தீப ஒளியால் இறைவனை வணங்கும் நாளே – தீபாவளி திருநாள் .

ஆன்மீகம் இந்தியா உலகம் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இந்துக்களுக்கு எத்தனையோ பண்டிகைகள் இறைவனை வணங்குவதற்கு வந்தாலும், தீப ஒளியால் இறைவனை வணங்கும் இந்த திருநாள் தீப ஒளி திருநாள். இந்த நாளில் இறைவனை ஜோதி ரூபத்தில் வணங்க வேண்டும் என்று நாம் வீட்டில், வெளியில் ,தொழில் செய்யும் இடங்களில், விளக்கேற்றி தீப ஒளியால் இறைவனை வழிபட்டு வருகிறோம். அந்த நாளை இன்றும் நாம் இந்த தீப ஒளி திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம்.மேலும்,

 அதற்காகத்தான் இந்த பட்டாசு கூட ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும், அமைந்துள்ளன. இதற்கு புராணங்களில் சொல்லப்பட்ட கதை நரகாசுரனை வதம் செய்த நாளாக கொண்டாடி மகிழ்கிறோம்.. இந்த நரன் என்பது மனிதருக்குள் இருக்கின்ற அரக்கத்தனமான அல்லது மிருகத்தனமான கெட்ட எண்ணங்களை அழித்து ,நல்லெண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக நாம் ஒரு பண்டிகையை தெரிந்தும், தெரியாமல் கூட கொண்டாடி வருகிறோம்.

 இதில் ஒரு மகிழ்ச்சி சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும்போது அவர்களுக்குள் ஏற்படும் ஒரு சந்தோஷம். அதேபோல் பெற்றோர்கள் எண்ணை குளியல்  செய்து, பல தின்பண்டங்கள், பலகாரங்கள் செய்து தீபங்களுக்கு படையல் இட்டு , வணங்குவது தான் இதன் ஐதீகம்.

ஆனால், இதை அவரவர் சக்திக்கு, அவரவர் வாழ்க்கை முறைக்கு இத் திருநாளை கொண்டாடி வருகிறார்கள். இது தமிழர்கள் மட்டுமின்றி ,வட மாநிலத்தவர்களும் கொண்டாடுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சிறப்புமிக்க இந்த தீப ஓளி திருநாளில், உலகெங்கிலும் உள்ள மக்கள் அரக்கத் தனமான எண்ணங்களில் இருந்து விடுபட்டு, மனிதநேயம், இறையன்பின் இனிய வாசத்தை உணரும்போது, மனித மனம் தெய்வீகத்தை நாடுகிறது.அதுதான் அழியாத ஆத்ம சந்தோஷம். அதை பெறாமல், இந்த உலகில் எத்தனை சந்தோஷங்களை நாம் அனுபவித்தாலும், பிறவியின் நோக்கம் நிறைவேறாது.

 அதை பெற அனைத்து மனித ஆத்மாக்களும், இந்த தீப ஒளித் திருநாளில் இறைவனை மனதார நினைத்து வணங்குவோம் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் அனைவருக்கும் அன்புடன் எமது தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *