நாட்டில் பெருகிவரும் ஊழல் மற்றும் அராஜகங்களை மக்களுக்கு வெளிப்படுத்தாமல் கார்ப்பரேட் ஊடகங்களின் மறைமுக அரசியல் சலுகை, விளம்பரங்களா ? சமூக ஆர்வலர்கள் .

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 09, 2024 • Makkal Adhikaram

நாட்டில் நீதிமன்றம் இல்லையென்றால் ! சாமானியனின் பத்திரிகைகள் கார்ப்பரேட்டுக்களால் வஞ்சிக்கப்படுவது தடுக்க முடியாது. எத்தனையோ பேர் பல லட்சங்களை இழந்து, இந்த பத்திரிகை துறையை சமூக நலனுக்காக நடத்தியவர்கள் காணாமல் போய்விட்டார்கள். மேலும், என்னுடைய நண்பர் ஒருவர் கோவையில் வார பத்திரிக்கை நடத்தி சுமார் 50 லட்சத்துக்கு மேல் நஷ்டப்பட்டு பத்திரிகையை நிறுத்திவிட்டார். இதுபோல் சில ஆண்டுகள் நடத்தி, அவர்களால் தொடர்ந்து பத்திரிகையை நடத்த முடியவில்லை.

மேலும், இன்றைய சாமானியர்களின் பத்திரிகைகள் இணையதளத்தில் அதாவது மக்கள் அதிகாரம் போன்ற சில பத்திரிகைகள் லட்சங்களில் பார்வையாளர்களாக இருந்தும், அதற்கும் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க முடியாது என்கிறார்கள். பத்திரிகைகளில் வந்தால் தான் சர்குலேஷன், இணையதளத்தில் வந்தால் அது சர்குலேஷன் இல்லையா? அந்த செய்திகளை மக்கள் படிக்கவில்லையா? படிக்காமல் பார்வையாளர்கள் வந்து விடுகிறார்களா ? ஏன்? இதற்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் அரசியல் தான் முக்கிய காரணம் .மேலும், 

இவர்கள் எந்த ஆட்சி வந்தாலும், அவர்களுடன் இவர்களுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்று ரகசிய அரசியல் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் .அதுதான் அரசின் கொள்கை முடிவு என்று செய்தித்துறை சொல்லிவிடுவார்கள் ,இந்த உண்மை கூட தெரியாமல் இன்றுவரை, இந்த சாமானியர்களின் பத்திரிகைகள் ஏமாந்து கொண்டு இருக்கிறது. அதை எதிர்த்து மக்கள் அதிகாரம் தொடர்ந்து செய்திகளை ஐந்தாண்டுகளுக்கு மேல் வெளியிட்டு வருகிறது. இது பத்திரிக்கையில் மட்டுமல்ல, இணையதளத்திலும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கான ஆதரவு மக்களிடம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இன்று இணையதளத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் பார்வையாளர்களாக (makkaladikarammedia.com & makkaladhikaram.page ) உள்ளனர்.மேலும், 

மக்கள் உண்மையை வெளிப்படுத்தும் பத்திரிகைகள் எது ?என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், அரசியல் கட்சியினர் இந்த கார்ப்பரேட் ஊடகங்களை மட்டும் நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தவிர, தினசரி பத்திரிகைகள் என்ற போர்வையில், அவர்களை பாராட்டி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும். அவர்கள் ஊருக்குள் எவ்வளவு அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்து கொண்டு இருந்தாலும், அவர்களைப் பற்றி நல்லவர்களாகவே செய்திகளை போட்டு, 

அதுவும் சர்குலேஷன் என்று செய்தித்துறை சொல்லிக் கொண்டிருக்கும், பத்திரிகை உலகமும் இதுதான் பத்திரிகை என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த துறை மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தக்கூடிய துறையா? அல்லது உண்மைகளை மக்களுக்கு மறைக்கக் கூடிய துறையா? என்ற நிலைமைக்கு மக்களே ,கேள்வி கேட்டு மக்களே விமர்சனம் செய்யும் அளவிற்கு செய்தித் துறையும் ,கார்ப்பரேட் பத்திரிகைகளும் இருந்து வருகிறது.

அது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் , பல செய்ய முடியாத தேர்தல் அறிக்கைகளாக மக்களை ஏமாற்றுவது தான் தேர்தல் அறிக்கையாகி விட்டது.அதைப்பற்றி, இன்று அரசு அதிகாரிகளும், கல்வித்துறை அதிகாரிகளும்,கல்வித்துறை ஆசிரியர்களும், உள்ளாட்சித் துறை அதிகாரிகளும், தங்களுடைய வேதனைகளை தெரிவித்து, அவர்களுடைய போராட்டங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .

ஆனால், எந்த பத்திரிக்கை, தொலைக்காட்சியும் தங்கள் சுயநலத்திற்காக அரசு இதை செய்வது தவறு, தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் அரசு அதிகாரிகளுக்கும் செய்யவில்லை. மக்களுக்கும் செய்யவில்லை என்பதை எந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் ஆவது, இதுவரை திமுக அரசின் தவறுகளை பற்றி எடுத்துச் சொல்லி இருக்கிறதா? சொல்லாது, .சொன்னால் அடுத்த நாளே அவர்களுக்கு கிடைக்க கூடிய DIPIR விளம்பரங்கள் கட்டாகி விடும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.அது மட்டுமல்ல அவர்கள் சொல்வது, 

 கருப்பு பணத்தை வைத்துக்கொண்டு, ஆரம்பித்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளே கூலிக்கு மாரடைக்கிறது என்றால்! இந்த சமூக நலனுக்காக,சொந்த பணத்தில் நடத்தி கொண்டு, உழைப்பையும் அதற்காக செலவழித்து, உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இந்த பத்திரிகைகள் எவ்வளவு ?ஆளும் கட்சிக்கு எதிராக போராட வேண்டி இருக்கும்? மேலும், சமூகத்திலும் எவ்வளவு போராட வேண்டி இருக்கும்? என்கிறார்கள் .

தவிர,ஒரு நாட்டின் அரசியல் ,பொது நலத்துடன் செயல்படாமல், சுயநல அரசியல் கொள்கைகள்,மத்திய, மாநில அரசுகள் எதுவானாலும், பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தாது.அதனால், இந்த சமூக நலன் பத்திரிகைகளும், போராட வேண்டி இருக்கிறது. தற்போது கூட ,மத்திய-மாநில அரசுகள், தேர்தல் அறிக்கையில் சமூகநலன் பத்திரிகைகளுக்கும் ,பத்திரிக்கையாளர்களுக்கும் எந்த திட்டங்களும்,எங்களுடைய கோரிக்கைகளும் இடம்பெறாதது ஏமாற்றம்தான் .மேலும்,

மக்களிடம் அரசியலில் உள்ள அராஜகங்கள், ஊழல்கள், மக்களிடம் கொண்டு செல்லும் போது மக்கள் விழித்துக் கொள்வார்கள். ஆனால், பஸ் பாஸ்க்காக, விளம்பரங்களுக்காக, செய்தித்துறை சொல்லும் செய்திகளை மட்டும் போட்டுக் கொண்டிருந்தால், அவர்கள் தான் பத்திரிக்கை. அதுதான் பெரிய பத்திரிக்கை என்று செய்தித் துறை அதிகாரிகள் பாராட்டி அதை வைத்து லாபம் பார்ப்பார்கள். ஆளும் கட்சியும் மக்களுக்கு நல்லவர்களாகவே இருந்து கொண்டே இருப்பார்கள் .அதனால்தான், கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் இருப்பவர்கள் மட்டுமே, பத்திரிக்கை நல வாரியத்தின் முக்கிய பொறுப்பாளர்களாகவும், உறுப்பினர்களாகவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்? இது எவ்வளவு பத்திரிக்கை துறையின் கேவலமான சுயநல அரசியல்  ? மேலும்,

இந்த அவலங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் சமூக நலன் பத்திரிகைகள் எவ்வளவு ஆட்சியாளர்களுடனும், செய்தித்துறை அதிகாரிகளுடனும்,கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுடனும் எவ்வளவு  மறைமுக போராட்டங்கள், சூழ்ச்சிகள், தடைகள்,கேவலங்கள் அனுபவித்து போராட வேண்டி இருக்கிறது? இவை அனைத்தும் நீதிமன்றம் தான் எங்களை இறுதியாக காப்பாற்ற வேண்டிய எங்களின் ஒரே நம்பிக்கை. அதுதான் சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை மேலும்,

 சாமானிய மக்களாக இருந்தாலும், சாமானிய மக்களின் பத்திரிகைகளாக இருந்தாலும், வேறு வழி இல்லை. ஏனென்றால்,இன்று நீதிமன்றமே இல்லை என்றால், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் (பொறியாளர்) சொன்னது போல், எல்லோரும் நம்மை காலி செய்து விடுவார்கள் என்றார். இது மற்ற துறைகளில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு புரிந்த உண்மை, இந்த செய்தி துறையில் இருக்கின்ற செய்தி துறை பிஆர்ஓ க்களுக்கு ஏன் புரியவில்லை?எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கேள்வி? மேலும்,

 இது பற்றி மத்தியல் ஆளும் பிஜேபியும், மாநிலத்தில் ஆளும் திமுகவும், இதற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிக்கவில்லை .இதற்குக் காரணம் அரசியல் கட்சிகளின் சுயநல அரசியல் . இந்த சுயநல அரசியல் கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளுடன் ரகசிய கூட்டணியில் இவர்களுக்கு தேவையான அனைத்தும் மேல் மட்ட அரசியலில் காய் நகர்த்தி விடுகிறார்கள். அதனால், இது போன்ற பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தங்கள் சுய லாபங்களுக்காக அரசியலை மையப்படுத்தி முன்னேறி விட்டது.

நமக்கு எத்தனை கோடி சலுகை, விளம்பரங்கள் நம்முடைய பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு கிடைக்கும்?  இப்படிப்பட்ட சீப்பஸ்ட் அரசியல்,ஆளும் கட்சியும், கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளும், மக்களிடம் சமூக அக்கறை இன்றி, இன்றைய அரசியல் சுயநலமாக மாறி விட்டதற்கு முக்கிய காரணம். அதனால், வாக்களிக்கும் மக்கள் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களித்து ஏமாற்றப்படுகிறார்கள். நாட்டில் இந்த சுயநல அரசியலால் உழைக்கும் மக்களுடைய சொத்து மதிப்பு வளர்ச்சியை விட,

பதவிக்கு வருபவர்களின் சொத்து மதிப்பு ,அரசியல் கட்சியினரின் சொத்து மதிப்பு,திடீரென்று ஆயிரம் மடங்கு, 500 மடங்கு, 100 மடங்கு எப்படி உயரும்?  தவிர ,இன்று அரசியல் கட்சியினர் சுயமாக ஏதோ ஒரு தொழில் செய்து அல்லது உழைத்து சாப்பிட கூட தகுதி இல்லாமல், பேச்சுக் கலை மட்டுமே தெரிந்து கொண்டு, அரசியலில் பொது சொத்துக்களை சட்டப்படி கொள்ளை அடிப்பது,?அவர்களுடைய அரசியல் கொள்கையாகவும், குறிக்கோளாகவும் இன்றைய அரசியல் கட்சியினர் முதல் கட்சி தலைவர்கள் வரை, பல கோடிகளை வீட்டுக்கு எடுத்துச் செல்வது தான், அவர்களுடைய திறமையாகவும், வாக்களிப்பவர்களை ஏமாளிகளாகவும், தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல்.மேலும், 

இந்த ஏமாற்று அரசியலுக்கு துணை போவது கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் .இதை தடுக்க வேண்டும் என்றால், பத்திரிக்கை துறையில் இருக்க கூடிய தவறான விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் . அந்த விதிமுறைகள் சமூக நலனில் அக்கறை உள்ள எத்தனை பத்திரிகைகள் நடுநிலையோடு அரசியல் கட்சிகள் சார்பின்றி வெளிவருகிறது? அதன் உண்மையான செய்திகள் மக்களுக்கு பயன் அளிக்க கூடியதா? அதற்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.மேலும்,  

இது மக்களின் வரி பணம், சமூக நலன் இல்லாத பத்திரிகைகளுக்கு எதனால் கொடுக்கப்படுகிறது ? கேட்டால் சர்குலேஷன் என்ற ஒரு தவறான விதிமுறை. அந்த விதிமுறையிலும் ,எத்தனை பத்திரிகைகள் தினசரி பத்தாயிரம் பிரிதிகள் அச்சு அடிக்கிறது? அதன் விற்பனை என்ன? வரவு என்ன? செலவு என்ன? அவையெல்லாம் அவர்களுடைய வங்கி கணக்கு? அதில் எவ்வாறு காட்டப்படுகிறது? அவர்களுடைய ஆடிட் ரிப்போர்ட் அனைத்தும் உண்மையா? பொய்யா?இந்த பத்திரிகைகளால் இதுவரை போட்ட செய்திகள் என்ன? மக்களுக்கு சொன்ன, உண்மைகள் என்ன? இதை எல்லாம் ஆய்வு செய்து நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் .மேலும்,

 நாட்டில் உள்ள பொது சொத்துக்களை கொள்ளை அடிக்கவும், பல ஆயிரம் கோடிகளில் ஊழல் செய்யவும்,கனிம வளத்தை பல ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்தாலும்,பல ஆயிரம் கோடிகள் போதைப்பொருள் கடத்தினாலும்,  மக்களிடம் கொண்டு சென்றாலும், மக்களுக்கு எதிரான தவறான அரசியல் நிர்வாகத்தை கொடுத்துக் கொண்டு ,அதை எதிர்த்து குரல் கொடுக்கும் அரசியல் கட்சி என்று சொல்லக்கூடிய அடியாட்கள் வைத்து சமூக ஆர்வலர்களை, சமூக நலன் விரும்பிகளை மிரட்டுவதும், இவர்களுக்கு மறைமுக ஆதரவாக இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும், உதவாத சில தினசரி பத்திரிகைகளும் இருந்து வருகிறது. 

இதனால், நாட்டில் குற்றவாளிகள், குற்ற வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையெல்லாம் தடுக்கக்கூடிய ஒரே இடம் நீதிமன்றம் தான். அதனால் தான், செய்தித் துறை இந்த ஆட்சியில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு என்னென்ன கடுமையான விதிமுறைகள் கொண்டுவர முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டார்கள்.அதாவது பருவ இதழ்களுக்கு அரசு அடையாள அட்டை கூட அதற்கு RNI சென்னையில் வாங்க வேண்டும் என்ற அரசாணை கூட போடப்பட்டிருக்கிறது . 

இந்த அரசு அடையாள அட்டைகளுக்கு கூட சில பத்திரிகை சங்கங்களும் ,பத்திரிகைகளும் செய்தி துறையிடம் கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, சம்பந்தமில்லாத ஒருவரை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வைக்கிறார்கள் .எனவே,

இந்த கேவலத்தையும், அவலத்தையும் பத்திரிக்கை துறை நீதிமன்றத்தில் தான் முறையிட்டு, சமூக நீதியும், தவறான விதிமுறைகளும், நீக்க முடியும். இது தவிர, காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிகைகளின் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் .அந்த மாற்றம் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும் .அதற்கு பிறகு தான், மற்ற பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் அதற்கான தகுதியின் அடிப்படையில் அவைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். இந்த தகுதி, மாற்றம் எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் ?என்றால், மக்கள் நலன் சார்ந்து பொது நலனில் உருவாக்கப்பட வேண்டும். 

அப்போதுதான் பத்திரிக்கை துறை, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட முடியும் .இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. அரசியல் தலையீடு இருக்கும் வரை, சமூக நலன் இருக்காது. அரசியல் எப்படி அரசியல் கட்சிகளின் சுயநலமாக மாறிவிட்டதோ, அதே போல் தான், இந்த பத்திரிகை துறையும், செய்தித் துறையின் சுயநலமாக மாறி விட்டது.  

இதன் பின் விளைவு நாட்டில், அரசியல் சுய நலமாகி விட்டது. சுயநலத்தின் எதிரொலி அரசியலில் அராஜகங்கள், ஊழல்கள் , சட்டத்தை ஏமாற்றும் கொள்ளைகள், தொடர் கதையாகிறது. அதை சகித்துக் கொள்வது பொதுமக்கள் தெரிவிக்கும் வேதனை. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு அரசியல் தலையீடு இன்றி நீதிமன்றம், நீதி வழங்கி நாட்டு மக்களையும், சமூக நலன் பத்திரிகைகளையும் பாதுகாப்பது சட்டத்தின் பொறுப்பு மிக்க கடமை .

ஆசிரியர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *