தமிழ்நாட்டில் சர்வதேச கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைதானது ,திமுகவுக்கு அரசியல் பின்னடைவு ஏற்படுமா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் இப்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு என் சி பி யால் ஜெய்பூரில் கைது செய்யப்பட்டுள்ளான். இவனுடைய கைதுக்கு, இன்று பல சோசியல் மீடியாக்களில், பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.மேலும், முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணி பொறுப்பில் இருந்துள்ளான் . அது மட்டுமல்ல ,ஸ்டாலின் குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்துள்ளான் என்பதை நமது பத்திரிகை, தொலைக்காட்சியில் தெரிவித்து வருகிறது .தவிர,

என்சிபி அதிகாரிகள் இந்த போதைப் பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு சினிமா ,ஹோட்டல் ,கொரியர் சர்வீஸ் ,அரசியல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்து வந்துள்ளான் .கடைசியாக உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா எடுத்த படம் மங்கை என்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . தமிழகத்தில் இந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போலி பாஸ்போர்ட் மூலம் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்துள்ளான்? இவனுடன் யாரெல்லாம் வெளிநாடுகளில் தொடர்பில் இருக்கிறார்கள்? தீவிரவாதிகள் முதல் போதைப்பொருள் கடத்தல் கும்பல்,  அரசியல் புள்ளிகள், சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் வரை இந்த ஜாபர் சாதிக்கின் களவாணி கூட்டங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். மேலும்,

 இவர்கள் அனைவருமே தமிழ்நாட்டின் சமூக அக்கறை உள்ள நபர்களாகவே கார்ப்பரேட் மீடியாக்களில் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். இப்போதாவது பொதுமக்களுக்கும், செய்தித்துறைக்கும் மக்கள் அதிகாரத்தில் அடிக்கடி கார்ப்பரேட் மீடியாக்கள் பொய்களை உண்மையாக விளம்பரப்படுத்திக் கொண்டுள்ள இச் சம்பவத்தின் மூலம் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிற இந்த உண்மை புரியுமா? அப்போது நல்லவனாக காட்டிக் கொண்டு, இப்போது குற்றவாளியாக காட்டிக் கொண்டு இருப்பது ,இது தமிழ்நாட்டில் உள்ள ஏழு கோடிக்கு மேல் உள்ள மக்களையும் ஏமாற்றும் வேலை தான் தொலைக்காட்சி, பத்திரிகைகளின் வேலையா ?மேலும்,

அரசியலில் திமுக ஜாபர் சாதிக் யார் ?அவருடைய பின்னணி என்ன? எதுவும் தெரியாமல் ,இவருக்கு அயலக அணி பொறுப்பை கொடுத்து விட்டார்களா? அல்லது தெரிந்து கொடுத்தார்களா? மேலும், கடத்தல் மன்னன்ஜாபர் சாதிக்கு அயலக அணி பொறுப்பு, திருடன் கையில் சாவி கொடுத்தது போல் ஆகிவிட்டது. இது தவிர, இவன் முதல்வர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இவர்களுடைய குடும்பத்தினருடன் மிக நெருங்கிய உறவில் இருந்துள்ளான், இதுதான் மத்திய உளவுத் துறைக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறதாம் .இது திமுகவிற்கு ஒரு பக்கம் கலக்கத்தையும் ,அவன் என்ன பதில் சொல்வானோ என்ற அச்சத்திலும் ,வேதனையிலும் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும்,

 ஸ்டாலின் குடும்பம் ஜாபர் சாதிக்கை என்னென்ன வேலைக்கு இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் ?அவன் கட்சி அதிகாரத்தை எந்தெந்த வேலைக்கு பயன்படுத்திக் கொண்டான்? இதேபோல், திருமாவளவன் ஜாபர் சாதிக் தம்பி சலீமூக்கு கட்சியின் மாநில பொறுப்பை கொடுத்து, கைது செய்தவுடன் அவரை நீக்கிவிட்டார் .அதுவரையில் இவர்களுக்குள் இருந்த நெட்வொர்க் என்ன ?என்னென்ன? வேலைகள் தமிழ்நாட்டில் அரங்கேறியது? மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழ்நாட்டில் கேள்விக்குறியானது? போதைப்பொருள் அதிக அளவில் புழங்கியது? இவையெல்லாம் அரசியல் பின்னணியா? அல்லது அரசியல் கட்சி பின்னணியா? என்பது குறித்து தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வு செய்து வருகிறது.

 தவிர, சினிமாவில் இவருடைய நெருங்கிய நண்பர் அமீர் இப்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருகிறார். இந்த சினிமா பிரபலங்கள் நெட்வொர்க் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு, நல்ல விஷயங்களை படம் எடுத்துக் காட்டாவிட்டாலும், இப்படிப்பட்ட சமூக குற்றவாளிகளுடன் சேர்ந்து படம் எடுப்பது, இயக்குனராக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது எல்லாம், தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி ,இவர்கள் அறிவாளிகளாக காட்டிக் கொண்டிருந்த வேலைகள் தான்.

 இதில் ஒரு செய்தியை ‌ சில தினங்களுக்கு முன் மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டிருந்தேன் . இறைவன் மிகப் பெரியவன். தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி விட்டார்கள். ஆனால், இறைவனை முட்டாளாக்க நினைக்கும் போது தான், இறைவன் மிகப் பெரியவன் என்பதை இவர்கள் அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறார் .மேலும், ஒரு பக்கம் திமுக பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்தது, இந்த கடத்தல் கும்பல் தைரியத்திலா ? தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சி செய்த காலத்தில் கூட ,மத்திய அரசை பகைத்துக் கொள்ள மாட்டார்.

அவருடைய ராஜதந்திரம் தட்டிக் கொடுத்து, அவர்களை புகழ்ந்து காரியத்தை சாதித்துக் கொள்வார். ஸ்டாலினுக்கு மக்கள் அதிகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இருக்காது என்று செய்தியை வெளியிட்டிருந்தேன். அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இது போன்ற பின் விளைவுகள் அரசியலில் இவர்கள் சந்திக்கும் போது தான், இப்போது பிஜேபி ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அதிமுக, இப்ப பிரச்சினையை கையில் எடுத்து அரசியல் செய்யப் போகிறது .இது ஒரு பக்கம் இவர்கள் பேசுவது அரசியலும் இருக்கும், அதில் உண்மையும் இருக்கும் .அதை மறுக்க முடியாது .இது திமுகவிற்கு அரசியலில் மிகப்பெரிய பின்னடைவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *