ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram
கேரள உயர்நீதிமன்றம் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஜனநாயகத்தை மதித்து மக்களின் உரிமையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்க கூடாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பிலும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும், கேரளாவில்
பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலுவா நகராட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் மலையாள மனோரமா நாளிதழ் மற்றும் அதன் ஆசிரியர், செய்தியாளருக்கு எதிராக ஆலுவாகுற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி மலையாள மனோரமா நாளிதழ் சார்பில் கேரளஉயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த கேரளஉயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பதரூதீன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிகைகள் விளங்குகின்றன. நாட்டின் அன்றாடநிகழ்வுகள், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்த செய்திகளைபொதுமக்களுக்கு தெரிவிப்பதில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்கு அளப்பரியது.
சுதந்திரத்தை மீறும் செயல்: இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499 மற்றும் பிரிவு 500-ன் கீழ் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராகதேவையற்ற அவதூறு வழக்குகளை தொடர்வது என்பது பத்திரிகை சுதந்திரத்தையும், செய்திகளை அறிந்து கொள்ளும் மக்களின்உரிமையையும் மீறும் செயல். இந்தவழக்கின் மூலமாக கீழமை நீதிமன்றங்களை எச்சரிக்க வேண்டிய சரியான தருணம் இது.
அவதூறு வழக்கு ரத்து:
பொதுவாக பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குஎதிரான அவதூறு குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கும்போது விசாரணை நீதிமன்றங்கள் குறிப்பாககுற்றவியல் நடுவர்கள் இனிவரும்காலங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த வழக்கில் பெண் நகராட்சிகவுன்சிலர் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக மலையாள மனோரமா, அதன் ஆசிரியர் மற்றும்செய்தியாளர் மீது ஆலுவா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளஅவதூறு வழக்கு தேவையற்ற ஒன்று என்பதால் ரத்து செய்யப்படுகிறது.
பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது என்பது கும்பல் ஆட்சியாகத்தான் பார்க்கப்படும். ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக கொள்கைகளின் சமநிலையை பராமரிக்க பத்திரிகை சுதந்திரமும், நாட்டின் முக்கியமான வளர்ச்சியை அறிந்து கொள்ளும் மக்களுக்கான உரிமையும் கைகோர்த்து செல்ல வேண்டும். அந்த பத்திரிகை சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிப்பது என்பது தனிப்பட்ட கும்பல் ஆட்சிக்கு வழிவகுத்து விடும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.