நாட்டில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பத்திரிகையின் ஊடக சட்டம் சமூக நலனுக்காகவா? அல்லது கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளின் வியாபார நலனுக்காகவா? இதை தெளிவுபடுத்துங்கள்.

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram

இன்று நாட்டில் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் நிலைமை மக்கள் youtube ல் விமர்சனம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. நடுநிலை என்று இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. இதைப் பற்றி ஒரு யூட்யூபில் பேசி உள்ள ராதா தேவர் என்ற பெண்மணி மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். இது மக்களுக்கும் புரியும். இந்த ஊடகங்களுக்கும் புரியும். இந்த விஷயம் இன்னும் செய்தி துறை உயரதிகாரிகளுக்கு புரியவில்லை. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு புரியவில்லை. 

எப்படி புரியும்? இப்படிப்பட்ட ஊடகங்கள் வியாபாரம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதற்கு சர்குலேஷன் என்ற ஒரு விதி அதாவது, பத்திரிக்கை சட்டம் பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பத்திரிகை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதை தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஆறு, ஏழு ஆண்டுகளாக இந்த உண்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த பத்திரிகைகள் சர்குலேஷன் காட்டுவது சுலபம். ஆனால் சமூக நலன் என்பது இங்கே இல்லை.

 சமூக நலன் இல்லாமல் எப்படி இவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் மத்திய மாநில அரசாங்கம் செலவிடப்படுகிறது? சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், எப்படி இந்த பத்திரிகைகளுக்கு, மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை கொடுக்கிறது? இதை பற்றி யாரும் விவாதிக்க மாட்டார்கள். ஆனால், விவாதித்தால் அது அவர்களுக்கே பிரச்சனையில் போய் முடிந்து விடும் .மேலும், பிரஸ் கவுன்ஸில் ஆஃப் இந்தியா நாங்கள் அனுப்பிய லீகல் நோட்டீஸ்க்கு சில விளக்கங்களை கேட்டு இருக்கிறது .அதைவிட முக்கியமான விளக்கம் இந்த செய்தி. இதை படிக்க வேண்டும் .

அதாவது, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு, சமூகத்தில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருக்க வேண்டும். ஆனால், இங்கே ஊழல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டாமல், முட்டு கொடுக்கும் வேலையை பார்க்கும் தொலைக்காட்சிகள் ,பத்திரிகைகள் தான் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள், இதற்கு எந்த விதத்தில் கோடிக்கணக்கான சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது நியாயமானது என்பது எங்களது கேள்வி? மேலும், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா இந்த தவறான சட்டத்தை மாற்றக்கூடிய அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டும்தான் உள்ளது. உங்களால் இதை மாற்ற முடியுமா? 

மேலும், சர்குலேஷன் காட்டி அரசின் சலுகை, விளம்பரங்கள் கோடிக்கணக்கில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் .இது ஒரு புறம் அடுத்தது இதையே இவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள். இவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்று தனியார் கம்பெனி விளம்பரங்கள், தனியார் வியாபார நிறுவன விளம்பரங்கள், இதையும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி என்றால் இரண்டு பக்கமும் இவர்களுக்கு வருமானம். இதை சமூக நலன் சார்ந்து இந்த கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகள் நடத்தினால், இந்த அளவுக்கு சர்குலேஷன் காட்ட முடியுமா? 

அடுத்தது,இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் உண்மையை மறைத்து ஒரு பெண் அரசியல் விமர்சகர் சொல்லக்கூடிய கருத்தில் எவ்வளவு உண்மைகள் வெளிப்படுத்தியிருக்கிறார்? அதைக் கூட இந்த ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. மக்கள் அதிகாரம் தொடர்ந்து நடுநிலையோடு இந்த செய்திகளை வெளிப்படுத்தி இருக்கிறது. வேண்டுமானால் எங்களுடைய இணையதள செய்திகளை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதில் யாரும் மறைக்க முடியாது. 

மேலும், நடந்த சம்பவங்கள் சில செய்திகளை போட்டு விட்டு, நடுநிலை ஊடகங்களாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது மக்களுக்கு தெரியாது. ஆனால், எங்களைப் போன்ற ஆட்களுக்கு அது புரியும் . மேலும், ராதா தேவர் போன்ற நடுநிலையான அரசியல் விமர்சிகளுக்கு தெரியும். இங்கே இந்த ஊடகங்களை பற்றி இந்த அம்மா தெளிவாக விளக்குகிறார். அதிலும் பள்ளியில் நடைபெற்ற மகாவிஷ்ணு சம்பவம் பற்றி யாரும் சொல்லாத சில கருத்துக்களை உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார். இக் கருத்து பற்றி சில தினங்களுக்கு முன்பே மக்கள் அதிகாரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

அவரை கைது செய்தது தவறு. வாக்குவாதத்தில் ஊனமுற்ற ஆசிரியர் சங்கர் மற்றும் மகாவிஷ்ணு பேசும்போது இது கருத்து மோதல் தானே தவிர, ஊனமுற்றவர்களை அவர் இழிவாக பேசவில்லை.அப்படியே புகார் கொடுத்து இருந்தாலும், ஊனமுற்ற ஆசிரியர் சங்கர் தான் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்தான் ஊனமுற்றவர்களை இழிவாக பேசி விட்டார் என்று கருத்து சொன்னார். சொன்ன கருத்துக்கு சங்கம் வந்து புகார் தருகிறது. அந்த புகாரியின் அடிப்படையில் மகாவிஷ்ணு மீது வழக்கு பதிவு செய்து, அவரை காவல்துறை கைது செய்கிறது. சம்பவம் நடக்கும் இடத்தில் அவர்கள் இல்லை. அவர்களுக்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை .

ஆனால், இழிவாக பேசினார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவரை கைது செய்து விட்டார்கள். இந்த சட்டம் உண்மையிலே காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் ஒரு தவறான சட்டம். எப்போது இது போன்ற தவறான நடவடிக்கைகள் காவல்துறை எடுக்கிறார்களோ, அவர்கள் மீதே அந்த சட்டம் திரும்ப வேண்டும். அது நீதிமன்றத்தில் போய் அதற்கு ஒரு வழக்கு தொடர்ந்து, அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்க கூடாது. 

அப்போதுதான் காவல்துறை ஆட்சியாளர்களின் எடுபிடியாகவோ, அரசியல் கட்சிகளின் எடுபிடியாகவோ செயல்படாது. மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஏனென்றால் மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஆட்சியாளர்களின் வீட்டிலிருந்து உங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. அரசியல் கட்சியினர் சம்பளம் கொடுக்கவில்லை. இதை புரிந்து காவல்துறை செயல்பட வேண்டும். அதிகாரம் கையில கொடுத்து விட்டார்கள் என்று இந்த பொய் வழக்குகள் போடுவது, அது காவல்துறைக்கு எதிராக இருக்க வேண்டும் . 

இன்று கூட சென்னை உயர்நீதிமன்றம் சுமோட்டபாக ஒரு வழக்கை எடுத்துள்ளது. இது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. அதாவது ஒரு பாதிக்கப்பட்ட பாலியல் பெண்ணின் பெற்றோர்கள், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தால், அவர்களை அடித்து விரட்டி இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமை?. வேற எங்க போய் சொல்வார்கள்? மேலும், இதையெல்லாம் சட்டத்தால் ஒன்னும் செய்ய முடியவில்லை என்று நினைக்கும் போது அந்த சட்டம் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது.

இதுதான் சமூகப் பிரச்சனையை அதிகரிக்கிறது. மக்களின் வாழ்க்கை போராட்டத்தை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய சட்டம். நீதிமன்றத்தில், நீதிபதிகள் தான் இதை சமூக நலன் கருதி இந்த காவல்துறையின் கருப்பு சட்டங்களை களை எடுக்க வேண்டும். அதே போல் தான் பத்திரிக்கை துறையில் உள்ள இந்த கருப்பு சட்டங்களை நீதித்துறை தான் களை எடுக்க வேண்டும். சட்டம் என்பது கண்ணை மூடிக்கொண்டு நீதி தேவதை கையில் தராசு வைத்திருப்பது எப்படியோ, அப்படித்தான் இருக்க வேண்டும்.

 அது கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு அந்த சட்டம் சாதகமாகவும், சமூகநலன் பத்திரிகைகளுக்கு அது எதிராகவும் உள்ள சட்டமாக உள்ளது. இதைவிட வேறு யாரும் இந்த சட்டங்களை பற்றி தெளிவாக விளக்க முடியாது. அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசின் செய்து துறை உயர் அதிகாரிகளுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தொடர்ந்து இச்செய்திகளின் மூலம் தெரிவித்து வருகிறேன். இதைப் பற்றி அலட்சியம் செய்தால், நீதிமன்றத்தில் இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா முதலில் பத்திரிகை என்றால் என்ன? எதற்கு பத்திரிக்கை? யாருக்கு பத்திரிக்கை? அதனுடைய நோக்கம் என்ன? இது எல்லாம் தெரிந்து சர்குலேஷன் சட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு சர்குலேஷன் சட்டம் ஊழல்வாதிகளுக்கும், அரசியல் கட்சியினர் தவறுகளை,மூடி மறைப்பதற்கும், மேலும் அவர்களுடைய பேச்சுக்களை விளம்பரப்படுத்துவதற்கும், இந்த சர்குலேஷன் சட்டம் இருந்து வருகிறது. இதனால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. அரசியலில் ஊழலை ஒழிப்பதற்கு தான் பத்திரிகை, தொலைக்காட்சிகள் போராடுகிறது என்று சொன்னால் அதற்கான உறுதித் தன்மை இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் கொடுக்க வேண்டும்.

அதாவது ஊழலை ஒழிப்பது போல் காட்டிக் கொண்டிருப்பது, ஊழல்வாதிகளே உத்தமர்களாக பேசிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்து ஏமாறுவது போல, இந்த சர்குலேஷன் சட்டம் வைத்து கார்ப்பரேட் ஊடகங்கள் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. மக்களை ஏமாளிகளாக ஆக்குவது கார்ப்பரேட் தொலைக்காட்சிகளின் திறமை. அந்த திறமையான சட்டம் தான் சர்குலேஷன் சட்டம், அது மட்டுமல்ல. இந்த திறமையெல்லாம் நீதிமன்றம் தான், இந்த உண்மைகளை உற்று கவனிக்க வேண்டும். பிறகு நடுநிலையான தீர்ப்பு வழங்கினால், பத்திரிக்கை துறையில் போடப்பட்டுள்ள இந்த சர்குலேஷன் கருப்பு சட்டம் உடைக்க முடியும். 

மேலும், தொலைக்காட்சி விவாதத்தில் எவ்வளவு தெளிவாக ராதா தேவர் என்ற பெண்மணி, தெளிவாக குறிப்பிடுகிறார். அதாவது மதிவதனி என்ற பெண் திராவிட சித்தாந்தத்தில் பேசுபவர், அவர் கடவுள் மறுப்பாளர். அவர் என்ன பேசுவார்? எல்லாம் தெரிந்த மேதை போல் இந்துமத உணர்வாளர்களை புண்படுத்தி இருக்கிறார். இவர் பேசியதற்கு இவர் மேல் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒரு மதத்தின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக பேசினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். காவல்துறை சட்டப்படி பார்த்தால் மதிவதனி மீது தான் போட்டிருக்க வேண்டும் .

இதைதான் நாட்டில் இந்த கார்ப்பரேட் நிறுவன தொலைக்காட்சி பத்திரிகைகள் தொடர்ந்து இப்படிப்பட்ட தவறுகளை செய்து கொண்டிருக்கிறது. எளியவனை வலியவன் வீழ்த்துவது சட்டமாக இருக்கிறது, இது பத்திரிக்கை துறையிலே இருக்கிறது என்றால், சாமானிய மக்களிடம் எப்படி இருக்காது ? கடவுள் மறுப்பாளர்களுக்கு, மறுபிறப்பிலோ, பாவ புண்ணியத்திலும் நம்பிக்கை இல்லை என்றால், நீங்கள் அதைப் பற்றி பேசக் கூடாது. நம்பிக்கை இருக்கும் மக்கள் பேசுகிறார்கள். வாழ்க்கை ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கைகள் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த மதத்தில் மூடநம்பிக்கை இல்லை? என்று அரசியல் விமர்சகர் ராதா தேவர் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். அதனால், இப்போது மக்கள் எது உண்மை? எது பொய் ?என்பதை மட்டும் பாருங்கள். பெரிய ஊடகம், சிறிய ஊடகம் என்பது முக்கியமல்ல. உண்மை, சமூக நலன் இதுதான் முக்கியம். அமைச்சர் பேசி விட்டார் என்பது முக்கியமல்ல, அவர் என்ன பேசினார்? எதைப் பற்றி பேசினார் ?அதுதான் முக்கியம்? அவர் தவறாக பேசிவிட்டு, ஒரு சார்பாக பேசிவிட்டு ,உண்மை என்பது எது என்று தெரியாமல் பேசிவிட்டு, போனதால் இன்று பிரச்சனை தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு மக்களால் மகாவிஷ்ணு சம்பவம் மக்களிடையே பேசப்படுகிறது. 

இதையெல்லாம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, பிரேம லதா போன்றோர் சர்வ சாதாரணமாக மூடநம்பிக்கை, மதவாதம் எதையாவது ஒன்று சொல்லி அரசியல் செய்வதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *