நாட்டில் அரசியல் கட்சிகள்! அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றுவது அரசியலா? – மக்கள் அதிகாரம்.

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் மக்களை ஊடகங்கள் மூலம் செய்திகளை வெளியிட்டு, தொலைக்காட்சி மைக்குகளில் பேசி விட்டு போவது இன்றைய ஷோ காட்டும் அரசியலா?

பேசுபவன் யெல்லாம் தன்னை பெரிய அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டு, அந்த நினைப்பிலே பேசிக் கொண்டிருக்கிறான். மேலும், அதே கற்பனையில் கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகைகளும், நிருபர்களும் அதை கற்பனையில் அவர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஏமாளி யார் என்றால்? அதை வாங்கி படிப்பவன்,அந்த செய்திகளை படித்து ஏமாறும் அப்பாவிகள், இவர்கள்தான் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியில் மகன் சண்டை ஓய்ந்த பிறகு இப்போது மகள் வந்திருக்கிறார்.

இதற்கு அர்த்தம் தெரியாத பத்திரிகைகளும்,இதைப் பற்றி மக்களிடம் எழுத வேண்டிய அவசியம் என்ன? ஒரு பத்திரிக்கை மற்றும் நிருபர்கள் கூட,இவர்கள் குடும்ப சண்டையை வன்னிய சமுதாயத்திற்கு சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

ஒருவேளை இதுதான் அரசியல் என்று வன்னியர் சமுதாயம் நினைக்கட்டும் என்று மாற்றி, மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களா? தவிர,இதற்கு எடுப்பு வேலை செய்பவன்,எல்லாம் இந்த வன்னிய சமுதாயத்தை அப்படியே தூக்கி நிறுத்துபவர்களா?

40 ஆண்டு காலமாக இந்த இட ஒதுக்கீடு பிரச்சனையை வைத்து அரசியல் செய்து ஏமாற்றி விட்டார்கள். இன்னும் ஏமாற்றுவதற்கு வேறு ஏதாவது வழி இருக்குமோ என்று தேடிக் கொண்டிருக்கிறார்களா? மேலும்,

தர்மபுரியில் தோற்றது போல் தமிழ்நாடு முழுவதும் இவர்கள் தோற்க தோற்கடிக்க வேண்டும். அப்போதுதான் வன்னிய சமுதாயத்தை பற்றி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஒரு பய உணர்வு இருக்கும். ஏனென்றால் இந்த சமுதாயத்தை ஏமாற்றி பல லட்சம் கோடி ராமதாஸ் குடும்பம் இன்னைக்கு சம்பாதித்து விட்டது.

ஆரம்பத்தில் ராமதாஸ் குடும்ப பின்னணி சொத்து வரலாறு எல்லாமே வன்னியர் சமுதாயத்திற்கு தெரியாதது ஒன்னும் இல்லை. ஆனால் எல்லாமே அரசியலுக்கு வந்து இந்த சொத்துக்கள் சம்பாதித்தது. இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளை வைத்து ஏமாற்றுகிற அரசியல் பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் எத்தனை காலம் எம்ஜிஆர் பாட்டில் சொல்வது போல எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த அரசியல் கட்சிகள் இந்த நாட்டினிலே.

அந்த ஏமாற்று வேலைக்கு மக்களின் ஆர்வத்தையும் உணர்ச்சியும் தூண்டுகின்ற ஒரு விளம்பரத்தை காட்டிக் கொண்டிருக்கிற தொலைக்காட்சி பத்திரிகைகள் தான் இந்த விளம்பர ஏஜென்ட்கள். இப்போதாவது மக்கள் இந்த அரசியலைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களுக்காக தன்னுடைய உழைப்பை கொடுக்காதவன் பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறான் அதனால் எவன் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் ஆனால் வாக்களிக்காதீர்கள். அந்த வாக்கு யார் மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒருவன் பணமே கொடுக்கவில்லை என்றாலும் அவனுக்கு வாக்களியுங்கள்.

இந்த பத்திரிகை தொலைக்காட்சிகளில் இவர்கள் பேசுகின்ற வார்த்தைகளை நம்பி வாக்காளர்கள் ஏமாறக்கூடாது வாக்காளர்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவர்கள் அரசியல் நடிகர்கள், அவர்கள் சினிமா நடிகர்கள் இரண்டு பேரும் பேசுகின்ற டயலாக் ஒன்றுதான்.

அதற்கு திரைக்கதை, வசனம், எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் போலி விளம்பரங்களையும், போலியான கருத்துக்களையும், உணர்ச்சியை தூண்டக்கூடிய கருத்துக்களையும், கண்டு, படித்து ஏமாறாதீர்கள்.

அரசியல் மக்கள் தீர்மானிக்கக் கூடியது. பணமோ, பொருளோ. வெத்து பந்தாவோ இவர்களுடைய கார்களும், இவர்கள் வருகின்ற கூட்டமோ,இவர்களுடைய கட்சி கொடிகளோ,பார்த்து பிரமித்து தீர்மானிக்கக் கூடியதாக ஒவ்வொரு வாக்காளரும் முடிவு எடுக்கக் கூடாது. அது உங்களுடைய சிந்தனையில் சிந்தித்து இவர் மக்களுக்கு என்ன செய்தார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?இவருடைய அரசியல் சேவை என்ன? சமூக நோக்கம் என்ன?

இது தெரியாமல் எப்படிப்பட்ட கட்சியாக இருக்கட்டும் எப்படிப்பட்ட நடிகராக இருக்கட்டும் மக்கள் அவர்களுடைய சேவையை தீர்மானித்து வாக்களியுங்கள் பேச்சை நம்பி வாக்களித்தால் தொடர்ந்து அரசியல் என்பது மக்களுக்கு ஏமாற்றும் தான் அரசியல்வாதிகள் பேசுவதற்கும் செய்வதற்கும் சம்பந்தமில்லை 50 ஆண்டுகால திராவிட அரசியல் அது தான்.

இவருக்கு அவர் பரவாயில்ல அவருக்கு இவர் பரவாயில்லை இப்படித்தான் இந்த அரசியல். இல்லை இவர் இதற்கு தகுதியானவர் இவர் மக்களுக்கு இந்த சேவை செய்திருக்கிறார் இவர் நேர்மையானவர் ரவுடிசம் இல்லாதவர் இவரை நம்பி வாக்களிக்கலாம் என்று மக்கள் எப்பொழுது தன்னுடைய வாக்குகளை தீர்மானிக்கிறார்களோ, அப்பொழுதுதான் தகுதியான அரசியல்வாதிகள்,

மக்களுக்கான அரசியல் என்பது மக்கள் உறுதியேற்று செயல்படுத்தாத வரை அரசியல் என்பது ஏமாற்றம்,தொடர்ந்து இந்த ஏமாற்றம் இருந்து கொண்டு தான் இருக்கும்.இது ஏமாந்த மக்களின் குரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *