
அமைச்சர் கே என் நேரு நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாக அமலாக்க துறையின் குற்றச்சாட்டு.
மேலும் ,அமலாக்கத் துறையின் விசாரணையில் ,வெளிநாட்டில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல். அமலாக்கத்துறையின் இந்த திடுக்கிடும் தகவளால் நகராட்சி நிர்வாகம் எப்படிப்பட்ட ஊழல் நிர்வாகமாக இருக்கும் என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.

மேலும், நகராட்சியில் கமிஷனர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை எந்த ஒரு வேலைக்கும் கமிஷன் வாங்காமல் செய்ய மாட்டார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.மேலும்,
. சுமார் 2500 பேருக்கு மேல் நகராட்சியிலும், குடிநீர் வழங்கல் வாரியத்திலும், பணி நியமனம் வழங்கப்பட்டதில், ரூபாய் 35 லட்சம் வரை ,லஞ்சம் வாங்கியதாக தகவல் .வெளியாகி உள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், கே. என். நேருவை பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இப்படிப்பட்ட நியமனத்திற்கு எதற்காக அண்ணா பல்கலை கழகத்தின் மூலம் தேர்வு ஏன் நடத்த வேண்டும்?
இதில் யார் தகுதியான நபர்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது? மேலும்,பணியில் சேர்ந்தவர்கள் குறித்து குழப்பங்கள் நீடிக்கிறது. எவ்வளவோ திறமையாக, சாமர்த்தியமாக தான் அமைச்சர்கள் வேலை செய்கிறார்கள்.
இருந்தாலும் ,எப்படி இவையெல்லாம் வெளி வருகிறது? ஏதோ ஒரு வகையில் தவறு செய்தவன் மாட்டிக் கொள்வது போல, தொடர்ந்து திமுக ஆட்சியில் அமைச்சர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, ஊழல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது திமுக ஆட்சிக்கு மேலும் பின்னடைவே .