தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்! மக்கள் நலனை மறந்து, அரசியல் வியாபார நலனை கையில் எடுத்தால்! மக்களுக்கான அரசியலை இவர்களால் கொடுக்க முடியுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

திமுக முழுக்க, முழுக்க பணத்தை நம்பியும் ,அரசியல் தெரியாத மக்களிடமும், குடிகாரர்களிடமும், கூலி வேலைக்கு போகின்ற மக்களிடமும் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ,இந்த அரசியல் வியாபாரத்தை செய்ய ஆரம்பித்துவிட்டது.

அது அரசியல் தெரியாத மக்களுக்கு, இலவச பொருட்களை கொடுத்தும், இலவசங்களை கொடுத்தும், இந்த 2026 தேர்தலில் அதன் முழு வியாபார அரசியலை காட்டப் போகிறார்கள். இது தவிர, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதியை கொடுப்பார்கள். இனி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ,அரசியல் தெரிந்தவர்கள் நம்ப மாட்டார்கள். ஒரு சதவீதம் கூட தேர்தல் வாக்குறுதியில திமுக செய்யவில்லை.

மேலும்,அதிமுக எடப்பாடி பழனிசாமி கூட்டணியால், மட்டுமே அவர்களுடைய வெற்றி இருக்கும். கூட்டணி அமைக்கின்ற தேர்தல் யுக்தியாலும், தங்களுடைய அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளையும், ஒருங்கிணைத்து கட்சியை வழி நடத்தினால் மட்டுமே, இது வெற்றி கூட்டணியாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா போல், நினைத்துக் கொண்டு செயல்படுவது அந்தக் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளும் மூத்த நிர்வாகிகளும் ,ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் ,ஒரு பக்கம் உட்கட்சி பிரச்சனை போய்க்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால்,

எடப்பாடி பழனிசாமி முழுக்க, முழுக்க ,ஜோதிடத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்கிறார் என்று தான் தெரிகிறது. அது தேவையாக இருக்கலாம். ஆனால், அரசியலில் இருக்கக்கூடிய நெளிவு, சுளிவுகள், எல்லாம் ஜோதிடத்தில் ,ஜோதிடர்கள் சொல்ல மாட்டார்கள். ஒரே வரிகள் சொல்வார்கள், உங்களை யாரும் கட்சியில் ஜெயிக்க முடியாது. அப்படி போட்டி, போட்டாலும், தோல்வி அடைவார்கள். இருக்கலாம், ஆனால்,

எல்லோரும் போட்டி, போட்டு உங்களோடு சண்டையிட்டு பிரிந்தால், அது அதிமுகவிற்கு பலவீனம். இது ஜோதிடர்களுக்கு தெரியாது. உங்கள் பலத்தை நீங்களே, குறைத்துக் கொள்ளாதீர்கள்.

மேலும், 2026 தேர்தல் ஒரு கடுமையான போட்டித் தேர்வு என்பதை பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதனால், விட்டுக் கொடுத்து தான், செயலாற்ற வேண்டும். நீங்கள் கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களுக்கு பணிந்து ,எல்லாவற்றையும் சரி செய்து, வெற்றியை எடுக்க வேண்டிய இடத்தில், அதாவது எதிர்க்கட்சிகளுடனும், போராட வேண்டும் .கூட்டணி கட்சிகளுடனும், போராட வேண்டிய கட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இருக்கிறது.

மேலும்,இந்த சூழ்நிலையில் விஜய்க்கு கூட்டம் சேர்வது வேறு, தேர்தலில் வெற்றி பெறுவது வேறு, தேர்தல் களம் என்பது அது ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக்கூடிய களம் தான் ,தேர்தல் களம். மேலும் ,

சினிமா மோகத்தால், கூடுகின்ற கூட்டத்தில், வருகின்ற கூட்டம் வேறு. அந்தக் கூட்டத்திற்கு வருபவர்கள் ,,அத்தனை பேரும் வாக்களிப்பார்களா? அது நிர்ணயிக்க முடியாது. தவிர, வராதவர்களும் வாக்களிப்பார்கள். வந்தவர்களும், 100% வாக்களிக்க மாட்டார்கள்.

