செப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram
நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் இரா.வேலுசாமி தலைமையில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில், அரசு மதுக்கடைக்கு பூட்டு போட முயன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில், தென்னை மற்றும் பனை மரங்களில் இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை, தமிழக அரசு நீக்க வலியுறுத்தி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் இரா.வேலுசாமி தலைமையில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் பங்கேற்று கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும், அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.
ஒவ்வொரு விவசாயியும் தங்களது கையில் இரும்பு சங்கிலி, பூட்டு, சாவியை கொண்டு வந்திருந்தனர். அரசு மதுக்கடையை நோக்கி ஊர்வலமாக வந்த விவசாயிகளை, நாமக்கல் பூங்கா சாலையில் காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்யப்பட்டனர். விவசாயிகளின் திடீர் போராட்டத்தால், சம்பந்தப்பட்ட பேருந்து நிலைய மதுக்கடை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி மதுக்கடையை மூட முயன்ற 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு, அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் நாமக்கல் பேருந்து நிலையம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.