தேர்தல் என்பது நாட்டில் மக்களுக்கான முன்னேற்றத்திற்கும் , நேர்மையான நல்லாட்சி ஏற்படுத்த சமூக நலனுக்காக நடத்தப்படும் ஒரு போட்டி தான் தேர்தல்.(ELECTION).
இந்த தேர்தல் போட்டி அரசியல் கட்சிகள் இடையே நடந்தாலும் போட்டி தான், கட்சிகள் அல்லாத அமைப்புகள், தனி மனிதப் போட்டிகள் எதுவாக இருந்தாலும், ஒருவருடைய வெற்றி, தோல்வி மக்கள் வாக்களிக்கும் உரிமை சுதந்திரமாக இருக்க வேண்டும் .
அதற்கு பதிலாக ஒருவருக்கு பொருளை கொடுத்தும் அல்லது பணம் கொடுத்தும் அல்லது டாஸ்மாக் மதுபானங்களை கொடுத்தும் வாக்குகளை விலை பேசக்கூடாது. இங்கே டாஸ்மாக் கடைகளில் தேர்தல் என்றாலே அலை மோதுவதும், அதிக விற்பனையாவதும் வாடிக்கை. இது ஒரு புறம் இருந்தாலும், டாஸ்மாக் மதுபானங்களை கொடுத்து, மக்களை விலை பேசும் அரசியல் கட்சிகள் இருப்பதால் ,அதை உடனடியாக மூடுவது நல்லது என தேர்தல் ஆணையத்துக்கு சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால், தமிழக அரசு வருமானம் பாதிக்கும் என்றாலும், நாட்டில் சமூக நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, டாஸ்மாக் கடைகளை மூடுவது தேர்தல் ஆணையத்தின் முக்கிய வேலை. மேலும் ,தேர்தல் ஆணையம் டாஸ்மாக் மதுக்கடைகளை ஏன் மூட வேண்டும் என்றால்? ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்ற அறிவோ, தகுதியோ இல்லாமல், போதை மயக்கத்தில் மது கொடுப்பவர்களுக்கு, வாக்களித்து விடுகிறான்.
இது தவிர, பணத்திற்காக, பொருளுக்காக வாக்களிப்பவர்கள் இருக்கிறார்கள். இதுவும் ஜனநாயகத்திற்கு தவறான ஒரு தேர்வு .இப்படிப்பட்ட மக்களுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், எந்தெந்த பகுதியில் மக்கள் பணம் வாங்கி வாக்களிக்கும் மனநிலையில் இருக்கிறார்களோ ,அதை தடுக்க அந்தந்த பகுதியில் ரகசிய கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும்.
மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பணம் எந்தெந்த வகையில் பட்டுவாடா செய்யலாம்? என்று அரசியல் கட்சிகள் இருந்து வருகிறார்கள். அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் 100 நாள் வேலைகளில் பணத்தை கொடுக்க வாய்ப்புள்ளது. இது தவிர, இந்த பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல கண்டெய்னர் அல்லது ஆம்புலன்ஸ் மூலம் இதை பல இடங்களுக்கு கொண்டு சென்று ,அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வி வினியோகம் செய்கிறார்கள் .அதனால், கண்காணிப்புகளை தீவிர படுத்த வேண்டும்.
அப்படி கண்காணித்தால், எந்த அரசியல் கட்சியினர், எந்தெந்த பகுதியில் யார் யாருக்கு ?யார் பணம் கொடுக்கிறார்களோ ,அந்த கட்சி வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .
இது தவிர, தேவையற்ற நபர்கள் வாக்கு சேகரிக்கிறேன் என்ற பெயரில் இரவு நேரங்களில் வாக்காளர்களின் கதவை தட்டுவது ,அல்லது அந்த உறவினர்களுக்கு கதவை தட்டி வாக்கு சேகரிக்கிறேன். என்று பணத்தை கொடுப்பது ,அரசியல் கட்சிகளின் தேர்தல் வியாபாரம். இந்த வியாபாரம் அரசியல் கட்சியினரின் மூலம் நடத்தி வருகிறார்கள் . அந்த வியாபாரத்தை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.
இது தவிர, அரசியல் கட்சிகளின் மாநாடு,கூட்டம் இவையெல்லாம் தேர்தல் ஆணையம் எதற்காக நடத்துகிறார்கள்? ஏன் நடத்துகிறார்கள்? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கூட்டத்தை கூட்டும்போது, அந்த கூட்டத்திற்கு வருபவர்களுக்கு பணம், மது பாட்டில்கள் ,பிரியாணி போன்றவை இலவசமாக கொடுக்கிறார்கள். கேட்டால் எங்கள் கட்சிக்காரர்கள் என்று கூட சொல்வார்கள். உங்கள் கட்சிக்காரராக இருந்தாலும், அவர்களும் வாக்காளர்கள் தான் .
அதனால் , பணம் கொடுத்தால், இது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சம். இதை தவிர்க்க வேண்டும். அதேபோல், வேட்பாளர்களின் செலவு கணக்கில் தேர்தல் ஆணையம் மிக முக்கிய கவனம் செலுத்த வேண்டும். .மக்கள் சுதந்திரமாக யாருக்கு வாக்களிக்கலாம்? என்பதை சிந்தித்து வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தேர்தல் ஆணையர் சத்திய பிரதாபசாகு தமிழ்நாட்டில் உள்ள சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு தேர்தல் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். இதில் கூட செய்தித்துறை (Dipir) ல் பாரபட்சம் காட்டுகிறார்கள். அரசு அடையாள அட்டை உள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும், கார்ப்பரேட் மீடியா பத்திரிகையாளர்களுக்கு ஒரு விதமாகவும் ,இந்த பாகுபாடுகள் இருந்து வருகிறது .
இதை தேர்தல் ஆணையர் சத்திய பிரதாபசாகு தகுதியான சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தேர்தலில் நடைபெறும் தில்லுமுல்லுகள், கள்ள ஓட்டுகள், பணம் பட்டுவாடாக்கள், போன்றவற்றை கண்காணித்து தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய முறையில் செய்திகளை கொடுக்க, தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை.