நாளை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் (SIR) முடக்கும் வேலையா?

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

வருவாய்த்துறை அதிகாரிகள் , நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்கள் தெரிவித்துள்ளான.

தற்போது வந்த செய்தி உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளும் ,இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள போவதாக தகவல் வந்துள்ளது.

இது எதற்காக? இந்த ஸ்ட்ரைக் என்று விசாரித்த போது, முறையாக இவர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி கொடுக்கவில்லை. அடுத்தது குறுகிய காலத்தில் அதை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இது அவ்வளவு எளிதில் செய்யக்கூடிய வேலை அல்ல ,அப்படி செய்தால் தவறுகள் நிச்சயம் வரும். மேலும் ,தேர்தல் ஆணையம் முறையாக பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு இதற்கென்று ஒரு தனி ஊதியத்தை கொடுத்தால், நிச்சயம் செய்வார்கள் என்ற ஒரு தகவல் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்ல, தேர்தல் ஆணையம் சனி, ஞாயிறு போன்ற நாட்களில் கூட ,வேலை செய்ய அரசு ஊழியர்களை பயன்படுத்தும் போது, அவர்கள் அதற்கான ஊதியத்தை நிச்சயம் எதிர்பார்க்கத்தானே செய்வார்கள்.

மேலும், தேர்தல் நடத்துகின்ற தேர்தல் ஆணையம், பல ஆயிரம் கோடிகளை இதற்காக செலவு செய்கிறது. அப்படி இருக்கும்போது, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களை சம்பளமே இல்லாமல், வேலை செய்யுங்கள் என்றால், யார் செய்வார்கள்?

இதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்து ,முறையான பயிற்சி கொடுத்து ,படித்த வேலையில்லாத இளைஞர்களை அதிகப்படியாக கொண்டு வந்து, இவர்களுடன் பணியாற்ற வைத்தால் தான், இந்த பணியை குறிப்பிட்ட காலத்தில் விரைவாக செய்து முடிக்க முடியும். அது மட்டுமல்ல,

இவர்களுக்கு என்று ஒரு ஊதியத்தை நிர்ணயம் செய்து, அதை முடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பணி நிறைவான பணியாக, தமிழ்நாட்டில் செய்து முடிக்க முடியும் என்பதை தேர்தல் ஆணையம் புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *