பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தொடரும் ஊழல்! – பொதுமக்கள் புகார்.

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சாணாம்பட்டியில் பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும்,

.பால்வளத்துறை அதிகாரிகள் டி ஆர் ஓ  செல்வம், துணை மேலாளர் சிவகாமி,  செயல் அலுவலர்செல்வம் மற்றும்  ரவிச்சந்திரன்  பால் கூட்டுறவு சங்கத்தில் உள்ளகுளிர் ஊட்டப்பட்ட  பால்களை மற்றும் தீர்மானம் வரவு செலவு கணக்குகள் ஆய்வு செய்து , பால்வளத்துறை அதிகாரியிடம் நேரில் கேட்கும் போது,  இங்கு பால் கூட்டுறவு சங்கத்தில் 88 பயனாளிகள் உள்ளனர் .

தினமும் குறைந்தது1200லிட்டர் முதல் 1400 லிட்டர் வரை பால் வாங்கப்படுகிறது.  அரசு ஒரு லிட்டர் பாலின் விலை 34.25பைசா நிர்ணயம் செய்யப்பட்டு 1.25 பைசா மட்டும் அலுவலக பணியாளருக்கு மாத ஊதியம் கொடுக்கப்பட்டு, மீதம் 33 ரூபாய் பால் ஊற்றும் பயனாளிகளுக்கு  கொடுக்கப்படுகிறது. 

மேலும் சில்லறை விற்பனையில் விற்கப்படும் 7ரூபாய் லாபம்  பணத்தை  பயனாளிகளுக்கு தீபாவளி  போனஸ் ஆகவும் அலுவலக செலவிற்கும் எடுத்துக் கொள்வோம் என்று கூறினார். தவிர,சிவசாமி    பால் ஊற்றும் பயனாளி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் போது  பால் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பால் ஊற்றி வருகிறேன். 100 மேற்பட்டோர் பால் பண்ணையில்  2200 லிட்டர் முதல் 2000லிட்டர் வரை  பால்ஊற்றி வந்தனர்.

 தற்போது 88 பயனாளிகள்  மட்டுமே 1400 லிட்டர் மட்டுமே பால் ஊற்றி வருகின்றனர். கடந்த ஆண்டுகளுக்கு முன்பு பால் கறவை மாடு வாங்குவதற்கு அரசு உதவியுடன்  பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வந்துள்ளது. அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர்கள், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் வங்கியில் கடன் பெற்றுக் கொண்டு, ஒரு சில நபர்கள் பால்  கறவை மாடு வாங்காமல்,  வங்கியில் வாங்கிய கடன் செலுத்தி வருகிறார்கள்.  மேலும் பால் கூட்டுறவு சங்கத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது இதனை தட்டி கேட்பதற்கு யாரும் முன் வரவில்லை  என்று வருத்தத்துடன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *