ஜனவரி 02, 2025 • Makkal Adhikaram
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட நடிகர் எஸ்வி சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ் வி சேகருக்கு ரூபாய் 15,000 அபராதமும், ஒரு மாத சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த நடிகர் எஸ் வி சேகர் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் சிறை தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.