பெரியார் பிராமணர் எதிர்ப்பாளர் சுயநலவாதி அவ்வளவுதான் பிராமணர்களை எதிர்க்க முட்டாள்கள் கூட்டம் தேவைப்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட பெரியார் அவர்களெல்லாம் பகுத்தறிவாளர்களாக ஆக்கிவிட்டார்கள்.

அரசியல் ஆன்மீகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜனவரி 16, 2025 • Makkal Adhikaram

பெரியார் பிராமண எதிர்ப்பாளர். சுயநலவாதி இவ்வளவுதான் பெரியார். ஆனால் இதை வைத்துக்கொண்டு அரசியலில், சமூகத்தில் மக்களிடையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டம் தான் தி. க., திமுக ,அதிமுக, அதைப் பற்றி வெளியில் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அதை பேசவும் இல்லை. 

திமுக ஊதி, ஊதி பலனை போல வெடிக்கும் அளவுக்கு பெரிதாக்கிய வெடித்து விட்டார்கள் . திமுக நாடக அரசியல், பேச்சு அரசியல், கொள்கை அரசியல்ல! இவர்களுடைய கொள்கை எல்லாம் வாயில தான் இருக்கும். 

அந்த காலத்தில் பிராமண எதிர்ப்பு அதிகமாக இருந்தது. அதை வைத்து அரசியல் செய்தார்கள். அதுவும் எப்படி என்றால், பெரியார் அந்த காலத்தில் ஒரு வழக்கறிஞர். இவரால் பிராமணர்களை எதிர்த்து ஒரு வழக்கு கூட வெற்றி பெற முடியவில்லை. இவனுங்களை எதிர்ப்பதற்கு என்ன வழி என்று கிரிமினலாக யோசித்தவர் தான் பெரியார். இதுதான் உண்மை. 

இந்த எதிர்ப்பு அந்த காலத்தில் பிராமணர்கள் செய்த கொடுமைகள், அநியாயங்கள், தீண்டாமைகள் இதற்கு ஒத்து போனது. அது தேவையாகவும் இருந்தது. பெரியாரின் சுயநலம், அக்காலத்தில் இருந்த கொடுமைகளுக்கு அது ஒரு போராட்டமாக அமைந்துவிட்டது. அதை வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.கைப்பற்றியவுடன் பெரியாரை தலைவராக, பிறகு கடவுள் ஆக்கி வழிபட்டு கொண்டார்கள். இதுதான் உண்மை. இதில் பெரியார் ஒழுக்கமானவர், நேர்மையானவர்  என்பதே கிடையாது. அவர் எப்படியும் பேசுவார், எப்படி பேசினாலும் பெரியார் ஆசாமிகள் அவரை சாமி ஆக்கிவிட்டார்கள். இது ஒரு சிம்பிளான விஷயம்தான். இதற்கு முன்னால் கூட இந்த செய்தியை இணைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். 

இதற்காக மண்டையை உடைத்துக்கொண்டு, சீமான் மாதிரி ஆவேசமாக கத்த வேண்டியது இல்லை. அதே மாதிரி திமுக கட்சியினர் சொல்வது போல் அதிலும் துரைமுருகன் பெரியாரை இழிவாக பேசினால் அவர்களுடைய பிறப்பு சந்தேகத்திற்குரியது. இது எல்லாம் நீங்கள் அரசியலில் கொள்ளை அடிப்பதற்கு திசை திருப்பவும் வார்த்தைகள் ,இந்த வார்த்தை ஜால விதைகளை வேறு எங்கேயாவது வைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் கதை ஓட்டியதை எல்லாம் அரசியல் தெரியாத முட்டாள்களிடம் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்தவனிடம் ஓட்ட முடியாது பின்னி பெடல் எடுத்து விடுவார்கள். சீமான் பேசியது உண்மை. பெரியார் பேசியதும் உண்மை பத்திரிகையில் வெளிவந்ததும் உண்மை. அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது. 

பெரியார் வாழ்ந்த காலம் மக்களிடம் அறியாமை அதிகமாக இருந்த காலம். ஒரு கிராமத்தில் சோறு கூட மதிய வேளையில் பார்த்திருக்க மாட்டார்கள். வெள்ளையர்கள் அடிமைத்தனமும், பிராமணர்களின் ஆதிக்கமும் ஓங்கி இருந்த காலம் அதை மறுக்க முடியாது. ஆனால் அதைக் கொண்டு வந்து தற்போது வாழுகின்ற மக்களை முட்டாளாக்கி, அரசியல் செய்வது இன்னும் மக்களை முட்டாளாக்கும் வேலை தான் இது.இந்த காலத்திற்கு பிராமணர்கள் எதிர்ப்பு அரசியல் ஒத்து வருமா? பிராமணர்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறிவிட்டார்கள்.

இந்த பெரியார் குப்பையை வைத்து தமிழக மக்கள் இவ்வளவு காலம் ஏமாந்தது மக்களின் முட்டாள்தனம். இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *