
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால், வருங்காலத்தில் மனித சமுதாயம், வாழ்க்கையை வாழ்வதற்கு போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது . இப்போதும் அதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதிக வெயில் ,அதிக குளிர், அதிக மழை, இது எல்லாம் இயற்கையின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதைப் பற்றி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்பது தான் வேதனை. மேலும்,அரசியல் கட்சியினர் அது அதிமுகவாக இருக்கட்டும், திமுகவாக இருக்கட்டும், இந்த இரண்டு கட்சிகளால் ,கனிமவள கொள்ளை தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

மேலும்,இதை எந்த அளவுக்கு எடுக்க வேண்டும்? எந்த அளவுக்கு எடுத்தால் மனித வாழ்க்கைக்கு பாதிப்பு இருக்காது ?என்பதை சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் .அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. காரணம் ,ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ, கட்சிக்காரர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை தான் செய்ய வேண்டும் என்றால், படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வித்தியாசமே இல்லை .

இந்த உண்மைகள் எந்த பத்திரிக்கை, தொலைக்காட்சியிலும் வெளிவராது. அதை குற்றமாகவோ, குறையாகவோ நான் சொல்லவில்லை. பத்திரிக்கை துறை ஒரு கடல். மேலும்,குருடன் யானையை தடவிப் பார்த்து, ஒவ்வொருவருக்கும் எது பெரிது? என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேலையே பெரிய வேலை என்று செய்தியாளர்கள் நினைப்பு. இதில் எவ்வளவோ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது எல்லையற்ற கடல் போல் விரிந்து இருக்கிறது.

இருப்பினும், இந்த கனிம வள கொள்ளைக்கு யார் முக்கிய காரணம்? அதிகாரிகள் தான் முக்கிய காரணம். இதை நீதிமன்றமும், தற்போது தீர்ப்பளித்து விட்டது. உதாரணத்திற்கு விடையூர் கிராமத்தில் 5000 லோடு, ஓட்டுவதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அதற்கு உரிமம் வழங்கி உள்ளார். தவறில்லை. ஆனால், அந்த ஏரி நீர்வளத் துறைக்கு சொந்தமானது.
மேலும்,நீர்வளத் துறை அதிகாரிகள் 5000 லோடு எடுப்பதற்கு அதை அளந்து, எவ்வளவு ஆழம் ?எத்தனை அடி ? அகல, நீளம் என்பதை அந்த இடத்தில் அளந்து கல்லு போட்டு இருக்க வேண்டும். அடுத்தது ,அது சம்பந்தமான ஒரு தகவலையாவது அந்த இடத்தில், பொது மக்களுக்கு தெரியும் படி ஒரு விளம்பரப் பலகை வைக்க வேண்டும்.
இல்லை, ஒரு நாள் விட்டு, மறுநாள் வந்து எத்தனை லோடு போயிருக்கிறது? எவ்வளவு மண் எடுத்து இருக்கிறார்கள்? என்பதை அளவீடு செய்ய வேண்டும். அதுவும் இல்லை. மாவட்ட ஆட்சியர் ஆவது வாரத்திற்கு ஒரு முறையாவது வந்து, எந்தெந்த குவாரிகளில், எவ்வளவு மண் எடுக்கப்பட்டு இருக்கிறது? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இது தவிர, உரிமம் கொடுக்கப்பட்டது 5000 லோடுக்கு, அதை எடுக்க எத்தனை பொக்லின் தேவைப்படும்? ஆனால் ,13 பொக்லின் அங்கு இருக்கிறது. அதாவது ஒரு பொக்லின் 400 வண்டிக்கு லோடு செய்தாலே 5000 லோடு வந்துவிடுகிறது. அதாவது 400*13 =5200 . இந்த 13 பொக்லின் வைத்து இந்த ஏரி சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை ஓட்ட திட்டம் போட்டு தான் இத்தனை பொக்ளினா ? என்று இந்த கிராமத்தில் விவரமானவர்கள் கேட்கின்ற கேள்வி? மேலும்,

ஒரு கிராமத்தின் ஏரி என்பது அந்தந்த கிராம மக்களுக்கு அது (public property) இந்த பப்ளிக் ப்ராப்பர்ட்டியை ஏதோ ஒரு கட்சியில் அரை, குறை படிப்பு வைத்துக்கொண்டு, டிகிரி போட்டுக்கொண்டு ,அடியாளுக்கு தகுதியான திறமைகளை வைத்துக் கொண்டு, தங்களுடைய பிராப்பர்ட்டியாக ( He is thinking their own property) நினைத்துக் கொள்கிறார்கள்.

மேலும்,இதைப் பற்றி அங்கு வாழக்கூடிய பொது மக்கள், மற்றும் விவசாயிகள் மட்டும் தான் கவலைப்படுகிறார்கள். ஆனால், ஊரில் அரசியல் கட்சி பொறுப்புகளில் இருப்பதால், இந்த பப்ளிக் ப்ராப்பர்ட்டி எல்லாம் தங்களுக்கே உரிமையானது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணமே, கிராமத்தில் அரசியல் தெரியாது. குடிகாரர்களுக்கு தினமும், இரண்டு மது பாட்டில் கொடுத்தால், அதுவே பெரிது. இல்லையென்றால்,ஆயிரம், 500 கொடுத்தால், அது பெரிது. அவர்களை வைத்து கூட்டத்தை சேர்த்து, படித்தவன், தகுதியானவன், உழைப்பவன் ,இவர்கள் அத்தனை பேரையும் முட்டாளாக்க, இவர்கள் ஒரு அரசியல் செய்து பார்க்கிறார்கள்.
இதைவிட கொடுமை, இந்த ஊரிலே ஒரு கூட்டம் போட்டு, அந்தக் கூட்டத்திலே ஒரு ரேஷன் கார்டுக்கு பத்தாயிரம் சிலர் கேட்க, அதற்கு இவர்கள் 8000 தருவதாக தெரிவிக்கிறார்கள். இது எல்லாம் எப்படி இருக்கிறது? என்றால், நீ 5000 லோடு எடுக்க வந்தவன், ஒரு லோடு மண் விலை 8000 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

இந்த 8000 ரூபாய் அவர்களுக்கு பிச்சை கொடுத்து , பல கோடிகளை எடுக்க திட்டம் போடுகிறார்கள். இப்படி எல்லாம் இந்த கனிமவள கொள்ளையின் விவகாரம் ஊருக்கு, ஊருக்கு இது வித்தியாசமாக இருக்கிறது. மேலும்,இப்போது யாரெல்லாம் உடம்பு கனமாக வைத்திருக்கிறானோ, அவனெல்லாம் கிராமத்தில் பெரிய ஆள் ,அதிலும் கட்சியில் இருந்தால், ஏதோ தனக்கு மக்கள் பெரிய கவுரவத்தை கொடுத்து இருப்பது போல இவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் !அல்ல கைகள் 10 பேர் இருந்தாலே பெரிய ஆள் என்று இன்றைய போலி அரசியல்வாதிகளின் கனவு .

எப்படி அரசியல் கட்சி பத்திரிக்கையில் நிருபராக வேலை செய்பவர்கள் எல்லாம் ,கட்சிக்காரர்களுக்கு புரோக்கர் வேலை செய்து கொண்டு, தானும் பெரிய பத்திரிகை நிருபர் என்று பேசிக் கொண்டிருப்பார்கள் .அதே கதை தான் இதுவும். இதைவிட ஒரு கொடுமை, பத்திரிக்கை தொழிலுக்கு அர்த்தமில்லாதவன், எல்லாம் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். வழக்கறிஞர் தொழிலுக்கு தகுதி இல்லாதவன் எல்லாம், வழக்கறிஞர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறான்.

நாட்டில் போலிகளால் பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்? என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.இவர்களுக்கெல்லாம் தகுதி என்பது அரசியலில் தகுதி இல்லாமல், பதவிக்கு வந்து விடுகிறார்கள் அதேபோல் எல்லாவற்றையும் தகுதி இல்லாமலே, பெற்றுவிடலாம் என்பதுதான் இவர்களுடைய நினைப்பாக இருக்கிறது. தன்னுடைய உழைப்பு ,பணம், தியாகம், எதுவுமே இல்லாமல் கிடைக்கிறது அல்லவா? மேலும் இவர்களுக்கெல்லாம்,

பணம் இருந்தால், எல்லா தகுதியும், தன் காலடியில் வந்து நிற்கிறது என்று அதிகார போதையில் இருப்பவர்கள் பேசலாம். அப்படி எதுவும் வராது. மேலும்,இதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பது கூட தெரியாது. மேலும் இந்த போலிகளால், எப்படி எல்லாம் கிராமத்தில் பப்ளிக் பிராப்பர்ட்டியை (public property)யை காப்பாற்ற பொதுமக்களும், விவசாயிகளும் போராட வேண்டி இருக்கிறது? இது யாரிடம் என்றால், இன்றைய அரசியல் கட்சியினரிடம் இருந்து மக்கள் போராடுகிறார்கள்.
இந்த அரசியல் கட்சியினருக்கு மறைமுக ஆதரவாக அதாவது சப்போர்ட் (support) காவல்துறை இருப்பதால் தான் திமுகவினர் இந்த ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால், கரூரில், செய்தி எடுக்கச் சென்ற ஒரு செய்தியாளரை கொலை செய்யும் அளவுக்கு ஒரு எம்எல்ஏ தாக்கி இருக்க முடியாது. அவன் ஒரு நேர்மையான செய்தியாளராக இல்லையென்றால், அந்த செய்தியும் எடுத்திருக்க முடியாது.
இங்கே, காவல்துறை இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய குற்றம்? நீதிமன்றம் என்ன சொல்கிறது? யார் பேரில் தவறு இருக்கிறது? என்பதை ஆய்வு செய்துதான், நீங்கள் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவனையும் சேர்த்து எஃப் ஐ ஆர் போடுகிறார்கள் என்றால், காவல்துறையின் நேர்மை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

அதனால் தான், இப்போது ஒரு பத்திரிகை நிருபர் மீதே, இப்படிப்பட்ட பொய் வழக்கு போடுகிறார்கள் என்றால், அப்போது ஊழலுக்கு எதிராக எத்தனை பேர் நிற்பார்கள்? ஆனால், இவர்கள் போட்ட அந்த எஃப் ஐ ஆர் நிக்காது. அது மட்டுமல்ல,நீதிமன்றத்தில் நிச்சயம் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அந்த எஃப் ஐ ஆர் ஐ குவாஷ் செய்தால், அது அவருக்கு எதிராக திரும்பும். இதனாலே, பொதுமக்கள் பெரும்பாலும், ஏழை எளிய நடுத்தர மக்கள்,காவல்துறையில் சென்றால், நீதி கிடைக்கும் என்று அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

அது, விஷயம் தெரிஞ்சவர்களாக இருந்தால், எங்கெங்கு செல்ல வேண்டும்? என்பது தெரியும். ஆனால், தன்னுடைய உழைப்பை நம்பி வாழ்பவர்கள். இதற்காக செலவு செய்து கொண்டு, அவர்களால் போராட முடியாது. அது தான் உண்மை. இந்த வீக்னசை பயன்படுத்தி, இந்த அரசியல் கட்சியர்கள் பப்ளிக் பிராப்பர்ட்டியை எப்படி எல்லாம் சட்டத்தின் மூலம் ஏமாற்றி எடுக்கலாம்? என்பதுதான் இவர்களுடைய திறமை என்று நினைத்துக் செயல்படுகிறார்கள். மேலும்,

இதற்கு நீதிமன்றம் கடுமையான ஒரு உத்தரவு கொடுத்தும் கூட ,மாவட்ட ஆட்சியர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள் என்பது தான் எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு வேதனையாக இருக்கிறது. எனவே, மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவுக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். மேலும்,
கனிம வள கொள்ளையை தடுக்காவிட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பது உறுதி . அதன் விளைவு வருங்கால சந்ததிகளை வாழ வைக்க கனிம வள கொள்ளையை தடுப்பது ஒவ்வொரு பொது மக்களுக்கும் அதில் பங்கு உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும்,காற்று, நீர் ,நிலம், அதாவது மண், இது எல்லாம் நாம் எந்த அளவுக்கு அதை பாதுகாக்கிறோமோ, அந்த அளவுக்கு மனித வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை மாவட்ட ஆட்சியர்கள் உணர்ந்திருப்பார்கள். நீதிமன்றமும், மத்திய உளவுத் துறையும், இதை நன்கு புரிந்து கொள்வார்கள்.