நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! ஊழலுக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுப்பது! நாட்டில் ஊழலை வளர்க்கவா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்!

அரசு செய்தி என்று ஆட்சியாளர்களை விளம்பரப் படுத்தி, ஊழலுக்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது, மத்திய மாநில அரசின் சட்டம் சர்குலேஷன் சட்டமா?

நாட்டில் அரசியல் கட்சியினர் முதல் இன்று ஆட்சியாளர்கள் வரை பல கோடி ஊழல் சொத்துக்கள், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் ,வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் அவர்கள் மீது ஊழல் வழக்கு, புகார்கள் ,வன்முறைகள் ,கொலை சம்பவங்கள், ரவுடிசம் இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது?

ஊழல் பணம் தான் இருக்கிறது. சாதாரண அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கி விட்டால், அவர்களை உடனே சஸ்பெண்ட் செய்து கைது விடுகிறார்கள்.

இவர்கள் கோடி கணக்கில் கொள்ளை அடித்தாலும், இவர்களை உடனே சஸ்பெண்ட் செய்வதில்லை. ஆண்டு கணக்கில் பதவியில் இருப்பார்கள். மக்களுக்கு நல்லவர்களாக ,மீண்டும் பணத்தை கொடுத்து, தேர்தலில் நின்று வெற்றி பெறுவார்கள்.

இவர்கள் ஐந்தாண்டு எம்எல்ஏ, எம்பி ,மந்திரியாக இருந்துவிட்டால், இவர்களுக்கு சாகும் வரை பென்ஷன் உண்டு.மேலும், அதிகாரிகள் 40 ஆண்டு காலம் முதல் 30 ஆண்டு காலம் அரசு அதிகாரியாக பணியாற்றினால் கூட அவர்களுக்கு பென்ஷன் கிடையாது. இது எப்படி இருக்கிறது என்றால்! நாட்டில் உண்மைக்கு புறம்பாக சட்டங்கள் இருக்கிறது.

இதைப் பற்றி எந்த பத்திரிக்கை, தொலைக்காட்சியாவது ,ஒருவன் பேசியிருக்கிறானா? அவனவன் தன்னுடைய பத்திரிக்கை வியாபாரத்தை, இந்த ஊழல்வாதிகளோடு, சேர்ந்து சம்பாதிப்பதை தான் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு சர்குலேஷன் சட்டம் இருக்கிறது .

கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் கடமைக்கு பேசுவார்கள், கடமைக்கு செய்தி போடுவார்கள், உண்மைக்கு செய்தி போட மாட்டார்கள். இதுதான் அவர்களுடைய வியாபார தந்திரம். ஆனால், உண்மைக்காக, இந்த சமூக நலனுக்காக, தேச நலனுக்காக, பத்திரிக்கை நடத்தக்கூடிய சமூக நலன் பத்திரிகைகள், ஆயிரம் கணக்கில் இருந்தாலும், அதில் குறைந்த எண்ணிக்கையில் தான் ஊழலுக்கு எதிராக போராடுகின்ற பத்திரிகைகள் நாட்டில் இருக்கிறது.

அந்த பத்திரிகைகளுக்கு கூட ,இந்த கோடிக்கணக்கான ஊழலை செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் !அதற்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து ஊக்குவிக்க, மனம் வராமல், இவர்கள் பத்திரிக்கை துறையை அழிக்க பார்க்கிறார்கள். ஏனென்றால் அப்போது தான் இவர்கள் நன்றாக கொள்ளையடிப்பார்கள். அப்போது தான் மக்களை ஏமாற்றி, மீண்டும் ,மீண்டும் ஊழல்வாதிகள் ,தங்களை நல்லவர்களாக மக்களிடம் காட்டுகின்ற கார்ப்பரேட் பத்திரிகைகளை வைத்து மீண்டும் தேர்தலில் ஜெயிப்பார்கள்.

இப்படிப்பட்ட போலி அரசியலை தான் பத்திரிகைகள் தங்களுடைய சுயநலத்திற்காக சுய லாபங்களுக்காக இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் பேசுவது சோசியல் மீடியாவாக ஆகிவிட்டது. நடுநிலை என்பது எத்தனை பத்திரிகைகளில் இருக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றால் பத்திரிக்கை துறையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். இவர்களுடைய உண்மையான முகத்திரை இதுதான். தமிழ்நாட்டின் மறைமுக பத்திரிகை வியாபாரத்தின் ரகசியம்.

இதை எதிர்த்து போராடக்கூடிய பத்திரிகைகள் மிகவும் குறைவு. அவர்களுக்கு இந்த புரிதல் இல்லாமல் தான் பல பேர் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உண்மை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆட்சியாளர்களின் அவலங்கள் என்ன? என்பதை தோலுரித்துக் காட்ட வேண்டும்.

இவை அத்தனையும் இந்த சமூக நலனுக்காகவும், தேச நலனுக்காகவும், அது இருக்க வேண்டும். ஒரு பத்திரிக்கை நடத்துவது சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டமானது ?என்பது இவர்களுக்கு தெரியாதா? கருப்பு பணத்தைக் கொண்டு, பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிற இவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் வேண்டும் . பஸ் பாஸ், அரசு அடையாள அட்டை வேண்டும்.

ஆனால், சொந்த உழைப்பையும், சொந்த பணத்தையும் போட்டு, பத்திரிக்கை நடத்தக்கூடிய சமூக நலனுக்காகவும், தேச நலனுக்காகவும், பாடுபடக்கூடிய பத்திரிகைகளுக்கு நாட்டில் எந்த சலுகையும், விளம்பரங்களும் கொடுக்கக் கூடாது என்ற இவர்களுடைய நோக்கம் என்ன? கொள்கை என்ன? இதுதான் திமுகவின் சமூக நீதியா? ஸ்டாலினுக்கு சமூக நீதிப் பற்றி பேச தகுதி இருக்கிறதா? இவர்களுடைய அரசியல் என்ன? இவர்களுடைய திட்டம் என்ன?

மக்களிடம் இதையெல்லாம் கொண்டு போய் சேர்ப்பது தான், இனி இந்த சமூக நலன் பத்திரிகைகளின் பத்திரிகையாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த துறையை தொட்டாலும் ,ஊழல் தான் .ஆனால், இன்று வரை அதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பது கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளே, தற்போது கூட எத்தனையோ அதிகாரிகள் மீண்டும் திமுக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்பார்கள்?

மேலும்,அவர்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து வாக்காளர்களுக்கு ஐயாயிரம், பத்தாயிரம் கொடுத்து கூட ஜெயிப்பார்களோ என்று தான் தெரிவிக்கிறார்கள். அந்த அளவுக்கு திமுக அரசின் ஐந்தாண்டு கால ஊழல் அவர்கள் அனைவரும் செட்டில் ஆகி விட்டார்கள்.

அதாவது மந்திரி, எம்எல்ஏ , எம்.பி,இவர்களெல்லாம் 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார்கள். இருப்பினும், அந்த சொத்துக்களை பாதுகாப்பதற்கு !அரசியலில் மீண்டும் பதவி கேட்டுக்கொண்டு, அவர்களுடைய வாரிசுகளை மீண்டும் அரசியலில் பதவிகளை பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ,சாமானிய மக்கள் இன்று வரை ,அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகிறது. மேலும்,ஒரு திருமாவளவன் மாதிரி மோசமான அரசியல்வாதிகள், சீமான் மாதிரி பிரிவினைவாத சக்திகள், இன்னும் பல நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள் அவர்களுடைய சுயநலத்திற்காக தான் இருக்கிறது. மேடையிலே எல்லோரும் ஊழலைப் பற்றி ஒழிப்போம் என்று பேசுவார்கள். மக்கள் அதை உண்மை என்று நம்புவார்கள்.

ஆனால், அவர்களுடைய சொத்துக்கள் எப்படி சம்பாதித்தது? இவர்களுடைய ஆரம்ப கால குடும்ப சொத்து என்ன?ஒவ்வொருவருடைய தற்போதைய இவர்களுடைய சொத்து மதிப்பு என்ன என்ன ? என்ன தொழில் செய்தார்கள் ?என்ன வியாபாரம் செய்தார்கள்? இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வராமல், இந்த ஊழலை ஒழிக்க முடியாது.மேலும்,

ஊழலை ஒழிக்க எத்தனையோ துறைகள் இருக்கிறது .என்ன பயன்? நாட்டில் ஊழல் ஒழிந்து விட்டதா? சட்டம் வலுவாக இல்லை. சட்டம் ஓட்டையாக இருக்கிறது. ஊழல்வாதிகள் அந்த ஓட்டைகளில் எப்படி தப்பிக்கலாம் என்றுதான் இவர்கள் ஆண்டு கணக்கில் வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. இதுவே சாமானிய மக்களாக இருந்தால் அவர்களுக்கு உடனே தண்டனை கிடைத்துவிடும். நீதிமன்றங்களில் இந்த நிலை மாற வேண்டும்.

மேலும், அரசியலில் ஜாதி கட்சிகள் ஜாதியை வைத்து தான் பேசிக் கொண்டிருப்பார்கள். திருமாவளவன் போன்றோர், சீமான் போன்றோர், ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், என்று பேசிக்கொண்டே அவர்களை ஒடுக்கப்பட்ட மக்களாக ஆக்கி விடுவார்கள்.

நாட்டில் பேசியே அரசியல்! மைக்கை பிடித்து பேசுவது அரசியல்! அது உண்மைக்கு அரசியல் அல்ல. பேசுபவன் எல்லாம் அரசியல்வாதி என்று மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவனும் என்ன செய்தான்? என்பது தான் அரசியலாக இருக்க வேண்டும். அவனுடைய நேர்மை அரசியலாக இருக்க வேண்டும். அவனுடைய ஊழல் அரசியலாக இருக்கக் கூடாது என்பதை மக்கள் தீர்மானியுங்கள்.

இவை அத்தனையும் நீங்கள் வாக்களிக்கும் முன், இவர்கள் யார்? என்பதை இந்த வரிசையில் ஒவ்வொருவரையும், வரிசைப்படுத்தி தீர்மானியுங்கள். அப்போதுதான் நேர்மையான அரசியல்! மக்களுக்கான அரசியல் வாதிகள்! மக்கள் உருவாக்க முடியும். நீங்கள் செய்கின்ற தவறு, அது உங்களிடம் தான் வந்து நிற்கிறது.மேலும்,

ஒடுக்கப்பட்ட மக்கள் , ஜாதியை வைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல , உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள்தான், ஒடுக்கப்பட்ட மக்கள் . இன்று ஊழலுக்கு எதிராக இந்த சமூக நலனுக்காக தேச நலனுக்காக பாடுபடுகின்ற பத்திரிகைகளுக்கே உரிமைகள் மறுக்கப்படும் போது மக்களுக்கு எப்படி அவர்களுடைய உரிமைகள் கிடைக்கும்?

ஆயிரம் ரூபாய் கொடுத்து அது மகளிர் உரிமைத் தொகை என்கிறார்கள். இந்த ஆயிரம் ரூபாயை வைத்து எத்தனை நாளைக்கு அவர்கள் வாழ முடியும்? இதையெல்லாம் மக்கள் சிந்திக்கவில்லை. இலவசம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாது. நம்முடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தாலே, அதுவே நம்முடைய உரிமைத் தொகை தான்.

இப்படி எத்தனையோ சமுதாயம் ஒடுக்கப்பட்ட மக்களாக தன் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எந்த உரிமை பெற்றிருக்கிறார்கள் ?அந்த உரிமைகள் எல்லாம் கிடைத்தால் ஏன் நீதிமன்றத்தில் வழக்குகள் காவல்துறையில் புகார்கள் பல கோடிகளில் போய்க் கொண்டிருக்கிறது? எனவே, சமுதாயமும் பெற முடியாமல் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்றால்,

இப்படிப்பட்ட அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், பின்னால், மக்கள் நிற்கும்போது, அவர்கள் கொள்ளையடித்துக் கண்டு, கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் ,அவர்களுக்கு ஒத்து ஊதி கொண்டு, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு என்று வரும்போதும் ஜாதி என்பார்கள் ,அப்போது தான் பறையர் சமுதாயத்திற்கு நான் ஒரு போராளி என்பார்கள் .இப்படி எல்லாம் இந்த சமுதாயங்கள் ஏமாந்து கொண்டிருக்கிறது.

இதையே தான் ராமதாஸ் வன்னிய சமுதாயத்தை 40 ஆண்டு காலத்திற்கு மேலாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எப்போது எல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் இவர்கள் இட ஒதுக்கீடு பிரச்சனையை எடுத்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் இட ஒதுக்கீடு இந்த சமுதாயத்திற்கு வாங்கி கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை. இந்த சமுதாயத்தை கெடுக்காமல், சீரழிக்காமல் இருந்தாலே, அதுவே இவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய நன்மை.

மேலும் ,இன்றைய ஜாதி கட்சிகள் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதில அப்பன் ஒரு பக்கம் நாடகம், பையன் ஒரு பக்கம் நாடகம், இது எல்லாம் யாரிடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் ?மக்களுக்கு அரசியல் தெரியாது .நீ ஏழையாக இருந்தால், நீ படிக்காதவனாக இருந்தால், இவர்கள் எல்லாம் உன்னை ஏமாற்றுவதற்கு எவ்வளவு சூழ்ச்சிகளாக பேச முடியுமோ, அவ்வளவு சூழ்ச்சிகளாக பேசிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் உண்மை என்று விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பார்கள்.

சட்டம் இவர்களுக்கு ஒரு சட்டம் !சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம்! முதலில் இப்படிப்பட்ட சட்டத்தை களை எடுக்க வேண்டும். இவர்களுக்கு என்று தனி சட்டம் கொண்டு வர வேண்டும். மோடி வந்து ஒரே, ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார். அதாவது 30 நாட்கள் சிறையில் ஒருவர் பதவியில் இருப்பவர், ஊழல் செய்தோ அல்லது கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டோ இருந்தால், அவர்களுடைய பதவி தானாகவே போய்விடும். அதற்கே கதறுகிறார்கள் .

அதேபோல், இவர்களுக்கு ஐந்தாண்டு பதவியில் இருந்து விட்டால், இவர்களுக்கு பென்ஷன் என்பது கொடுக்கக் கூடாது. நாட்டில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு கூட, அந்த சலுகைகள் ,அந்த பென்ஷன் கிடைக்கவில்லை.

ஆனால், ஊழல் செய்து, கொள்ளையடித்து, பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்தவனுக்கு எல்லாம், இந்த பென்ஷனும் ,சலுகையும் கிடைக்கிறது. சட்டம் எந்த அளவுக்கு தூங்கிக் கொண்டிருக்கிறது?

இதே சட்டம் தான்! பத்திரிக்கை துறையிலும், சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது புரிகிறதா? மக்களுக்கு உண்மை….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *