
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேரில் நடந்த அமோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்து உள்ளனர், 41 பேர் பிழைத்துக் கொண்டனர். எஞ்சியவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.
மேலும் , இந்த சம்பவத்திற்கு காரணமான அமோனியா வாயுவை பாதுகாப்பான முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தவிர,அந்த இறால் கம்பெனியில் மிச்சம் மீதி இருக்கக்கூடிய அமோனியா வாயுவை, பாதுகாப்பான முறையில் அகற்றினால் தான், மீண்டும் உயிரிழப்பு சம்பவங்கள் அப் பகுதியில் நடக்காது.

இருப்பினும், அந்த கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தவிர, அதிகாரிகள் ,நிபுணர்கள் அடங்கிய குழு, மீதி இருக்கிற அம்மோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றப்பட்டு வாயு டேங்கர் லாரிகள் மூலம் மணலி அமோனியவாயு விநியோகம் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக அமோனியா வாயுவை அகற்றி மக்களுக்கான பாதுகாப்பை வழங்க அதிகாரிகள் குழு தீவிரம் காட்டி வருகிறது.