மேலும்,மக்களின் மன உறுதி எந்த அளவுக்கு இருப்பார்கள் ?என்று தெளிவாக யாராலும், சொல்ல முடியாது. ஒரு பக்கம் பணத்தைக் காட்டினால் ,இலவச பொருட்களை காட்டினால், காலில் விழக்கூடியவர்கள் இருப்பார்கள். சில பேர் எதை காட்டினாலும், அதற்கு டாடா காட்டுபவர்களும், இருப்பார்கள். அது மட்டுமல்ல,

இந்தத் தேர்தல் படித்தவன் ஓட்டு யாருக்கு போடலாம்? என்று சிந்திப்பான். அரசியல் தெரிந்தவன் ஓட்டு யாருக்கு போடலாம்? என்பதை சிந்தித்து ஓட்டு போடுவான் . ஆனால், அரசியல் தெரியாதவன் யார்? எதைக் கொடுப்பான்? அதை வாங்கிக் கொண்டு ஓட்டு போடலாம் என்று ஓட்டு போடுவான்.மேலும்,

குடிகாரன் நமக்கு யார் தினம் தோறும், குடிப்பதற்கு கொடுப்பான்? அவன் அதற்கு அடிமையாகி ஓட்டு போடுவான். இப்படி ஒவ்வொருவரும், அவரவர் எதிர்பார்ப்பு எது? என்பது அவரவர் மனதை பொறுத்து இருக்கிறது. இதைத் தெரிந்து அரசியல் கட்சியினர் ஓட்டு அரசியலை செய்கிறார்கள். ஆனால்,

அரசியலைப் புரிந்து, மக்கள் எதை விரும்புகிறார்கள்? எப்படிப்பட்ட அரசியல் தேவை? இவர்களால் அதை கொடுக்க முடியுமா ?இப்போது தான் அரசியல் தெரிந்தவர்கள் ,இப்படிப்பட்ட கேள்விகளை ,இந்த ஆட்சியாளர்களை நோக்கி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,அதில் எந்த அரசியல் கட்சி தகுதியானது? எந்த அரசியல் கட்சித் தலைவர் அதற்கு தகுதியானவர்? எந்த அரசியல் கட்சி! ஊழலுக்கு எதிரானவர்? யார் மக்களுக்காக செய்யக்கூடியவர்? இதை நோக்கி தான் ,தமிழகத்தின் அரசியல் களம்.

மேலும்,இந்த களத்தில் விஜய் உங்களுடைய நிலைப்பாடு ஊழலுக்கு எதிராக பேச்சில் தான் இருக்கிறது . ஆனால், ஊழலுக்கு எதிராக களத்தில் நின்று போராடவில்லை. இருப்பினும், திமுகவின் ஊழல் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்கிறீர்கள். அது மக்களுக்கு தெரிகிறது. 2026 தேர்தல் களம் ,தமிழ்நாட்டில் போட்டி கடுமையானது.மேலும்,

உங்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள், அதாவது தேர்தல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி, அவர் அரசியல் கட்சிகாரர்கள் நினைப்பது போல், பேசிக் கொண்டிருக்கிறார்.மேலும்,

பெரிய பத்திரிகைகள் சொல்வதெல்லாம் ,அவர்களுடைய வியாபார வருமானத்தை ஒட்டி தான் இருக்குமே ஒழிய, அதில் உண்மை இருக்காது. இவர்கள் எந்த அரசியல் கட்சி ,ஆட்சி வந்தால், நமக்கு லாபம் என்று கட்சிக்காரர்கள் நினைப்பது போல் தான், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் இருந்து வருகிறது.

மக்களுக்கு இன்னும் அரசியலைப் பற்றி புரிதல் இல்லாமலே, இந்த பத்திரிகை செய்திகள் அவர்களை குழப்பிக் கொண்டிருக்கிறது. இதில் படித்தவர்களும் ,குழம்புவார்கள், படிக்காதவர்களும், குழம்புவார்கள்.

ஆனால், எல்லோரும் அரசியல் மாற்றம் தேவை என்று மட்டும் நினைப்பார்கள். அந்த மாற்றத்தை யாரால் கொடுக்க முடியும் ?என்பதை இந்த பத்திரிகைகள் இன்னும் மக்களுக்கு தெளிவாக சொல்லவில்லை.

மேலும், உழைக்கும் மக்களுக்கு இந்த வியாபார அரசியல் முன்னேற்றத்தை தராது. அவர்கள் உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த ஆட்சியாளர்களின் அரசியல் நிர்வாகம் ஊழலும் ,அடாவடித்தனங்களும் ,பொது சொத்துக்கள் ஆக்கிரமிப்பும், இவர்கள் உயர்வைப் பார்த்துக் கொள்கிறார்களே ஒழிய, மக்களின் உயர்வுக்கு இந்த வியாபார அரசியல் மக்களை நசுக்குகிறது. மக்கள் ஏமாறுகிறார்கள்.

ஆனால், ஊரை ஏமாற்றுபவர்கள், அரசியல் கட்சி பெயர்களை சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களெல்லாம் பலமாக, வளமாக தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். இலவசமும், ஓட்டுக்கு பணமும் கொடுப்பது, மீண்டும் ஊழல் ஆட்சியை கொண்டு வந்து தவிர ,நேர்மையான ஆட்சி தர முடியாது. அதனால், உழைக்கும் நடுத்தர மக்கள் ,இந்த அரசியலை புரிந்து வாக்களியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *