
அமெரிக்கா தன்னிடம் அதி நவீன திறன் கொண்ட ஏவுகணைகளை வைத்துக்கொண்டு உலக நாடுகளை மிரட்டுகிறது.
அதனால்,சிறிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற பல நாடுகள் சைனாவின் உதவியும், ரஷ்யாவின் உதவியையும் நாடுகிறது. இதில் யார்? பலம் வாய்ந்த ராணுவத்தை வைத்திருக்கிறார்களோ ,அவர்கள் உலக அரங்கில் தங்கள் பலத்தைக் காட்டி ,பலம் குறைந்த நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,அதிக விஞ்ஞானம் நாட்டிற்கு ஆபத்தை தான் தேடித் தருகிறது. அந்த நாட்டு மக்களுக்கு அழிவைத் தான் தேடித் தருகிறது. எந்த நேரத்தில் போர் வருமோ! என்ற அச்சத்தில் தான், அந்த நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தவிர,இரண்டு நாடுகளுக்கு இடையே போர் வந்தால், இரண்டு பக்கமும் அழிவு நிச்சயம். அமைதி என்பது அங்கே ஏற்படாது.

இதற்கு காரணம் இந்த விஞ்ஞானம் மனித அழிவுக்கு தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய ,அது அணு ஆயுதங்களாக இருக்கட்டும், ஏவுகணைகளாக இருக்கட்டும், இவை அத்தனையும் அழிவுப் பாதையை நோக்கி இருக்கின்ற இடம். இது தெரியாமல் டிரம்ப பேசிக் கொண்டிருக்கிறார். இப்போது அமெரிக்காவைப் போல ,வடகொரியா அதிபர் கிம் மும் தன் பங்கிற்கு 50 அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு, மிரட்டுகிறார்.
இப்படி நாட்டுக்கு நாடு, விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்ததால் ,ஒருவருக் கொருவர் அழிவைத் தேடிக் கொள்கிறார்கள். இது ஆபத்தானது. மனித உயிர்களுக்கு எதிரானது. மனித வாழ்க்கைக்கு எதிரானது. அதே போல் தான் ,தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தொண்டர்கள் என்று குண்டர்களை வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தொண்டனுக்கும், குண்டனுக்கும் வித்தியாசம் தெரியாதா ?அது கூட படிக்காத பத்திரிக்கை நிருபர்கள், பலர் அவர்களை தொண்டர்கள் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சி பத்திரிக்கைகள் இப்படித்தான் மக்களை ஏமாற்றிக் அந்த பத்திரிகையின் நிருபர்களும் அர்த்தம் தெரியாமல் மீடியேட்டர் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் பேசுவது பகுத்தறிவு ,இந்தப் பகுத்தறிவு கூட்டம் எல்லாம், படித்தவன், அறிவார்ந்த சமூகத்திடம், வேலைக்காகாது. அவர்கள் எங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்றால், குடிகார கூட்டம், எப்படியும் பேசும் கூட்டம், இங்கே தான் அவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,தொண்டன் என்றால், நீ என்ன தொண்டு செய்தாய்? உன்னுடைய கட்சிக்காகவா ?இல்லை மக்களுக்காவா? என்ன உன்னுடைய தொண்டு? அதை சொல்லு பார்ப்போம். பொது சொத்துக்களை எப்படி கொள்ளையடிக்கலாம் என்றா? இதற்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் பத்திரிக்கையில் வந்து, நிருபராகவோ அல்லது மக்களை ஏமாற்றுவதற்கோ பத்திரிக்கை நடத்துவது வீண்.
மேலும்,குறைந்தபட்சம் ஒரு பத்திரிக்கை 10 லட்சம் பேரையாவது சிந்திக்க வைத்திருக்க வேண்டும். அவர்களை அறிவுபூர்வமாக அரசியல் கட்சிகளின் அவலங்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். ஏதோ ஆர்.என்.ஐ , மத்திய அரசு தெரியாமல் கொடுத்து விட்டார்கள். அதனால், கார்ப்பரேட் ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளை காப்பியடித்து, மக்களிடம் காட்டி இதுவும் பத்திரிக்கை என்று காட்டவா?

இது தவிர, இதிலும் சில பேர் வாட்ஸ் அப் குருப் ஏற்படுத்திக் கொண்டு, நானும் பத்திரிக்கை என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். இப்படி பத்திரிக்கை துறையில் போலிகள் எப்படி எல்லாம் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இவையெல்லாம் ஒரு உதாரணம் .
அது மட்டுமல்ல, சிறு பத்திரிக்கையாளர்கள் சங்கம் என்று ஆரம்பித்துவிட்டு, அதில் எத்தனை பேர் பத்திரிக்கை நடத்துகிறார்கள்? என்று கூட தெரியவில்லை. ஆனால் லேபிள் வைத்து மக்களை ஏமாற்ற வேண்டும். இப்படிதான், அரசியலிலும், பத்திரிக்கைகளிலும் போலிகள் மக்களை ஏமாற்று வேலை ஆகிவிட்டது.

மேலும் , உலக அரங்கில் விஞ்ஞானம் அதிகமாகி விட்டதால், நாட்டில் போர் உருவாக்கி நாட்டுக்கு நாடு ,சண்டையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அரசியல் கட்சிகளை உருவாக்கி, குண்டர்களை உழைக்காமல், கல்வி அறிவு இல்லாமல் ,பல கோடிகளை சம்பாதிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி அதிக விஞ்ஞானத்தால் நாட்டுக்கு ஆபத்தோ, அதே போல் தான், நம் நாட்டிலும், இந்த அரசியல் கட்சி குண்டர்களால் ஆபத்து.மேலும்,
இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்து ,இந்த குண்டர்களை எல்லாம், தொண்டர்கள் என்று எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகைகளை படித்து ,ஏமாந்து இறுதியில் ஊழல் பட்டியல்களை இவர்களே வெளியிடுவார்கள்.

அதுதான் அவர்கள் தகுதி என்பதை எப்போது தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க போகிறார்கள்? ஊழல் மட்டுமல்ல, ரவுடிசமும், இவர்களால் நாட்டில் உருவாகிறது இதை எப்போது மக்கள் சிந்திக்கப் போகிறார்கள்? சிந்தித்தால் தான், உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில்.