நாட்டில் பத்திரிகைகளுக்கு சமூக நலன், தேச நலன் முக்கியமா? சர்குலேஷன் முக்கியமா? இதைப் பற்றி  மத்திய மாநில அரசின் செய்தி துறைக்கு இந்த உண்மையாவது தெரியுமா? – மக்கள் அதிகாரம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த பத்திரிகை சட்டங்களை 1947க்கு பிறகு எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல், அப்படியே இருந்து வருகிறது. பத்திரிக்கை துறை காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப அவசியம் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். 

இன்று பத்திரிகைகள் வாங்கி படிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்பதை இவர்களுக்கு எத்தனையோ முறை செய்திகள் மூலம், இணையதளத்தின் மூலம் பத்திரிகையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசியல் தலையீடு பத்திரிக்கைக்குள் இருப்பதால், எதைப்பற்றியும் மத்திய மாநில அரசின் செய்தி துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

இன்று பத்திரிக்கை துறை விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதற்கு, முக்கிய காரணம். பத்திரிகை சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சர்குலேஷன் சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்சியை சார்ந்த பத்திரிகைகளுக்கு சர்குலேஷன் வைத்து எப்படி அதற்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கலாம்? தினகரன், நமது எம்ஜிஆர், முரசொலி, அதேபோல் எந்த ஆட்சி வந்தாலும் அதன் ஜால்ராவாக இருக்கக்கூடிய தினத்தந்தி, இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது இந்த பத்திரிகை முதல் பக்கத்திலே பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டுள்ளது. இதன் மீது தேச துரோக வழக்கு பதியப்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் மக்கள் வாங்கி படிக்கும் பத்திரிகை பணத்தில், இந்த தேசத்திற்கு எதிராக இவர் பத்திரிக்கை நடத்துவார் என்றால், நாங்கள் எல்லாம் இந்த சமூகத்திற்கும், இந்த தேசத்திற்கும், இறையாண்மைக்கும், மனசாட்சியுடன் பத்திரிக்கை நடத்தினால், எங்களுக்கு எந்த சலுகை, விளம்பரமும் கிடையாது என்றால், அது என்ன பத்திரிக்கை சட்டம்?

 மேலும், எங்களைப் போன்ற சமூகநலன் பத்திரிகைகள், நாங்கள் பிளாக் மணியை கொண்டு வந்து பத்திரிக்கை நடத்தவில்லை. எங்களுடைய சொந்த பணத்தில் தான் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். எத்தனை பத்திரிகைகள் சொந்த உழைப்பில் இவர்கள் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ?இந்த ஆய்வை நடத்த வேண்டும். 

அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் சர்குலேஷன் காட்டும், பத்திரிகைகளுக்கு கோடிக்கணக்கில் மத்திய மாநில அரசு சலுகை, விளம்பரங்களை கொடுத்து கொண்டு, அவர்களுடைய வளர்ச்சிக்கு இவர்கள் பாடுபட்டுக் கொண்டிருந்தால், நாட்டின் சமூக நலன் தேச நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் முக்கிய பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கக்கூடிய எங்களை போன்ற பத்திரிகைகளுக்கு அரசியல் தலையீடு எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுக்காமல் 19 47 இல் போடப்பட்ட அதே சட்டம் இன்றுவரை இந்த பத்திரிக்கை துறையை ஏமாற்றி வருகிறது.

இது தவிர, இன்று எங்களுடைய பத்திரிக்கை,  இணையதளங்களில் எவ்வளவு பார்வையாளர்கள் இருக்கிறார்கள்? எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ?எவ்வளவு பேர் படிக்கிறார்கள் ? இதை கணக்கில் ஏன் மத்திய, மாநில அரசின் செய்தித் துறை எடுத்துக் கொள்வதில்லை? இதை எப்படி நீங்கள் சோசியல் மீடியா என்று சொல்வீர்கள்? அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையின் பெயரில் உருவாக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம். இதை தினசரி முக்கிய செய்திகளை வெளியிட்டு வருகிறோம். இன்று (3.5) சுமார் இலட்சம் வரை பார்வையாளர்கள் இரண்டு  இணையதளத்திலும் இருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு மத்திய மாநில அரசின் செய்தித் துறை ஏன் கொடுக்கக் கூடாது? என்பதுதான் எங்களது முக்கிய கேள்வி? மேலும், இந்த தேசத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடும், இந்து பத்திரிக்கைக்கு இதுவரை எவ்வளவு அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது? என்பதை கணக்கெடுத்து, அதை எல்லாம் அரசின் கஜானாவிற்கு கொண்டு செல்ல வேண்டும். 

ஏனென்றால், இந்து:(HINDU) என்பது என்னவோ, இந்த நாட்டுக்கு பெரிய தலைமை பத்திரிகை என்பது போல, அவர்களுடைய நினைப்பு. இந்து ராம் எல்லாம் ஒரு வெத்து பந்தா தான். பொதுவாவே பிராமணர்கள் இடத்தில் ஒரு பந்தா இருக்கும். அதே பந்தா தான் இந்து ராம் காட்டிக் கொண்டிருக்கிறார்.மற்ற சமூகங்கள் அதிக அளவில் அந்த பாந்த காட்டத் தெரியாது. 

அது என்ன என்றால்? இவர்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரிந்தார் போல், பேசிக்கொண்டு காட்டிக் கொண்டு இருப்பார்கள் .இந்த வித்தை வேறு எங்கேயாவது காட்ட வேண்டும். எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களிடம் இந்த வித்தையை இவர்கள் காட்ட முடியாது . இவர்கள் ஆட்சியாளர்களின் கைக்கூலியாக இருந்து கொண்டு இது போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். 

இதற்கு காரணம் என்னவென்றால், ஒரு காலத்தில் இந்த சமூகம் அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. இன்று கல்வியில் முன்னேற்றம், அறிவில் முன்னேற்றம், ஆனால், அரசியல்வாதிகள் மாற வில்லை. அரசியல்வாதிகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் மாறவில்லை. இவர்கள் எல்லாம் அதே மனநிலையில் தான் இருக்கிறார்கள். மேலும், வைகோ, துரைவைக்கோ, திமுக, கம்யூனிஸ்ட், திருமாவளவன், சீமான் இவர்களுக்கு எல்லாம் அடி முட்டாள்கள் தான், இவர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தேவை. 

ஏனென்றால், இவர்கள் செய்த தவறு அல்லது இவர்கள் ரகசியமாக செய்து கொண்டிருக்கும் தவறுகளை மறைப்பதற்கு மத்திய பிஜேபி அரசின் மீதே தவறு என்று பேசிக் கொண்டிருப்பார்கள். அதுதான் இப்போதும் பேசுகிறார்கள். இவர்கள் மதத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டு, ஜாதிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு,செய்யும் அரசியல் கூட்டம் தான் இவர்கள் .ஆனால்,

 பிஜேபியை மதவாத சக்தி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் .ஏனென்றால் அவர்கள் இந்து மதத்தை ஆதரிக்கிறார்கள். என்ன தவறு? இந்தியா மத சார்பற்ற நாடு என்பது தவறு. முஸ்லிம்களுக்கு மதம் வேண்டும். கிறிஸ்துவனுக்கு மதம் வேண்டும். அப்ப இந்துக்களுக்கு மட்டும் மதம் வேண்டாமா? இந்தப் பைத்தியக்காரர்கள் ,பேச்சை யார் ஏற்றுக் கொள்கிறார்கள்? அப்படி என்றால், நீ எதை சொன்னாலும் தலையாட்டிக் கொண்டிருக்கும் அடி முட்டாள்கள் தான், கைதட்டிக் கொண்டிருப்பார்கள்.

 ஒரு அரசியல்வாதி பேசினால் சரியாக பேச வேண்டும். உனக்கு எல்லாம் தெரிந்த மாதிரியும், மற்றவனுக்கு எதுவும் தெரியாத மாதிரி, மைக் கிடைத்தால் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதனால், அதை ஆதரிக்கின்ற கட்சி என்ற அடி முட்டாள் கூட்டம், ஆதரிக்கட்டும். அதைப் பற்றி கவலை இல்லை. சிந்திக்க மக்கள் விழிப்புடன் இருங்கள். உழைக்கும் மக்கள் விழிப்புடன் இருங்கள் ஏமாறாதீர்கள். ஏமாந்தால் பேசிய உங்களை அழகாக பாழும் கிணற்றில் தள்ளி மண்ணைப் போட்டு மூடி விடுவார்கள்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள போர், மதரீதியாக ஏற்பட்டுள்ள போர். தீவிரவாதிகள் கொன்று இருந்தால்! இந்துவா?, முஸ்லிமா? என்று கேட்காமல் சுட்டு இருந்தால் பரவாயில்லை. அவன் நீ முஸ்லிமா? இந்துவா? என்று கேட்டு தான் 26 உயிர்களை கொன்று இருக்கிறான். இங்கே எப்படி தீவிரவாதிகள் இடம், மதம் வந்துள்ளது? இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? இந்தியாவில் எத்தனை முஸ்லீம் அமைப்புகள் இருக்கிறது?

பயிற்சி அளிப்பவர்கள்? பின்னால் போதை பொருள் கடத்தல் காரர்கள் இருக்கிறார்களா? அல்லது கள்ள நோட்டு அச்சடிக்கும் கூட்டம் இருக்கிறதா? ஆகக் கூடி சட்டத்திற்கு புறம்பான வழிகளில் சம்பாதிக்கக் கூடிய கூட்டம் தான் இவர்களுக்கு பின்னால் இருக்க வேண்டும். அது இந்தியாவிற்குள் இருக்கிறதா? அல்லது பாகிஸ்தானுக்குள் இருக்கிறதா? இல்லை இருவருக்கும் இவர்களுக்குள் தொடர்பு இருக்கிறதா? அத்தனையும், NIA, NCB, ஆய்வு செய்ய வேண்டும்.மேலும்,

எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறது? எத்தனை பத்திரிகைகள்? தொலைக்காட்சிகள் இருக்கிறது? இதையெல்லாம் NIA விசாரிக்க வேண்டும்.தவிர, மத்திய அரசு உடனடியாக இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்கூடிய சலுகை, விளம்பரத்தை நிறுத்த வேண்டும்.அது, 

சமூக நலன், தேச நலன்  பத்திரிகைகளுக்கு மட்டும்தான் அவை கொடுக்கப்பட வேண்டும். இவர்கள் டிவியில் உட்கார்ந்து கொண்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அல்லது இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதையெல்லாம் யாரைத் திருப்தி படுத்த இந்த கூட்டம் பேசிக் கொண்டிருக்கிறது? பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தால்! அந்த இழப்பு ?அந்த வலி? வேதனை? தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களா? அல்லது மேதை என்ற நினைப்பில் பேசிக் கொண்டிருக்கிறார்களா? அல்லது நாட்டு மக்களுடைய நலனை கருத்தில் கொள்ளாமல், இந்தியாவுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்களா? இது எல்லாவற்றையும் சீர் செய்ய வேண்டிய காலகட்டத்தில் பத்திரிக்கை துறை இருக்கிறது என்பதை மத்திய அரசுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இக்கருத்தை பதிவு செய்கிறேன்.

எனவே, பத்திரிக்கை துறையை நிச்சயம் தேச நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், வெளிவரும் பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசின் செய்தி துறை சர்குலேஷனை பார்க்காமல் செய்தியின் முக்கியத்துவத்தை பார்த்து, இணையதளத்தையும் சர்குலேஷன் கணக்கில் கொண்டு வர வேண்டும். மேலும், எல்லாத் துறைகளிலும் தகுதியற்ற ஒரு கூட்டம் இருப்பது போல பத்திரிகையிலும் அந்த கூட்டம் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் அவசியம் வரைமுறை படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *