பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில ஆர்ஜிதம் செய்வதால் மனவேதனையில் கிராம மக்கள் .

அரசியல் உணவு செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

ஜூன் 20, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் பல விமான நிலையங்கள் இருந்தும் மக்களுக்கு மீண்டும் பரந்து ஒரு விமான நிலையம் தேவையா? என்பதுதான் முக்கிய கேள்வி? மேலும் இந்த விமான நிலையத்தால் அரசுக்கு வருமானம் .ஆனால் இங்கே பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்கள் எங்கே செல்வார்கள்? அவர்களுடைய வேதனை பற்றி மத்திய, மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் .

இந்த மக்களுக்கு விமான நிலையத்தால் எந்த பயனும் இல்லை .இவர்கள் விவசாய பூமியை நம்பியும், கால்நடைகளை நம்பியும், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள். இவர்களில் அல்லது இந்த சுற்று வட்டார பகுதிகளில் எத்தனை பேர் இந்த விமான நிலையத்தை அனுபவிக்க போகிறார்கள்? யாருமே இல்லை. ஆனால், இவர்கள் பரம்பரை ஆக வாழ்ந்த வீடு, நிலம், கோயில், குடும்பம், உறவுகள் இவை அனைத்தையும் நாங்கள் இழந்து விட்டு, எங்கள் சந்தோஷத்தையும் ,மகிழ்ச்சியையும், இழந்து விட்டு நாங்கள் எங்கே செல்வது? 

அதற்காக பல போராட்டங்களை தொடர்ந்து, இந்த கிராம மக்கள் முன்னெடுத்து வருகிறார்கள் .நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட எந்த அரசியல் கட்சிக்கும் ,இவர்கள் வாக்களிக்கவில்லை. அப்படியென்றால் இவர்களுடைய மனவேதனை பற்றி மத்தியிலாலும் பிஜேபி அரசும், மாநிலத்தில் ஆளுகின்ற திமுக அரசும், இந்த மக்களின் நிலைமையை பற்றி நினைக்காமல், வேதனைகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல், இல்லை என்றால் வேறு இடத்திற்கு அதை மாற்றுங்கள்.

அதுவும் இந்த பகுதி ஒரு நீர் பிடிப்பான பகுதி. அது மட்டுமல்ல, நஞ்சை நிலம் அதிகம் உள்ள பகுதி. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதையும் மத்திய மாநில அரசுகள் காதில் வாங்கியதா ?இல்லையா? என்பது தெரியவில்லை. மக்களுக்கான அரசாங்கம்  மத்தியில் பிஜேபியும் ,மாநிலத்தில் திமுகவும் நடத்துகிறது என்றால், பரந்தூர் விமான நிலையத்திற்கு நில ஆர்ஜிதம் செய்வதை நிறுத்த வேண்டும்.

 நாட்டில் அதானி, அம்பானியும் ஏழை எளிய நடுத்தர மக்களை வாழவைக்க போவதில்லை. அவர்கள் வாழ்வதை தான் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்த ஏழை ,எளிய மக்களின் வாழ்க்கை இந்த மண்ணோடும், மக்களோடும் அவர்கள் சந்தோஷத்தை அனுபவிப்பவர்கள்.

ஆனால், இங்கே பரந்தூர் விமான நிலையம் வந்தால், ஸ்டாலின் குடும்பம் கிடைக்கும் பல கோடிகளை சம்பாதிக்கும், அதானே அம்பானி குடும்பம் பல கோடிகளை சம்பாதிக்கும், ஆனால், இந்த ஏழை நடுத்தர மக்கள் அதனால் இழப்பது அவர்களுக்கு உடைய வாழ்வாதாரம், சந்தோஷம் எல்லாவற்றையும் இழந்து, நடுத்தெருவில் தான் நிற்பார்கள். 

மேலும், நீங்கள் கொடுக்கின்ற அந்த நஷ்ட ஈடு வைத்து மீண்டும் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு இடத்தை அவர்களுக்கு உங்களால் கொடுக்க முடியுமா? அல்லது அந்த நிம்மதியும், சந்தோஷத்தையும் கொடுக்க முடியுமா? ஏழையும் நடுத்தர மக்களையும் ,உங்களுடைய ஊழல் அரசியல் கேவலமாக்கி வருகிறது. இந்த மக்களுக்கு அரசியல் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் ஊடகங்கள் உங்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறது. அதை தான் பலமுறை சொல்கிறேன் .

இளைய தலைமுறைகள் நீங்கள் அரசியலையு,ம் அரசியல் கட்சியும் படிக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை இதே நிலைமைதான் கேள்விக்குறியாகும். தயவு செய்து நாம் படித்து விட்டோம், பட்டம் வாங்கி விட்டோம் என்று கர்வமாக இருக்காதீர்கள் .உங்களை மாடு, மேய்ப்பவன் கூட அரசியல் கட்சி பதவிகளில் வந்து ஏமாற்றி விடுவான். தயவுசெய்து இந்த உண்மைகள் எந்த பத்திரிகையிலும் வெளியிட மாட்டார்கள் .மக்கள் அதிகாரம் எப்போதும் மக்கள் நலனில் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *