக மாறிவிட்டது? அது மட்டுமல்ல, இந்தப் பத்திரிக்கை துறை எவ்வளவு சுயநலமாக மாறிவிட்டது ?என்பதற்கு மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை ஒரு உதாரணம்.
எத்தனையோ செய்திகள் இவர்களுக்கு இணையதளத்திலும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மூலமாக சொல்லி புரிய வைத்திருக்கிறேன். ஆனால், உயர் அதிகாரிகளுக்கும், இந்த அரசுக்கும் ,அது புரியவில்லையா? இன்று மக்களின் வாழ்க்கை போராட்டமாக மாறி இருப்பதற்கு முக்கிய காரணம், இந்த சுயநல அரசியல்! கட்சிகளின் சுயநலம். உண்மை தெரியாத மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓட்டுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ,ஓட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

நீங்கள் உண்மையை பற்றி சிந்திக்க வேண்டும். ஊடகங்கள் கூலிக்கு வேலை செய்து கொண்டிருக்கிறது. எனக்கு மட்டும் அரசின் சலுகை, விளம்பரங்கள் கிடைத்தால் , அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதை நான் செய்கிறேன். அதுதான் தற்போதைய பத்திரிகை ,தொலைக்காட்சிகளின் பொது நலம்.
அதனால், இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள், பொதுநலத்தை விட்டு அதுவும் சுயநலத்திற்குள், கூலிக்கு மாரடைக்கும், கூட்டங்களாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகைகளே இப்படி இருக்கும்போது, செய்தியாளர்களை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இதற்குள் அரசியல் !அவர்களுடைய முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய சுயநலத்திற்காக அரசியல்! என்னுடைய சுயநலத்திற்காக அரசியல் கட்சி! என்னுடைய சுயநலத்திற்காக பத்திரிக்கை! என்னுடைய சுயநலத்திற்காக சினிமா! என்னுடைய சுயநலத்திற்காக மக்கள், எந்த அளவிற்கு இந்த மாற்றம் ?எதனால் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

இது மக்களின் குற்றமா? அல்லது அரசியல் கட்சிகளின் குற்றமா? அல்லது அரசியலின் குற்றமா? யார் குற்றம்? சினிமாவை பாருங்கள். இளைஞர்களே ! சினிமா நடிகர்களை வாழ்க்கைக்குள், வீட்டுக்குள், கொண்டு வராதீர்கள். அது உங்களுடைய வாழ்க்கையை அழித்துவிடும்.
அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சினிமாவை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இன்றைய உழைக்கும் மக்கள், முன்னேற முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? ஊர ஏமாற்றும் கும்பல் !அரசியல் கட்சிகளில் பொதுநல சேவையாளனாக தன்னை காட்டிக்கொண்டு, ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய மூலதனம் பேச்சு, அவர்களுடைய மூலதனம் உடம்பு. கொள்ளையடிப்பதற்கு அரசியல் ,ஊரை ஏமாற்றுவதற்கு அரசியல், ஒருவனை பழி வாங்குவதற்கு அரசியல் ,இப்படி அரசியல் என்பது சுயநலமாக நிற்கிறது.
பொதுநலத்திற்காக வந்த அரசியல்! இன்று சுயநலத்திற்காக, அது மாறிவிட்டது. இந்த மாற்றத்திற்கு யார் காரணம் !மக்கள்தான். மக்கள்தான் குற்றவாளி. இந்த அரசியல் கட்சியினர் நிலை பற்றி சிந்திக்காத வரை ,நீங்கள் யாருமே முன்னேற முடியாது.
இந்தப் பத்திரிகை, தொலைக்காட்சிகள் சொல்லுகின்ற செய்திகளை பற்றி, நீங்கள் சிந்திக்காத வரை உங்கள் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் தொடரும்.

உண்மையை சொல்லக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சி எங்கே என்று தேடுங்கள்? எவனோ பேசுகிறான் ,அவனை விளம்பரப்படுத்துகிறார்கள். அவன் பேச்சில் உண்மை இருக்காது. அதனால், மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது .ஆனால், இந்த பத்திரிகையின் வியாபாரமும், தொலைக்காட்சியின் வியாபாரமும், நீங்கள் பார்ப்பதால் நன்றாக இருக்கும்.
ஆனால்,உண்மை மட்டுமே உங்களை வாழ வைக்கும். பொய் உங்களை நட்டாற்றில் விட்டு ,விட்டு போய்விடும். எத்தனையோ அரசியல் கட்சிகளை அல்லது கட்சியினரே நானும் விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிப்பது என் நோக்கம் அல்ல.

நான் வந்த பத்திரிக்கை வேலைக்கு மக்களிடம் சொல்ல வேண்டிய உண்மையை சொல்ல வேண்டியது என் கடமை. நீங்கள் படித்து ,ஏற்பது, விட்டு விடுவது உங்கள் கடமை.மேலும்,இந்த உண்மையை படித்தவர்கள், படிப்பவர்கள் வாழ்க்கை என்ற பாடத்தில் வெற்றியாளராக மாறி ஒரு வாய்ப்பு.நீங்கள் சந்தோஷமாக வாழலாம்.

ஆனால், இந்த பொய்களின் பின்னால் சென்றால் ,நீங்கள் தோல்வியாளராக தான் உங்கள் வாழ்க்கை முடியும். பணம் என்பது எப்படியும் சம்பாதிக்கலாம் !என்று இந்த அரசியல் கட்சியினர் லட்சியம், கனவு. ஆனால், அந்தப் பணம் சந்தோஷத்தை தராது. அது வாழ்க்கை முழுதும் போராட்டமாகவே உன்னை வைத்துக் கொண்டிருக்கும். நீ காரில் போகலாம், சொகுசு வாழ்க்கை வாழலாம், ஆனால், முள்ளும் மேல் தான் நிற்க வேண்டும்.
எனவே, மனிதன் வாழும்போது அவன் எப்படி சம்பாதித்தான்? எப்படி வாழ்ந்தான்? என்பதுதான் அவன் பாடையில் போகும் போது அவனுடைய கணக்கு .இந்த உண்மை பலருக்கு புரியும். சிலருக்கு புரியாது .புரிந்தவர்களுக்கு புரியட்டும். புரியாதவர்களை பற்றி கவலை இல்லை ……!உழைப்பவன் முன்னேற்றம்? படித்த இளைஞர்களின் இலட்சியம்! கனவு …?