நாட்டில் உணவுப் பொருட்கள் மற்றும் ஹோட்டல்கள் பணத்திற்கு  முக்கியத்துவமானதால் பாதிக்கப்படுவது – ஏழை எளிய நடுத்தர மக்கள்.

அரசியல் உணவு செய்தி சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

நாட்டில் உணவுப் பொருட்கள் கலப்படத்தால், மக்களுக்கு ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. இது ஏழை எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கிறது. இன்று பொருட்களின் தரம் ,அதன் விலையை பொறுத்தது என்றாலும், ஒரு குறிப்பிட்ட விளைக்கும் மேல், ஏழை எளிய நடுத்தர மக்கள், அப்பொருட்களை வாங்கி பயன்படுத்துவதில்லை.

 ஆனால் எண்ணெய் பொருட்கள், பருப்பு வகைகள், அரிசி வகைகள், அனைத்துமே தரமான பொருட்களா? என்பது இன்றைய மளிகை கடை விற்பனை. மேலும் ,ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பொருட்கள் தரமானதா? பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் உணவு பொருட்களின்  கால நிர்ணயம் மிகவும் அவசியம். அதன் தரம் மிகவும் அவசியம் என்றாலும் கூட, பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் பொருட்கள் முதல்  காய்கறிகள் வரை அவை ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

அதேபோல் துரித உணவகங்களில் எண்ணெய் ,தினமும் புது எண்ணையை பயன்படுத்துகிறார்களா? அல்லது நேற்று பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் தொடர்கிறதா? இவையெல்லாம் இப்போது இந்த உணவகங்கள் உணவை மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதில்லை. பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது.

இது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இந்த கலப்பட பொருட்கள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும், எண்ணெய்களில் கலப்படம், பருப்பு வகைகளில் கலப்படம் ,இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு முக்கிய எதிரி. இது தவிர, காய்கறிகளில், பழங்களில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, புது, புது நோய்களை உருவாக்கி வருவது இதற்கு முக்கிய காரணம் .

இது தவிர, ஹோட்டல் உணவகங்களில் மிச்சம் ,மீதிகளை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடு செய்து, பொது மக்களுக்கு கொடுக்கும்போது தேவையற்ற நச்சுக்கள் உடலில் ஏற்படுகிறது .அதன் விளைவு இன்று உடல் பருமன், பிபி, சுகர், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களுக்கு அடிப்படையில் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இது பற்றி வட்ட வழங்கல் துறையும், புட் சேப்டி அதிகாரிகளும், என்னதான் அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட கலப்படங்களை தடுத்தால் கூட ,அவை தொடர்கதையாக தான் இருக்கிறது .

பெரும்பாலான மக்களுக்கு இந்த உணவு மூலம் ஏற்படும் நோய்கள் ,இன்னும் புரியவில்லை .அதே மாதிரி கலப்பட உணவுப் பொருட்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும், புரிதல் இல்லாமல் இருக்கிறது .அந்த காலத்தில் மக்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார்கள்? 80 வயதுக்கு மேல் 90 வயது என்று அவர்களுடைய வயது அதிகரித்து இருந்தது.தற்போது ஐம்பதிலிருந்து ,அறுவது தாண்டுவது மிகவும் கஷ்டமாகி வருகிறது .

ஒரு பக்கம் உணவு பொருட்கள் மற்றொரு பக்கம் டாஸ்மாக் ,கஞ்சா, பான் மசாலா பொருட்கள் போன்றவை மக்களுக்கு  நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது .இது பெரிய வியாதியாக வரும் போது தான், அதனுடைய உண்மை அவர்களுக்கு தெரிய வருகிறது. அதுவரை இவையெல்லாம் தெரிவதில்லை. இனிமேலாவது மக்கள் உணவுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும்.

அதேபோல், இந்த போதைக்கு அடிமையானால் ,ஒரு பக்கம் தன்னுடைய உடல் வலிமை இழந்து விடுகிறது. மற்றொரு பக்கம் அவர்களால் உழைக்கும் திறன் குறைந்து விடுகிறது. உழைக்கும் திறன் குறைந்து விடும்போது, பொதுவாகவே அந்த குடும்பத்தில் வறுமை வந்துவிடும். அதனால், ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் போதைக்கு அடிமையாகும் போது, பெண்கள் அந்த குடும்பத்தில் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

 பெண்கள் வேலைக்கு சென்றால் கணவன், மனைவியை சந்தேகப்படுகிறான். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. இப்படி பல குடும்பங்கள் இன்று இந்த குடிபோதையால் சீரழிந்து கொண்டிருக்கிறது .எத்தனையோ அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் இந்த தமிழக அரசுக்கு எடுத்து சொல்லியும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அரசுக்கு வருமானத்தைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறார்கள் .சமூக நலன் பற்றி அக்கறை இல்லாத ஒரு அரசாங்கம் திமுக . எனவே,

 உணவும், உணவுப் பொருட்களும் தரமானதாக இருந்தால், மக்கள் பெருமளவு நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும்,மக்கள் புரிதல் இல்லாமல் வாழ்ந்தால், அவர்கள் குடும்பம் மட்டும் பாதிக்கப்படவில்லை, அவர்களும் சேர்ந்து பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *