
பத்திரிக்கை என்பது அரசியல் கட்சியை மற்றும் கட்சியினரை பாராட்டுவதற்கு அல்ல. அது அவர்களுடைய கட்சி பத்திரிக்கை பாராட்டிக் கொள்ளலாம். அதேபோல், இன்றைய சோசியல் மீடியாவில் பேசுபவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களாக ஆகிவிட முடியாது.

ஒரு பத்திரிக்கை என்றால் !அதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. இன்று வரைமுறை இன்றி தான் பத்திரிகை, தொலைக்காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது.

ஏன் ?மத்திய ,மாநில அரசின் செய்தி துறையே ,இந்த பத்திரிக்கை துறைக்கு தகுதியற்ற பத்திரிகைகளை எல்லாம் அங்கீகரித்திருக்கிறது.

சட்டம் என்பது நடுநிலையானதாக இருக்க வேண்டும். இங்கே பணக்காரனுக்கும், ஏழைக்கும் ஒரே சட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது வியாபார பத்திரிகையும் ,சர்குலேஷன் சட்டம் பத்தாயிரம், கட்சி பத்திரிகைக்கும், சர்குலேஷன் சட்டம் பத்தாயிரம், இப்படி பத்தாயிரம் பிரதிகள் ,எந்த பத்திரிக்கையாக இருந்தாலும், அச்சடித்தால் தான் அந்தப் பத்திரிகை அரசின் அங்கீகாரம் பெற முடியும்.

பத்தாயிரம் அடிப்பது பெரிதா ?இல்லை, முக்கிய செய்திகள், மக்களுக்கு தேவையான செய்திகள், உண்மையை வெளிப்படுத்தக்கூடிய செய்திகள், போலிகளை அடையாளப்படுத்த கூடிய செய்திகள்,பெரிதா? இதுதான் மிக முக்கியமானது.

நீங்கள் பத்தாயிரம் பிரதிகள் அச்சு அடிப்பது பெரிதல்ல அல்லது ஒரு கோடி பிரதிகள் அச்சடித்தாலும், மக்களுக்கு தேவையில்லாத செய்திகளை கொடுத்து, அதனால் எந்த பயனும் இல்லை. வியாபார நோக்கத்தோடு, சினிமா செய்திகள், மந்திரிகள் வந்ததும் ,போனதும் போன்ற செய்திகள்.

மாவட்ட ஆட்சியரின் செய்திகள் இதையே ஒரு பத்து பக்கத்திற்கு நிரப்பி ,தினசரி இந்த பத்திரிக்கையின் மூலம் மக்கள் தெரிந்து கொள்வது என்ன? எதுவும் இருக்காது. அதனால, அவர்களுக்கு எந்த பயனும் இருக்காது.ஆனால் இந்த பத்திரிகைகள் மக்களின் வரிப்பணத்திலே ,சலுகை விளம்பரங்களை வாங்கி, சர்குலேஷன் கணக்கை காட்டி விடுவார்கள். இதுதான் அரசியல்! இதற்குள் இவர்களின் பத்திரிகை வியாபாரம்.

ஆனால், இந்த சமூக நலனில் அக்கறை கொண்டு, சமூகத்திற்கு என்ன செய்திகள் மக்களுக்கு போய் சேர வேண்டும்? சமூகம் பிரச்சனைகள் என்ன? தேசத்தின் பிரச்சினைகள் என்ன? என்ற நோக்கத்தோடு வெளிவரும் பத்திரிகைகள் ,மிக, மிக குறைவானது .

அந்த பத்திரிகைகளுக்கும் ,இந்த பத்தாயிரம் ,இவர்களுடைய சர்குலேஷன் சட்டம். இப்படி ஒரு தவறான விதிமுறைகளை வகுத்து, மத்திய மாநில அரசின் செய்தி துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் பேசுவார்கள், எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நக்கீரன் கோபால் பேசியது ,சோசியல் மீடியாவில் அதிக அளவில் விஜயின் ரசிகர்களும், அவர்களது கட்சியினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகப்பட்ட பதிவுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு பத்திரிகை மற்றும் பத்திரிகையாளனோ செய்யக்கூடிய வேலை அல்ல. இவரே நீதிபதி போல், விஜயை கைது செய்திருக்க வேண்டும் என்கிறார். அடுத்தது, நக்கீரன் கோபால் ஒரு பத்திரிக்கையாளனே கிடையாது.

ஒரு பத்திரிக்கையாளர் என்ற தகுதியை பெறுவதற்கு பல ஆண்டுகள் பத்திரிக்கை துறையில், செய்திகள் ,அவருடைய கட்டுரைகள், சமூகத்திற்கு என்ன பயன்? என்பதை அது வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அது இல்லாமல், ஒரு கட்சிக்கும் ஒரு கட்சிக்காரர்களுக்கும் ஏஜெண்டுகளாக செயல்படும் பத்திரிகைகள் எல்லாம் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்களும் பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏஜென்ட் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் கிடையாது.
நீ பத்திரிகை நடத்திவிட்டால் பத்திரிக்கையாளனாக ஆகிவிட முடியாது கோபால் . நீ திமுக அரசின் ஏஜென்ட் ,அந்த கட்சியின் ஏஜென்ட் , இதற்கு தமிழக அரசு சிறப்பு பத்திரிகையாளர்கள் என்று சொல்லி பாராட்டி பரிசு வழங்கி இருப்பது பத்திரிக்கை துறைக்கு கேவலம்.
நக்கீரன் கோபால் ஆரம்பத்தில் இந்த பத்திரிகைகளுக்கு லேஅவுட் என்று சொல்லக்கூடிய அந்த வேலையை பார்த்தவர். இவர் நிருபர் கூட கிடையாது. இவருக்கு எப்படியோ யோகம் ,அதிர்ஷ்டம் வீரப்பனால் வந்தது. வீரப்பன் கொடுத்த ஒரு 300 கோடி அந்த காலத்தில் கருணாநிதி கோபாலும் பிரித்துக் கொண்டார்கள் என்று அப்போதே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.

அந்த வகையில் இவர் ஒரு குருட்டு அதிஷ்டம் அடித்த அரசியல்வாதி போல், இவருக்கு அடித்து விட்டது. அந்த வகையில் ஜெயலலிதாவை ,எதிர்த்து எழுதிக் கொண்டிருப்பார். முதலில் எந்த ஒரு அரசியல்வாதியும் எதிர்ப்பதோ அல்லது அவர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பது, பத்திரிக்கையின் வேலை அல்ல. அது புரோக்கர் வேலை இந்த புரோக்கர் வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம்.அவர்கள் தான் தற்போது பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய கடமை மக்களுக்கு என்ன செய்திகள் கொடுக்க வேண்டும்? இந்த அரசியல் கட்சி தலைவர்களோ அல்லது கட்சியினரோ தவறு செய்தால், அதை சுட்டிக் காட்ட வேண்டும் .அவர்களை பாராட்டி ,புகழ்வது பத்திரிகைகள் வேலை அல்ல .
ஆனால், அந்த வேலையை பார்த்துக் கொண்டு , நானும் பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், முதலில் செய்தியாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்குமே வித்தியாசம் தெரியாமல், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர,இவர் என்ன சொன்னார்? அவர் என்ன சொன்னார்? உங்களை பற்றி இப்படி சொல்கிறாரே, இதுவா ?பத்திரிகை ? இது மக்களை ஏமாற்றும் வேலை.
அண்ணாமலை இதை சொன்னார் ,அண்ணாமலை அதை பேசினார் , அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது எல்லாம் நாட்டில் ,போலி அரசியலை ஊக்குவிக்கும் வேலை .
நீ என்ன செய்தாய் ?எப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறாய் ?உன்னுடைய அரசியல் நேர்மை என்ன? உன்னுடைய அரசியல் தகுதி என்ன? இதை தான் பத்திரிக்கை சொல்ல வேண்டும் .

ஆனால், ஊழல்வாதியை பாராட்டிக் கொண்டு, ஊழல் அரசியலுக்கு முட்டு கொடுத்து கொண்டு, நானும் பத்திரிகை என்று இன்று தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது மக்களை ஏமாற்றும் வேலை.
செய்தித்துறை ஊழலுக்கு எதிரான போராடுகின்ற பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சலுகை, விளம்பரங்கள் கொடுத்திருக்க வேண்டும் அதுதான் செய்தித் துறையின் முக்கிய கடமை. அதற்கு தான் மக்களின் வரிபணம் பயன்பட வேண்டும். ஆனால், இன்று வியாபார பத்திரிகைகளுக்கும், அரசியல் கட்சி பத்திரிகைகளுக்கும், மக்களின் வரிபணம் கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, ஒரு பத்திரிக்கை என்றால் !அதனுடைய தகுதியை ,நேர்மை வைத்து, தான் பத்திரிகை தரம் பிரித்து இருக்க வேண்டும். அப்படி செய்து துறை தரம் பிரிக்காமல் சர்குலேஷன் மையப்படுத்தி, அதுவே பத்திரிகையின் தரமாக செய்தித் துறை எடுத்துக் கொண்டது . இது.பத்திரிகை துறையில் மிகப்பெரிய தவறு. மேலும்,
. பத்திரிக்கையின் வியாபார நோக்கத்திற்கு ,அரசியல் கட்சியின் வியாபார நோக்கத்திற்கு ,அரசியல் வியாபாரத்திற்கு பயன்படும் துறையாக, ஊழல் அரசியலுக்கும் ,ஊழல் அரசியல் கட்சிகளுக்கும், முட்டு கொடுப்பதற்கு, இன்றைய மத்திய மாநில அரசின் செய்தித் துறை இருக்கிறது.மேலும்,

பணத்தால் சர்குலேஷனை கொண்டு வரலாம் .ஆனால் ,செய்தியை, முக்கிய கருத்துக்களை, விஷயங்களை ,உண்மைகளை யார் கொண்டு வருவது? அதுதானே மக்களுக்கு தேவை. அது இல்லாததால், இன்று அரசியல் என்பது சுயநலம் ஆகிவிட்டது . அரசியலில் நேர்மையில்லாத, தவிர ,ஊழல் அரசியலை பாராட்டிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் எப்படி பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகிவிட முடியும்?
அதுமட்டுமல்ல , தற்போது,மக்கள் பத்திரிக்கை வாங்கி படிக்கக்கூடிய மனநிலையில் இல்லை .ஐந்து வயது குழந்தையிலிருந்து 80 வயது வரை உள்ளவர்கள் ,இணையதளத்தில் தான் பத்திரிக்கை அதிக அளவில் எனவே ,சட்டம் காலத்திற்கு ஏற்ப மாற்றி இருக்க வேண்டும்.

ஆனால், இந்த மாற்றத்தை கொண்டு வராமல் ஆட்சியாளர்கள் அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்கு செய்தித்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால்,
பத்திரிகை துறையை, மத்திய மாநில அரசின் செய்தித் துறைகள் ,ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதனால், தகுதியான பத்திரிகைகள், வளர்ச்சி அடைய முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது . மேலும், இந்த சட்டங்கள்

அது யாருக்காக ?என்றால்! கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை, தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் சட்டங்கள்.

இது தவிர, ஸ்டாலின் நக்கீரன் கோபால் போன்ற ஆட்களுக்கு எல்லாம், திமுக அரசு பாராட்டி பரிசை கூட கொடுத்து இருக்கிறது. எவ்வளவு கேவலம்?
அவரவர் கட்சி பத்திரிக்கை அவரவர் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நடத்திக் கொண்டிருக்கும் பத்திரிகை. இதுவும் நாலு அரசு செய்திகளை போட்டு விட்டு, அதுவும் சர்குலேஷன் சட்டத்தில் ,சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

உன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கும், உன்னுடைய கட்சியினரை பாராட்டுவதற்கும், நீ பத்திரிகை நடத்திக்கொண்டு ,அதற்கும் மக்களுடைய வரிப் பணத்தில் சலுகை, விளம்பரங்கள் கோடி கணக்கில் கொடுக்க வேண்டுமா ?இது என்ன சட்டம் ? தவறான சட்டங்கள்.
நீ ஒருத்தரைப் பற்றி உயர்வாகவும், இன்னொருத்தரை பற்றி தரகுறைவாகவும், பேசுவது பத்திரிகை வேலை இல்லை. அது புரோக்கர் வேலை.

பத்திரிகையின் செய்தி நடுநிலையாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, விஜய்க்கு ஆதரவாக ஒரு பத்து பேர், எதிராக ஒரு 20 பேர், செந்தில் பாலாஜிக்கு ஒரு 20 பேர், இப்படி பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் எப்படி பத்திரிகையாளர்களாக இருப்பார்கள் ?அவர்களெல்லாம் எப்படி பத்திரிகையாளர்கள் என்று மக்களும் நினைக்கலாம் ?
பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத கூட்டம் எல்லாம், நானும் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய ஒரு செய்தியாவது இணையதளத்தில் எவ்வளவு பேர் படிக்கிறார்கள்? என்று சொல்ல முடியுமா? இது தவிர வாட்ஸ் அப்பில் செய்தி போடுபவர்கள், பேஸ்புக்கில் ட்விட்டரில் செய்தி போடுபவர்கள், எல்லாம், நானும் பத்திரிகையாளன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த போலி பத்திரிகைகளும், போலிகளும் ,போலி அரசியலை நாட்டில் ஊக்குவிக்கும் வேலை. தமிழ்நாட்டில் அதுதான் அதிக அளவில் இருந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி கண்டுகொள்ளாத திமுக அரசு, மத்திய அரசு என்ன நடவடிக்கை ?என்ன சட்டங்கள் ?எதுவுமே ஒரு வரைமுறை இல்லாமல் இருக்கிறது.
என்னுடைய சுயலாபத்திற்காக அரசியல்! என் ஆகிவிட்டது. மக்கள் உண்மை தெரியாமல், அரசியல் தெரியாமல் ,ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் .

தமிழ்நாட்டில், நான் இந்த செய்தியை போட்டால், லட்சக்கணக்கான பேர் பார்ப்பார்கள் இது ட்ரெண்டிங் ஆகும் .அது எனக்கு நன்றாக வியாபாரத்தை மக்களிடம் ரீச் ஆகும் .இப்படி எல்லாம் செய்தி போட்டுக் கொண்டு சோசியல் மீடியாவும், பத்திரிகையும் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதை மக்கள் சிந்தியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். அது மட்டுமல்ல, எந்தெந்த பத்திரிகைகள் நாட்டுக்கு தேவையானது? மக்களுக்கு தேவையானது? என்பதை தரம் பிரித்து, அந்த பத்திரிகைகளை ஊக்குவிக்க தெரியாமல், இன்றைய செய்தித் துறை!