
தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து இந்த டிராமா அரசியல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் இந்த டிராமா அரசியலில் இருந்து வெளிவர வேண்டும். மக்களைக் காப்போம் என்று சொல்லிவிட்டு, உங்களை காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை காத்து கொள்ள தான் அரசியலுக்கு வருகிறார்கள். மக்களை காக்க யார் வருகிறார்கள்? மக்களை மக்கள் காத்துக் கொண்டால் தான் உண்டு.
ஆனால், மக்களை அரசியலில் அதிகாரம் வந்தவுடன் மிதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் உண்மையான அரசியல். மேலும்,திமுகவும் இதுபோல் ஸ்டிக்கர் வாசகங்களை நான் சொல்லுகிறார்கள். இந்த ஸ்டிக்கர் வாசகங்களை மக்களிடம் அரசியல் கட்சி புரோக்கர்கள், பேசிக் கொண்டிருப்பார்கள்.

இதை உண்மை செய்திகள் ஆக கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்,மக்களிடம் பத்திரிக்கை, தொலைக்காட்சி என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும். மேலும்,மக்கள் விழிப்புணர்வு அடையாத வரை, இந்த அரசியல் கட்சிகள் உங்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கும். தவிர,எடப்பாடி பழனிசாமி சொன்னது போல்!

மக்களை காத்தால் (செய்தால் )நீங்கள் கார்ப்பரேட் அரசியல்வாதியாக ஆயிரம் கோடி, ரூ 500 கோடி என்று ஊழல் செய்ய முடியாது. மக்களுக்கு உண்மையாக உழைத்தால் நீங்கள் கருப்பு பணத்தைக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியாது. ஒவ்வொரு அரசியல் கட்சி கூட்டத்திற்கும் பணம் கொடுத்து கூட்டத்தை கொண்டு வர முடியாது. மேலும்,
நீங்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டால்,இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை,தொலைக்காட்சிகளில், உங்களுடைய பேச்சை விளம்பரப் படுத்த எதிர்பார்க்க மாட்டீர்கள். உண்மையை சொல்லும் ஊடகங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

பொய்யை சொல்லும் ஊடகங்களுக்கும் , ஜால்ரா அடிக்கும் ஊடகங்களுக்கும், காப்பி டூ பேஸ்ட் செய்யும்,ஊடகங்களுக்கும்,சலுகை,,விளம்பரங்களை கொடுக்க மாட்டீர்கள். நாட்டில் அரசின் செய்தித் துறை ஆளும் கட்சியின் அரசியல் கட்சி அலுவலகமாக செயல்படாது.

இது தவிர, ரவுடிகள்,மோசடி பேர்வழிகள், ஊரை ஏமாற்றுபவர்கள்,உடம்பை காட்டிக் கொண்டிருப்பவர்கள், அரசியல் பந்தா காட்டுபவர்கள், இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு அரசியல் கட்சிகளில் பதவி, பொறுப்பை வாங்கிக் கொண்டு பதவிக்கு அலைய மாட்டார்கள்.மேலும், அதாவது

மக்களை ஏமாற்ற அரசியலுக்கு வர மாட்டீர்கள். கட்சி கொடி பிடித்துக் கொண்டு,கோஷம் போட்டுக் கொண்டு, அரசியல் வசனங்களை பேசிக்கொண்டு,இதுதான் அரசியல் என்று அரசியலுக்கு வரமாட்டீர்கள். இவை அத்தனைக்கும் காரணம் மக்கள் அரசியல் தெரியாத ஏமாளிகளாக இருப்பது தான். (உங்களுக்கு )அரசியல் கட்சியினருக்கு,
மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை உங்களுக்கு லாபம்.மக்கள் விழித்துக் கொண்டால் அவர்களுக்கு லாபம். காலத்தின் கையில் மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை எது?பொய் எது? என்று தெரியாமல் ஏமாந்த மக்கள், இவர்களிடம் மிதிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் எப்போது உண்மையை நோக்கி, நேர்மையை நோக்கி, சத்தியத்தை நோக்கி, தர்மத்தை நோக்கி, நடக்கிறார்களோ, அன்றே இப்படிப்பட்ட அரசியலுக்கு வேலை இல்லை. ஒருவரை, ஒருவர் குறை சொல்லி, விமர்சனம் செய்யும் அரசியல் தேவை இல்லை.

குண்டர்கள்,அடியாட்கள் எல்லாம் அரசியல் கட்சியினர் என்று மக்களை ஏமாற்ற தேவை இல்லை. மேலும்,
மக்கள் இவரை விட, அவர் பரவாயில்லை என்று நினைக்கத் தேவையில்லை. இது அரசியல் கட்சியினருக்காக,அரசியல் தெரிந்தவர்களின் குரல்.