பத்திரிக்கை சுதந்திரம் ஒரு சீப்பஸ்ட் அரசியலுக்கு வழிவகுத்து கொண்டிருக்கிறதா ? இது அரசியலில் தகுதியற்றவனுடைய வேலை.

அரசியல் இந்தியா உணவு செய்தி சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 07, 2024 • Makkal Adhikaram

அண்ணாமலையின் தோல்வி ஒரு ஆட்டை கொண்டு வந்து, அந்த ஆட்டை வெட்டி பிரியாணி போடுவது போன்று படத்தைக் காட்டி, அதை ஒரு செய்தியாக ஒரு பெரிய பத்திரிகை என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் நிறுவனம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் இதைவிட கேவலம் வேறு எதுவும் கிடையாது.இது ஒரு செய்தி என்று பத்திரிக்கையில் போடுவதற்கு கேவலமாக இருக்கிறது .மேலும்,

 அரசியல் முட்டாள்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எப்படி வேண்டுமானாலும் செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அதிகாரம், ஆட்சி நம்ம கையில் இருக்கிறது. இது போல் பத்திரிகையும் முட்டாள் தனமாக எழுதிக் கொண்டிருக்கிறான் என்றால் அதைவிட கேவலமான வேலை எதுவும் கிடையாது . நாட்டில் அரசியல் எதற்கு? ஏன்? என்று தெரியாமல் எல்லாம் கட்சியில் பேசிக் கொண்டிருப்பார்கள். அதையும் எழுதி மக்களிடம் காட்டி இதுதான் அரசியல் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலை தான் இந்த கார்ப்பரேட் ஊடக வேலை. இது தவறான வேலை.மேலும்,

 எந்த நோக்கத்திற்காக அரசியல் இருக்க வேண்டுமோ, எந்த நோக்கத்திற்காகஅரசியல் இருக்க வேண்டும். அதேபோல் இவர்கள் கட்சிக்கு எதற்கு வந்தார்களோ, அந்த வேலையை பார்க்க வேண்டும். அதேபோல்தான் எந்த வேலையை பத்திரிகைகள் கையில் எடுத்துள்ளதோ, அந்த வேலையைத்தான் நாம் பார்க்க வேண்டும். ஒரு கேவலமான, அநாகரிகமான வேலையை பத்திரிகைகள் பார்க்க கூடாது.

 மேலும் ஒருவனுடைய இன்றைய வெற்றி ,நாளை தோல்வி ,இன்றைய தோல்வி, நாளை வெற்றி. இந்த வெற்றியும், தோல்வியும்  அரசியலில் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. மக்களுக்கு என்ன செய்ய முடியும்? எதற்காக நாம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறோம்? அதைப்பற்றி பேசக்கூடிய ஆட்சியாளர்களோ ,அரசியல் கட்சியோ, எல்லோரும் யாருமே இல்லை. ஆனால் ஒருத்தரை, ஒருத்தர் விமர்சனம் செய்து விட் போட்டுக் கொள்வது, வாட்ஸ் அப்பில் செய்தி போட்டுக் கொள்வது, youtube இல் செய்தி போட்டுக் கொண்டிருப்பது, ஊடகங்களில் பிரஸ்மீட் கொடுத்துக் கொண்டிருப்பது, இதுவா அரசியல்? இதைவிட கேவலமான அரசியல், நாட்டில் வேறு எதுவும் இருக்க முடியாது.

மேலும், அது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு எதை செய்ய மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்? என்பதை சிந்திக்காமல் ஆயிரம், 500 க்கு ஓட்டு போட்டவனை வைத்து நாம் ஜெயித்து விட்டோம் என்று பேசிக் கொண்டிருப்பது ,அதைவிட கேவலம் எதுவும் இல்லை. அரசியல் தெரியாத ஒருவனிடம் அரசியலை பேசுவதும் நேரத்தை வீணடிக்கும் வேலை. கார்ப்பரேட் ஊடகங்கள் மக்களுக்கு நல்ல விஷயத்தை கொண்டு செல்லவில்லை என்றாலும், கேவலமான சீப்பஸ்ட் அரசியலை செய்யாமல் இருந்தாலே நல்லது தான். 

இப்போது ஜெயித்த  40 எம்பிகள் இவர்கள் என்ன மக்களுக்கு செய்து விடப் போகிறார்கள் ?அதை யாராவது சொல்ல முடியுமா ? இதையெல்லாம் இந்த மக்கள் சிந்திக்காத வரை ,இப்படிப்பட்ட கேவலமான அரசியல் தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் . அதனால், மக்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும் .வருங்கால இளைய தலைமுறைகள், இந்த அரசியலால் உங்களுக்கு என்ன பயன்? உங்களுடைய எதிர்கால கனவுகள் ?இதற்கெல்லாம் திமுகவின் அரசியல் என்ன செய்யப் போகிறது ? இதைப் பற்றி சிந்தியுங்கள் .

சோசியல் மீடியாக்களிலும், பத்திரிகைகளிலும் வாயிலே பேசி செய்து விட்டு போவதற்கு மக்கள் இவர்களை தேர்ந்தெடுக்கவில்லை. அதனால், ஆட்டை வெட்டி நீ பிரியாணி சாப்பிடுவதால்,இந்த தமிழ்நாட்டு  மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை .உன்  வயிற்றுக்கு தான் பிரயோஜனம் . அதனால் முட்டாள் தனமாக இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல், அரசியல் தெரிந்தவனிடம் காட்ட முடியாது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *