தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முற்பிறவியில் அண்ணாதுரை !இப் பிறவியில் அண்ணாமலையா? – நடந்த ஒரு உண்மை சம்பவம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நான் கணக்கம்பட்டி சற்குரு பழனிசாமி சாமி ஐயாவின் குருபூஜையில் கடந்த ஆண்டு, எங்களுடைய மக்கள் அதிகாரம் பத்திரிக்கை,குரு பூஜைக்கு வந்த ஆன்மீக பக்தர்களுக்கு இலவசமாக சுமார் 500 பிரதிகளை கொடுத்து இருந்தோம். அப்போது அதில் சாமியின் சில ஆன்மீக கருத்துக்களை வெளியிட்டு இருந்தோம். மேலும்,

இந்த நிகழ்ச்சி முடிந்து சுமார் ஆறு மாத காலம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு சாமியார் ஒருவர் என்னுடைய புத்தகத்தில் உள்ள போன் நம்பரை பார்த்து எனக்கு போன் செய்கிறார். ஐயா நான் கணக்கம்பட்டி சுவாமி குருபூஜையில் உங்களுடைய மக்கள் அதிகாரம் புத்தகம் கிடைத்தது.உங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் சென்னை வந்திருக்கிறேன் என்று போன் செய்தார்.

சரி சாமி, உங்களை எங்கு வந்து பார்க்க வேண்டும்? என்று கேட்டேன்.அவர் நான் இரண்டு நாளைக்கு தான் இருப்பேன் என்றார். அதற்குள் பார்த்து விடுகிறேன் சாமி என்றேன். அவர் கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் வர சொன்னார். நானும் கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அவரைப் பார்த்தேன். அவர் கையில் மக்கள் அதிகாரம் புத்தகம் இருந்தது. அப்போ அவர் சாமி நீங்கள் எல்லாம் உண்மையை எழுதுகிறீர்கள்.இந்த புத்தகம் நன்றாக மக்களிடம் சென்றடைய வேண்டும்.

நீங்கள் எழுதுகிற உண்மைகள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று சொன்னார். அவரைப் பார்த்தால் பசியில் வாடுபவர் போல் தெரிந்தது. சாமி சாப்பிட்டீங்களா? சாப்பிடுறீங்களா?என்று கேட்டேன். அவர் எனக்கு சாப்பாடு எல்லாம் வேண்டாம். வாட்டர் பாட்டில், ஸ்னாக்ஸ் ஐட்டம், வாங்கி கொடுத்தேன் வாங்கிக் கொண்டார். அதற்கு முன் அரை மணி கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷனில் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.அப்பொழுது அவர் சொன்னது,போன பிறவியில் தமிழ்நாட்டில் பிறந்த அண்ணாதுரை தான், இந்த பிறவிகள் அண்ணாமலை . நான் அப்போது புரிந்து கொண்டேன்.

அண்ணாமலையின் அரசியல் வேகம், ஏதோ ஒரு பிறவியில் தொட்ட குறை இருக்கிறது. அந்தக் கணக்கை முடிக்க தான் அண்ணாமலை வந்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. மேலும்,அண்ணாதுரை வைத்து தான் திமுக,அதிமுக. அண்ணாதுரை இருந்த வரைக்கும் தான் திமுகவில் மக்களுக்காக செயல்பட்ட கட்சி. இந்த உண்மை,உண்மையான அந்த கால திமுக தொண்டர்களுக்கு தெரிந்த உண்மை.

மேலும், கருணாநிதி வந்த பிறகு அது அவரவர் சுயநலமாக மாறிவிட்டது.இப்போது அது கொள்ளையாக போய்விட்டது. அதன் பிறகு அதிமுக எம் ஜி ஆர் ஆல் நிறுவப்பட்டது. இருப்பினும்,எல்லோருமே அண்ணாவின் பெயரை தான் உச்சரிக்கிறார்கள்.

அண்ணாதுரையின் வாழ்க்கையும்,அரசியலும்,தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிப்படையான புத்தகம்.அவர் எதையுமே மக்களிடம் மறைக்கவில்லை.மறைத்து கூட மேடையில் பேசவில்லை. இது தவிர, அவர் தன்னுடைய பிறப்பிலிருந்து சாகும் வரை, எதையும் மறைத்து வாழவில்லை.வெளிப்படையாகவே பேசி வாழ்ந்து விட்டுப் போனார் என்பது தமிழக மக்களுக்கு தெரிந்த உண்மைதான்.

இங்கே என்ன நடந்தது? என்றால் அண்ணாவின் பெயரை சொல்லி இரண்டு கட்சிகளும், தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் அண்ணாவின் ஆத்மா நினைத்திருக்கும் அல்லவா? அதுதான் மீண்டும் பிறவி எடுத்து இன்று அண்ணாமலையாக வந்திருக்கிறது. இந்த அண்ணாமலை தான் அதிமுக, திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்பார்..வேறு யாராலும் வைக்க முடியாது.

ஏனென்றால் தமிழ்நாட்டு திமுக,அதிமுக இரண்டு கட்சிகளின் அண்ணா தான் ஆரம்பப் புள்ளி. தற்போது அது தமிழ்நாட்டில் கட்சிக்காரர்களின் சுயநலமாக இந்த கட்சிகள் மாறிவிட்டதால்,, அண்ணாமலை அதற்கு மாற்று சக்தியாக இருப்பார் என்று அவர் பேசும்போது தெரிந்து கொண்டேன்.

மேலும்,,அவர் நான் திமுக அறிவாலயத்தின் ஒரு,ஒரு செங்கல்லையும் பிடுங்கும் வரை இங்குதான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கட்சிகள் மீதும் அண்ணாவுக்கு நிச்சயம் மிகப்பெரிய ஒரு கோபம் தான்.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அரசியலில் வாழ்ந்து விட்டுப் போனேன். ஆனால் எதிர்பார்ப்பு மட்டுமே அரசியலாக மாற்றி விட்டார்கள்.

அது இன்று தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய ஊழலாக மாறிவிட்டது. அதனால், அண்ணாமலை அதிமுக,திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பது மாற்றுக் கருத்து இல்லை. சாமியாரும் அண்ணாமலை வருவார் என்று தான் சொன்னார். அவர் வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடுவுக் காலம் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். பார்ப்போம் இறைவன் கட்டளைப்படி தான் எல்லாமே நடக்கப் போகிறது அதை மீறி எதுவும் நடக்காது. இதை நம்புபவர்கள் நம்பட்டும். நம்பாதவர்களை பற்றி கவலை இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *